நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியின் சமையலை பாராட்டி பேச கல்யாணம் இவங்க ரெண்டு பேரும் இதே சந்தோஷத்தோடு இருக்கணும் என்று சொல்லி நினைக்கிறார். பிறகு சூர்யா நந்தினியை பாராட்டி விட்டு வேலைக்கு கிளம்ப சுந்தரவல்லி அருணாச்சலம் சாப்பிட்டு கிளம்பி விடுகின்றனர். உடனே நந்தினி சூர்யா சாப்பிட்ட தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிட சுந்தரவல்லி கவனித்து விடுகிறார். என்னாச்சு என்று கேட்க சுந்தரவல்லி சென்று விட அருணாச்சலம் பார்த்து சந்தோஷப்பட்டு அவரும் சென்று விடுகிறார். காரில் வரும்போது எதற்கு அமைதியா இருக்க சிரிச்சி சந்தோஷமா இரு என்று சொல்லுகிறார். இப்ப நம்ம எங்க போய்கிட்டு இருக்கோம் என்று கேட்க அஞ்சு நிமிஷத்துல போயிடலாம் என்று சொல்லி துணி கடைக்கு அழைத்து வருகிறார். எதுக்காக இப்போ துணி கடைக்கு வந்திருக்கோம் என்று கேட்க இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கு 50 பர்த்டே வருது அதுக்காக டிரஸ் எடுக்க வந்திருக்கும் வாங்க போகலாம் என்று அழைத்துச் செல்கிறார் போகலாம் என்று அழைத்துக் கொண்டு உள்ளே வருகின்றனர்.

இருவரும் சேர்ந்து ஒவ்வொரு டிரஸ்சாக எடுத்து வைத்து பார்த்து எடுக்கின்றன. டிரஸ் எடுத்துக்கொண்டு அங்கிருந்த ஒருவரும் கிளம்பி விட, கிச்சனில் நந்தினி கல்யாணத்து இடம் சுந்தரவல்லி கவனித்த விஷயத்தை சொல்லி பயப்படுகிறார். அவங்க சத்தம் போட்டு இருந்தா கூட அமைதியா இருந்திருப்ப ஆனா அமைதியா போனதுதான் என்ன பண்ண போறாங்களோன்னு தெரியல என்று சொல்லுகிறார். இதுவரைக்கும் கோபப்பட்டவங்க இன்னைக்கு மட்டும் ஏன் அவங்க இத சொல்லல அவங்க ஏதோ ஒரு திட்டம் போடுறாங்க யாரையும் நம்பாதீங்க உங்க எல்லாரும் விஷ பாம்புங்க உஷாரா இருக்கணும் என்று சொல்லுகிறார்.

சூர்யாவும் விக்ரமும் காரில் பேசிக்கொண்டு வருகின்றனர். என் தங்கச்சியை நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு என்று சொன்ன ஏண்டா அப்படி சொல்ற நான் இப்ப குடிக்கிறது கூட கிடையாது என்று சொல்ல, நான் அத சொல்லலடா ஏற்கனவே ஆன்ட்டி நந்தினி பாடா படுத்துவாங்க இப்போ நீ பொறுப்பு கொடுத்து இருக்கிறது அவங்களுக்கு எரியிற நெருப்புல என்ன ஊத்துன மாதிரி நீ உஷாரா கவனிக்கணும் என்று சொல்லுகிறார். வீட்டுக்கு சுந்தரவள்ளியும் அருணாச்சலம் வந்தவுடன் நேராக மாதவி ரூமுக்கு சுந்தரவல்லி வருகிறார். எங்கம்மா போயிருந்தீங்க என்று கேட்க இந்த வீட்ல இருக்குற ஒரு விஷ செடிய புடுங்கி போறதுக்கு திட்டம் போட்டுட்டு வருவேன் என்று சொல்லுகிறார்.

இந்த வீட்டுக்கு மருமகளா இருக்குறதுக்கும் கம்பெனியோட சிஇஓ ஆக இருப்பதற்கும் எந்த தகுதியும் கிடையாது என்று சொல்லுகிறார் இது மட்டும் இல்லாமல் என்ன தைரியம் இருந்தால் அவ சூர்யா சாப்பிட்ட தட்டில் சாப்பாடு இருப்பா என்று சொல்ல, அப்படி சாப்பிட்டு இருந்தா மனசளவுல புருஷனை நேசிக்கிறாங்கன்னு அர்த்தம் என்று அசோகன் சொல்ல இதை எப்படியாவது தடுக்கணும் என்று பேசுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி போல் புடவையை கட்டிக் கொண்டு வந்து நடக்க சுந்தரவல்லி கடுப்பாகிறார். எல்லாமே தாய் கொடுத்தால் தான் அவங்க கொடுத்த ஐடியா தான் இது என்று சொல்ல நந்தினி அருணாச்சலம் என இருவரும் சிரிக்கின்றனர்.

மறுபக்கம் அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் நீதான் அவளை வீட்டு வேலைக்காரியா பார்க்கிறேன் சூர்யா அவளை பொண்டாட்டியா பார்க்கிறான் என்று சொல்லுகிறார். நந்தினி கல்யாணத்திடம் உங்களுக்கு மட்டும் தான் மீட்டிங் இதுல என்ன பிரச்சனை நடக்கப் போவதோ தெரியல எனக்கு அதை பத்தி தான் பயமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க சூர்யா கிளம்பி கீழே வருகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial promo update 25-12-25
jothika lakshu

Recent Posts

விரைவில் தொடங்க இருக்கும் ஜோடி ஆர் யூ ரெடி.. வெளியான ப்ரோமோ வீடியோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…

17 hours ago

ஜெயலர் படம் குறித்து பேசிய ராஜகுமாரன்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…

17 hours ago

மங்காத்தா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

18 hours ago

ரவியை காதலிக்கும் நீத்து, கடுப்பான சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…

20 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

20 hours ago

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

2 days ago