moondru mudichu serial promo update 29-10-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் புனிதா நந்தினியிடம் எதுக்காக நீ கிச்சனுக்கு போன, இங்கதான் சின்ன விஷயமா இருந்தாலும் பெருசா ஆகிடுவாங்க இல்ல என்று கேட்க, கொஞ்சம் கூட இவங்க யாருமே திருந்தல இந்த வீட்ல நீ எப்படி அக்கா இருக்க என்று கேட்கிறார். உடனே அம்மாச்சி மற்றும் சிங்காரம் இருவரும் புனிதாவை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு நந்தினுக்கு ஆறுதல் சொல்லுகின்றனர். நம்ம சீர் வச்சிட்டு கிளம்பிடலாம் என அம்மாச்சியும் சிங்காரமும் முடிவெடுக்க அவரு வந்துடட்டும் என சொல்ல அவர் வரும்போது வரட்டுமா நாங்க கொடுக்கறது கொடுத்துவிடு என்று சொல்ல நான் வேணும்னா திருப்பியும் போன் பண்ணவா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா என்று சொல்ல அம்மாச்சி நம்ம வாங்கிட்டு வந்ததெல்லாம் முதல்ல சாமி படத்து முன்னாடி எடுத்து வைங்க சாமி கும்பிடலாம் என சொன்ன சிங்காரம் எல்லோத்தையும் எடுத்து வைக்கிறார். அம்மாச்சி மோதிரத்தையும் எடுத்து வைங்க என்று சொல்ல எடுத்து வைத்துவிட்டு சிங்காரம் கருப்பசாமி போட்டோ முன் சாமி கும்பிட்டு விட்டு கொடுக்க நந்தினி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி தட்டை வாங்கி கொள்கிறார்
புனிதா கிளம்பலாம் என்று சொல்ல, இருடி டீ போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொல்ல அந்த கிச்சன்ல போய் நீ எங்களுக்கு திருப்பி டீ போட வேணாம் பேசினதே மனசும் வயிறு நிறைஞ்சிடுச்சு என்று சொல்ல,சிங்காரம் புனிதாவை கண்டித்து விட்டு சரி வாங்க கிளம்பலாம் என்று கிளம்பி வருகின்றனர். வெளியில் வந்து நந்தினி வழியனுப்ப சூர்யா காரில் வந்த இறங்குகிறார். உடனே சிங்காரம் தம்பி கிட்ட யாரும் எதையும் சொல்லக்கூடாது என்று சொல்ல அனைவரும் அமைதியாக நிற்கின்றனர் பிறகு சூர்யா எதுக்கு எல்லோரும் வெளியே நின்னுகிட்டு இருக்கீங்க என்று கேட்க சும்மா வீடு சுத்தி பாக்க வந்தோம் என சொல்லி சமாளிக்கின்றனர். சரி அப்போ எதுக்கு பையெல்லாம் என கேட்க அனைவரும் தயங்குகின்றனர்.முதல்ல உண்மை என்னன்னு சொல்லுங்க என சூர்யா கேட்கிறார். நீயாவது உண்மையை சொல்லு நந்தினி நான் பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தாலும் எல்லாரும் கிளம்பி இருப்பாங்க அப்படிதானே இப்ப எதுக்கு வீட்டை விட்டு கிளம்புறாங்க யார் என்ன சொன்னாங்க என்று கேட்கிறார்.
உடனே அனைவரும் அமைதியாக இருக்க ரஞ்சிதாவிடம் நீ உண்மையை மட்டும் தானே சொல்லுவ என்ன ஆச்சு ரஞ்சிதா என்று கேட்க சுந்தரவல்லி அம்மா தான் எங்களை திட்டிட்டு வீட்டை விட்டு வெளியே போக சொன்னார்கள் என்று சொல்லிவிட சூர்யா அனைவரையும் உள்ளே வரச் சொல்லுகிறார். குடும்பத்தினர் தயங்கி நிற்க உள்ள கூட்டிட்டு வா நந்தினி என்று சொல்ல நீங்க உள்ள கூப்பிடுறீங்க ஆனா இங்க வேற மாதிரி ஒன்னு நடக்குது புனிதா கிச்சனுக்கு போனதையே ரொம்ப கஷ்டப்படுத்தி பேசினாங்க பூஜை ரூமுக்கு போனா அவ்வளவுதான் என்று சொல்ல உடனே புனிதா மற்றும் ரஞ்சிதா இருவரும் இதுக்கு மேல ஏதாவது பேசுனா எங்களுக்கு தாங்குற சக்தி கிடையாது என்று சொல்ல, இப்போ எல்லாரும் என்ன அசிங்க படுத்துறீங்களா? யாரு என்ன சொல்றாங்கன்னு நான் பாத்துக்கிறேன் உடனே சிங்காரம் வந்த வேலை முடிஞ்சிடுச்சு நாங்க பார்த்துட்டோம் வரிசை வச்சுட்டோம் கிளம்பி விடுவோம் என்று சொல்ல உங்க எல்லார்கிட்டயும் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் என் மேல உங்களுக்கு மரியாதை இருக்கா இல்லையா என்று கேட்கிறார்.
