சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா செய்த செயல்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா ரேணுகாவிடம் நடந்த விஷயத்தை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க, ரேணுகா தயங்கிக் கொண்டே பதில் சொல்ல கல்யாணத்தை கூப்பிடுகிறார். டாடி விழுந்த போது நீ எங்க போயிருந்த என்று கேட்க, நான் அசந்து தூங்கிட்டயா இந்த புள்ள சத்தம் போட்டப்ப தான் எனக்கு தெரியும் என்று சொல்ல அருணாச்சலம் எதுக்குடா இவ்வளவு கேள்வி கேட்டுகிட்டு இருக்க என்று சொல்லி கேட்க இந்த வீட்டில ரெண்டு திருடங்க வந்து இருக்காங்க செக்யூரிட்டி லட்சணம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க வேணாம் என்று சொல்ல உடனே சூர்யா என் பொண்டாட்டி இருந்தா உங்கள எப்படி பார்த்துபா தெரியுமா என்று சொல்ல சுந்தரவல்லி டென்ஷன் ஆகி சென்று விடுகிறார். அனைவரும் உட்கார்ந்த சாப்பிட்டுக் கொண்டு இருக்க அருணாச்சலம் வந்தவுடன் சுந்தரவல்லி சாப்பிட சொல்ல நான் பசிக்கட்டும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுகிறேன் என்று சொல்லுகிறார்.

நீங்க மாத்திரை போடணும் சாப்பிடுங்க என்று சொல்ல, மாதவி உங்களுக்கு இன்னும் புரியலையா அம்மா சூர்யாவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு சூர்யா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவார் என்று சொல்ல சுந்தரவல்லி சிரிக்கிறார். என்ன சுந்தரவல்லி சிரிக்கிற என்று கேட்க அவன் என்கிட்ட தான் அன்பா இல்ல உங்களையாவது இப்படி பார்க்கும்போது எனக்கு சந்தோசமா தான் இருக்கு என்று சொல்ல அந்த நேரம் பார்த்து சூர்யா ஃபுல் போதையில் வந்து அருணாச்சலத்தின் மேல் விழ அனைவரும் பதறுகின்றனர். பிறகு சூர்யாவிடம் சாப்டியா என்று கேட்க எனக்கு வேணா டாடி என்று சொல்ல அப்ப எனக்கும் வேண்டாம் என அருணாச்சலம் சொல்லுகிறார் என்ன டாடி பிளாக் மெயில் பண்றீங்களா இவங்க கூட எல்லாம் சேராதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா என்று சொல்லிவிட்டு கல்யாணத்திடம் சொல்லி சாப்பாடு எடுத்து வைக்க சொல்லி உங்களுக்கு ஒரு வாய் எனக்கு ஒரு வாய் என்று சாப்பிட்டுவிட்டு, எனக்கு டயர்டா இருக்கு நான் போய் படுக்கிறேன் என சொல்லிவிட்டு நந்தினியை கூப்பிட்டுக் கொண்டே மேலே செல்ல அருணாச்சலம் நான் போய் படுக்க வச்சிட்டு வரேன் என செல்கிறார்.

ரூமுக்கு வந்த சூர்யா நந்தினியை கூப்பிட்டுக் கொண்டே இருக்க, அருணாச்சலம் நீதான அவங்க அப்பா வீட்ல விட்டுட்டு வந்த என சொல்ல, ஆமா டாடி நான்தான் விட்டேன் மறந்துட்டேன் என சொல்ல, அருணாச்சலம் சூர்யாவை கட்டிலில் படுக்க வைக்கிறார்.

நந்தினி கல்யாணத்திற்கு போன் போட கிச்சனில் போன் சத்தம் கேட்கிறது யாருமில்லாததால் அருணாச்சலம் சத்தம் கேட்டு வந்து போனை எடுத்து காதில் வைக்க, நந்தினி கல்யாணம் என நினைத்து பேச ஆரம்பிக்கிறார். கல்யாணம் அண்ணா வீட்ல தானே இருக்கீங்க நான் வீட்டுக்கு வர இரண்டு நாள் ஆகும் அதுவரைக்கும் வீட்டு வேலையை நீங்கதான் பார்த்துக்கணும் ரேணுகாவுக்கு ஒன்னும் தெரியாது எல்லாத்தையும் உப்பு அள்ளி கொட்டிடுவா அது இல்லாமல் சூர்யா சாருக்கு என்ன செய்யணும், என்ன புடிக்கும் என்று அவளுக்கு எதுவும் தெரியாது.

