moondru mudichu serial promo update 25-11-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் இன்னுமா அந்த பலகையை யாரும் பார்க்காமல் இருப்பாங்க என்று சொல்ல சூர்யா சார் பாக்காம இருந்தா கூட பரவால்ல ஆனா அந்த ராட்சசிங்க பாத்துட்டா அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு சரி நம்ம சமைக்க ஆரம்பிக்கலாம் என்று பேசிவிட்டு அசோகனிடம் கேட்க அவர் மேலிருந்து மாதவி இடம் சொல்ல நான் லிஸ்ட் அனுப்பி இருக்கேன் பாரு என்று சொல்லி மாதவி மேலே இருந்து கீழே பலகையை இறக்கி விட கல்யாணம் மற்றும் நந்தினி இருவரும் அதிர்ச்சியாகின்றனர். பிறகு மூவரும் கீழே இறங்கி வந்து நின்று விட்டு சுந்தரவல்லி வழக்கம்போல் நந்தினியை கோபப்பட்டு திட்டி அசிங்கப்படுத்துகிறார். இப்பவாவது என் குடும்பத்தையே என் பையனையும் விட்டு ஒழிஞ்சி போ என்று திட்டி விட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் அசோகன் சுந்தரவல்லிக்கு போன் போட்டு நீங்க சொன்ன மாதிரி 10 லட்சத்தை பேங்க்ல இருந்து எடுத்துட்டேன் என்று சொல்ல, அந்தப் பணத்தை நேரா எடுத்துக்கிட்டு போய் கம்பெனியில ஒரு கவர்ல வச்சு டேபிள் டிராவில் வையுங்கள் விவேக் வருவான் அவன் வந்த உடனே அந்தப் பணத்தை என்கிட்ட எடுத்துக்கிட்டு வந்து கொடுக்கச் சொல்லு என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். மறுபக்கம் சூர்யா நந்தினியை நினைத்தும் நந்தினி சூர்யாவை நினைத்தும் கண்கலங்குகின்றனர். சூர்யா ரூமுக்குள் மாதவியும் சுரேகாவும் வர, நந்தினி என்று சூர்யா கத்தியவுடன் அவ இங்க இல்லை என்று சொல்ல உடனே சூர்யா கோபப்பட்டு என்னென்ன முட்டாள் ஆக்க போகிறீர்களா என்று கேட்கிறார்.
உங்க எல்லார் பத்தியும் எனக்கு தெரியும் அதே மாதிரி நந்தினியை பத்தியும் எனக்கு தெரியும் நீங்க தான் அவளை ஏதோ பண்ணி இருக்கீங்க அந்த நந்தினியை என்ன பாடு படுத்துனீங்கன்னு எனக்கு தெரியாதா டாடி இப்ப இல்ல, நானும் இப்படி எழுந்துக்காம இருக்க இந்த நிலைமையை நீங்க பயன்படுத்துகிறீர்களா? அது எப்படி எல்லார் போனும் எப்படி சுவிட்ச் ஆஃப்ல இருக்கும் கல்யாணம் எப்படி ஊருக்கு போவான் டாடி எப்ப பாத்தாலும் மீட்டிங்களே இருப்பாரா நந்தினி போன் ஏன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு இது எல்லாத்துக்கும் உங்ககிட்ட பதில் இருக்கா என்று கேட்க இதுக்கெல்லாம் ஒரே பதில் தான் உன் கால் சரியானதுக்கப்புறம் நீயே போய் அவளை வீட்டில பார்த்து கூட்டிட்டு வா என்று சொல்லிவிட்டு போக போங்க எனக்கு கால் சரியாகட்டும் உங்களுக்கு அப்புறம் இருக்கு என்று சொல்லிவிட்டு மீண்டும் நந்தினி என கூப்பிட சத்தம் கேட்ட நந்தினி படிக்கட்டில் ஏறப்போக சுந்தரவல்லி குரல் கொடுத்த உடன் பின்னால் வந்து விடுகிறார்.