என்ன அம்மாச்சி என்று கேட்க என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க என்று சொல்ல நந்தினி இடம் அனைவரையும் கூட்டிட்டு பூஜை ரூமுக்கு போ என்று சொல்லுகிறார் மறுபக்கம் அருணாச்சலத்திற்கு சூர்யா போன் போட்டு நந்தினி ஓட ஃபேமிலிக்கு டிரஸ் வாங்கி இருக்கேன் உங்க கையால கொடுக்கணும் டாடி வரீங்களா என்று கேட்க வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் என போனை வைக்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி அசோகன் மாதவி சுரேகா என்று நால்வரும் சூர்யா அவர்களை பூஜை ரூமுக்கு அழைத்த விஷயத்தை பற்றி கோபமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். உடனே சுந்தரவல்லி இன்னைக்கு அவர்களை எப்படி துரத்துறேன் பாரு என்று கோபப்பட்டு வர மாதவி தடுத்து நிறுத்துகிறார். இப்போ அவங்க சூர்யா கொடுக்கிற சப்போர்ட்ல தான் இருக்காங்க இப்ப நீங்க ஏதாவது பேசினீங்களா அவன் உங்களை தான் ரொம்ப அசிங்க படுத்துமா கொஞ்ச நேரத்துக்கு அமைதியா இருங்க என்று சொல்லுகிறார். இப்போ நம்ம என்ன பேசினாலும் அவன் அந்த வேலைக்காரங்க குடும்பத்துக்கு முன்னாடி அம்மாவை அசிங்கப்படுத்துவா அதுக்காக தான் அமைதியா இருக்க சொல்ற அந்தப் குடும்பம் போகட்டும் நம்மளோட டார்கெட் நந்தினி தான் என்று சொல்ல முன்னாடி இருந்து அப்படி தான் சொல்லிக்கிட்டு இருக்க ஆனா ஒன்னும் நடக்கல என்று சொல்லுகிறார்.
அவங்க போகட்டும் அதுக்கப்புறம் அந்த நந்தினி நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்டா அதுக்கு அப்புறம் அவ குடும்பம் இங்க வராது என்று சொல்லி அசோகனுக்கு என்ன நடக்குதுன்னு பாருங்க என அனுப்பி வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் அருணாச்சலமும் வந்துவிடுகிறார். எனக்காக எதுக்குடா வெயிட் பண்ணிக்கிட்டு நீயே கொடுத்திருக்கலாமே என்று சொல்ல நீங்க வந்தா தானே டாடி என்று சொல்ல சிங்காரமும் சின்னையா சொல்றதும் கரெக்ட் தானே என்று சொல்லுகிறார். சரிங்க டாடி எல்லாருக்கும் டிரஸ் வாங்கி இருக்கேன் உங்க கையால எடுத்து கொடுங்க என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா புடவை எடுத்துக் கொடுக்க அம்மாச்சி நந்தினி இடம் அது வெறும் புடவை இல்லா உன் மேல வச்சிருக்க பாசம் என்று சொல்லுகிறார். மறுபக்கம் மாதவி இப்படியே நம்ம விட்டோம்னா இந்த புது வாழ்க்கைக்கு அவர் பழகிடுவார் என்று சொல்லுகிறார் மறுபக்கம் சூரியா நந்தினி உட்கார சொல்ல நந்தினி வேண்டாம் என சொல்லுகிறார் பிறகு வலுக்கட்டாயமாக உட்கார வைத்து சாப்பாடு பரிமாறுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…