நான் இருந்தா பாத்துப்பேன் நீங்கதான் கொஞ்சம் பாத்துக்கணும் உங்களுக்கே தெரியும் அவர் டெய்லியும் குடிச்சிட்டு வந்து ஒரு சில நேரம் போதையில் சாப்பிடாமலே படுத்து பாரு காலையில் எழுந்து தலை வலிக்குதுன்னு சொல்லுவாரு அவரை கொஞ்சம் சாப்பாடு கொடுத்து படுக்க வைங்க சாப்பிட்டு கை கழுவாம படுத்துடுவாரு கைய கழுவிட்டு வாயை தொடைச்சிட்டு ஷூ,ஷாக்ஸ் கழட்டி விடுங்க காலையில வெதுவெதுப்பா சுடு தண்ணீர் கேட்பாரு அதையும் வச்சு கொடுத்துடுங்க இரண்டு நாளில் நான் ஓடி வந்துடறேன் நான் சொல்றது கேக்குதா அண்ணே என சொல்லி நான் போனை வைத்து விடுகிறேன் என சொல்லி போனை வைத்து விடுகிறார். சூர்யா மீது நந்தினி அக்கரையாக இருப்பதை நினைத்து அருணாச்சலம் கண் கலங்குகிறார். மறுநாள் காலையில் நந்தினி குடும்பத்தினருடன் உட்கார்ந்து கொண்டிருக்க அம்மாச்சி தண்ணிக்கு கூட காசு வாங்குறாங்க என்று சொல்ல அன்னைக்கு செடி வாங்க போனேன் அங்க கூட மண்ணை கூட காசு கொடுத்து தான் வாங்கணும் என்று சொல்லுகிறார். அசோகன் பதட்டமாக ஓடி வந்து மாதவியிடம் என்ன வேலை விட்டு தூக்குற மாதிரி பண்ணிட்டாங்க என்னுடைய இடத்துக்கு வேற ஒரு ஆள போட்டு இருக்காங்க என்று சொல்ல அது எப்படி முடியும் என்று மாதவி சொன்ன உன் தம்பி எப்போ என்ன பண்ணுவான்னு எப்படி தெரியும் என்று சொல்ல சுரேகா வேலை இல்லாதவங்கள வேலைய விட்டு தூக்குவாங்க உங்கள தூக்குனா என்ன தூக்கலைன்னா என்ன என்று கேட்கிறார். இதுக்கு ஒரு வழி தான் இருக்கு என்று சொல்லி சுரேகா நேரா போய் சூர்யா காலில் விழ சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து சூர்யா வர அசோகன் சூர்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். என்ன கைவிட்டு நான் நடுரோட்டில் தான் நிக்கணும் மாப்பிள்ளை என்று சொல்ல சூர்யா எதுவும் பேசாமல் கோபமாக சென்று விடுகிறார். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு இதுக்கு மேலயும் எதுவும் பண்ண வேணாம் வாங்க யோசிக்கலாம் என்று சென்று விடுகின்றனர். மறுபக்கம் நந்தினியின் மாமா பீட்சா வாங்கிக்கொண்டு நந்தினியின் குடும்பத்தை பார்க்க வருகிறார். இது அம்மாச்சிக்கு தான் என்று சொல்ல, இது என்ன தோசையில் தக்காளியை போட்ட மாதிரி இருக்கு என்று சொல்ல தோசையா இதுக்கு பேரு பீட்சா இது ஆயிரம் ரூபாய் என்று சொல்லுகிறார். ஆயிரம் ரூபாயா சரி எப்படி இருக்குதுன்னு பாக்கலாம் எடுக்கப் போக என்னடா இது நூல் நூலா வருது என்று சொல்லுகிறார்.

நந்தினியின் மாமா ஜாலியாக பேச சிங்காரம் மாப்பிள்ளை வந்தாலே ஒரே சந்தோஷம் தான் என்று சொல்லி பேசி விட்டு ரஞ்சிதாவின் டிசியை கொடுக்கிறார். அம்மா சொல்லி தான் எனக்கு சொல்லாம கொள்ளாம வந்தது தெரியும் என்று சொல்லுகிறார். நீதான் இந்த ஊரிலேயே இருக்கையே எங்களுக்கும் ஏதாவது சொல்லிக் கொடுக்கலாம் என்று சொல்ல, இங்க இருக்கிற பாதி பேர் வெளியூரிலிருந்து வந்தவங்க தான் என்று சொல்லுகிறார். என்னால வேலை செய்யாம இருக்க முடியாது எனக்கு ஏதாவது வேலை இருந்தா பாத்து சொல்லு என்று சொல்ல கலெக்டர் வேலை செய்றியா என்று கேட்டு கிண்டல் அடிக்கிறார். என்னடா இது தெரியாத ஊருக்கு வந்துட்டோம் என கஷ்டப்படாதே நான் இருக்கேன் பாத்துக்கலாம் முதல்ல ரஞ்சிதாவிற்கு ஸ்கூல் பார்க்கலாம் என்று சொல்லி பேசிவிட்டு அனைவரும் பீட்சாவை உட்கார்ந்த சாப்பிடுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் புனிதா சுந்தரவல்லி வீட்டிற்கு வர நந்தினி வெளியில் வந்து எப்ப வந்த நீ மட்டுமா வந்த என்று கேட்க அம்மாச்சி நெய் சோறு செஞ்சாங்க உனக்கு பிடிக்கும் என எடுத்துட்டு வந்தேன் என்று சொல்ல,சுந்தரவல்லி இவ பெரிய கலெக்டர் வேலை செய்றா அதுதான் விதவிதமா ஸ்டைலா டிபன் பாக்ஸ்ல சமைச்சு எடுத்து தரீங்களா என்று கையில் இருக்கும் பையை வாங்கி தூக்கி வீச அதில் இருக்கும் சாப்பாடு கொட்டி விடுகிறது.

நந்தினி அருணாச்சலத்திடம் மன்னித்துவிடுங்கள் ஐயா எங்களால எந்த பிரச்சனையும் வேண்டாம் என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா வந்துவிடுகிறார். இது பாட்டியோட பிரிபரேஷன் தானே என சொல்லி கீழே கொட்டிய சாப்பாடு சாப்பிடுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 25-04-25
jothika lakshu

Recent Posts

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள்..!

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

12 hours ago

தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…

17 hours ago

மதராசி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

18 hours ago

சிம்பு 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்கள்.!!

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

18 hours ago

மனோஜ் சொன்ன வார்த்தை, மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

22 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சூர்யாவிடம் நந்தினி சொன்ன விஷயம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

22 hours ago