ஆபீசுக்கு வந்த அசோகன் சுந்தரவல்லி சொன்னது போல பணத்தை கவரில் வைத்து விட்டு என் டேபிள் மேல பில் போட்ட கவர் வச்சிருக்க அதை நீ அத்தை கிட்ட கொடுத்துடு என்று அதை நீங்களே கொடுத்திருக்க வேண்டியது தானே என்று சொல்ல அத்தை தான் சொன்னாங்க என்ற சொல்ல விவேக்கும் சரியென சொல்லுகிறார் பிறகு உள்ளே வந்து அசோகன் சுந்தரவல்லிக்கு போன் போட்டு நீங்க சொன்ன மாதிரி செஞ்சிட்டேன் என்று சொல்லி பேசுகிறார். அவன் அங்க இருந்து எடுத்துட்டு கிளம்பற வரைக்கும் நீங்க அங்கேயே இருங்க அவன் எடுத்துட்டு கிளம்பின உடனே எனக்கு போன் பண்ணி சொல்லுங்க என்று சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறார்.
கோவிலுக்கு வந்த நந்தினி என்னை எதுக்கு இப்படி பிரச்சனை மேல பிரச்சனை கொடுத்து வதைச்சுக்கிட்டு இருக்க இந்த வீட்டுக்கு வந்த நாளா என்ன கண்கொத்தி பாம்பா திட்டுனாங்க இருந்தாங்க ஆனா இப்பதான் கொஞ்ச நாளா சூர்யா சார் மேல ஒரு அன்பும் அபிப்ராயமும் வந்திருக்கு அவர புரிஞ்சுகிட்டு அவர் கூட வாழனும்னு ஆசை இப்பதான் வந்தது ஆனால் அதுக்குள்ள நீ அவரை படுக்க வச்சுட்ட. அதுவும் இல்லாம ஒரே வீட்ல இருந்துகிட்டு அவரால் என்னையும் என்னால் அவரையும் பார்க்க முடியாத மாதிரி பிரிச்சி வைக்கிறாங்க நீ எனக்கு சாதகமா இருக்க மாட்டியா சூர்யா சார் என்ன கூப்பிடும்போது எல்லாம் என் உடம்பு நடுங்குது. உனக்கு சக்தி இருக்குறது உண்மை என்றால் உன்ன கும்பிடுவது உண்மையென்றால் விடியரதுக்குள்ள எப்படியாவது அவரை என்ன பாக்க வை இல்லன்னா எல்லாரும் ஆசைப்படுற மாதிரி என்னை வீட்டை விட்டு அனுப்பி விடு அதுவும் இல்லன்னா இந்த உலகத்தை விட்டு அனுப்பிவிடு இது மாதிரி என்னை சித்திரவதை பண்ணாத என்னால தாங்க முடியல என்று சொல்லி அழுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் விவேக் போலீஸ் அரெஸ்ட் பண்ணி விட விஜி நந்தினியிடம் விஷயத்தை சொல்ல சுந்தரவல்லி அம்மா கிட்ட சொன்னா விட்டுடுவாங்க என்று சொன்னவுடன் அதற்கு விஜி கம்ப்ளைன்ட் கொடுத்ததே அவங்கதான் என்று சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைந்து இருவரும் வீட்டுக்கு வருகின்றனர்.
மறுபக்கம் சுந்தரவல்லி கண்டிப்பா இந்த நிலைமையில் அவ சொல் பேச்சைக் கேட்பா என்று மாதவி இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். உடனே நந்தினி மற்றும் விஜி இருவரும் வந்து நிற்க விவேக் அண்ணா கண்டிப்பாக திருடியிருக்க மாட்டாருமா என்று நந்தினி சொல்ல இப்போ உன்னை யாராவது கேட்டார்களா என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
அரசன் படத்தில் இணைந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர்…
மாஸ்க் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம்…
மீனா இடத்திலிருந்து வீட்டு வேலைகளையும் ரோகினி செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
Rebel Saab (Tamil) Lyrical Video , The Raja Saab ,Prabhas , Maruthi , Thaman S…