Moondru Mudichu Serial Promo Update 23-07-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் உங்க பையனுக்கு நான் அர்ச்சனாவுக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுத்ததினால் மூல குழம்பி போயிடுச்சா என்று சொல்ல, சூர்யா வந்து நின்று நந்தினி கூப்பிட்டு விட்டு இன்னைக்கு நந்தினி ஆபீஸ்க்கு வந்து கெத்தா என்னோட சீட்ல உக்காந்து சைன் போடப் போறா அதுக்காக ஆரத்தி எடுத்து வழிய அனுப்ப வேணாமா என்று கேட்க அருணாச்சலத்திடம் உங்க மருமகள் ஆசிர்வாதம் பண்ணுங்க என்று சொல்ல, அருணாச்சலமும் ஆசீர்வாதம் செய்கிறார். பிறகு வெளியில் வந்து சூர்யாவும் நந்தினியும் சேர்ந்து நிற்க கல்யாணம் எல்லாம் நல்லபடியா நடக்கணும் என ஆரத்தி எடுக்க இருவரும் ஆஃபீசுக்கு கிளம்புகின்றனர். பிறகு காரில் எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்ல, அதெல்லாம் பயப்படாத நந்தினி என்று சொல்லுகிறார்.
அப்போ இதுக்கு தான் சீட்டு போட்டு பார்த்தீங்களா என்று சொல்ல,சூர்யா சிரிக்க இதுதான் தெரிந்திருந்தால் நான் போட்டு இருக்க மாட்டேன் என்று சொல்ல, இப்போ நம்ம நேரா கம்பெனிக்கு போறோம் நீ அங்க போய் விளக்கேத்து என்று சொல்ல எனக்கு ரொம்ப பயமா இருக்கு நான் இப்பவே இறங்கி போறேன் என்று சொன்னார் அதெல்லாம் எதுவும் பயப்படாத நான் பாத்துக்குறேன் என்று சொல்ல, நான் பள்ளிக்கூடமே முழுசா முடிக்கல நாட்டில் எவ்வளவு பேர் வேலை இல்லாம இருக்காங்க அவங்கள கூட்டிட்டு வந்து வேலை கொடுங்க என்று சொல்ல சூர்யா சிரிக்கிறார். அர்ச்சனா கம்பெனிக்கு வர அவரை தடுத்து நிறுத்த பிறகு சுந்தரவல்லி மேடம் பதில் நான் தான் இனி கம்பெனியை பார்த்துக்க போகிறேன் என்று சொல்ல அவர்களும் உள்ளே விடுகின்றனர்.
பிறகு அர்ச்சனா உள்ளே வர யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். உடனே அனைவரையும் கவனிக்க சொல்லி இதுக்கப்புறம் சுந்தரவல்லி மேடம் இருந்த இடத்துல நான் தான் இருப்பேன் நான் யார வேணாலும் வேலையை விட்டு தூக்கலாம் இல்ல சேக்கலாம் என கேட்காமல் சின்ன விஷயம் கூட நடக்கக்கூடாது என்று சொல்ல, நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க என்று சொல்ல அப்ப யாரும் உங்களை மதிக்கலன்னு அர்த்தம் என்று கிண்டல் அடிக்கின்றனர். பிறகு கம்பெனியில் வேலை செய்யும் ஒருவர் வந்து சுந்தரவல்லி ரூமை காட்டி அர்ச்சனாவை அங்கு அழைத்துச் சென்று விடுகிறார். அர்ச்சனா டென்ஷனாக ரூமில் இருக்க வெளியில் பட்டாசு சத்தம் கேட்க வெளியில் வந்து பார்க்க நந்தினியும் சூர்யாவும் வருகின்றனர். அவர்களுக்கு மாலை மரியாதை உடன் வரவேற்பு கிடைத்த அர்ச்சனா கடுப்பாகிறார்.
சூர்யா உள்ளே வந்து அனைவரிடமும் திஸ் இஸ் யுவர் நியூ மேடம் என்று அறிமுகப்படுத்த அனைவரும் கைத்தட்டி வாழ்த்து சொல்லுகின்றனர். அர்ச்சனா ரூமில் கடுப்பாக இருக்க மறுபக்கம் அருணாச்சலம் சந்தோஷமாக இருக்க என்ன விஷயம் என்று கேட்கிறார். இவ நம்ம வீட்ல வேலை செஞ்சவ ஆனா அர்ச்சனா அப்படி கிடையாது அவ பிசினஸ்காக வெளிநாட்டில் போய் படித்தவர் இவளுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு சாமான் கொடுத்தால் கழுவுவா அவ்வளவு தான் எனக்கு சொல்லுகிறார். இதனால அவளுக்கு மரியாதை கிடைக்காது.சூர்யா அசிங்கப்பட்டு கேவலப்பட்டு தான் வரப்போறான் என்று சொல்லுகிறார். நீ நந்தினியை பத்தியோ அர்ச்சனாவை பத்தியும் இவ்வளவு சொல்ற ஆனா நீ உன் புள்ளைய பத்தி புரிஞ்சிக்கமா பேசிகிட்டு இருக்க உனக்கு இருக்கிற திமிரு பிடிவாதமும் அவனுக்கும் இருக்கும் என்று சொல்லுகிறார்.
சுந்தரவல்லி அர்ச்சனாவுக்கு போன் போட்டு அங்க என்ன நடக்குது வேலைக்காரியும் என் பையன் சூர்யாவும் என்ன பண்றாங்க என்று கேட்க அர்ச்சனா அழுகிறார். ஆபீஸ்ல எனக்கு ராஜ மரியாதை கெடக்கோன்னு சொன்னிங்க ஆனா என்னை இந்த பியூன் கூட மதிக்க மாட்டேங்கிறாங்க என்று சொல்லுகிறார். நீங்க வேலைக்காரின்னு சொன்ன நந்தினிக்கு மொத்த ஆபீஸில் வெளியில் நின்னு மாலை மரியாதையோட வரவேற்பு கொடுக்குறாங்க என்ன மதிக்கவே இல்லை என்று சொல்ல, உடனே சுந்தரவல்லி மாலை மரியாதை ஏற்பாடு நான் உனக்காக பண்ண சொன்னது அது எப்படி சூர்யாக்கு போச்சு என்று சொல்லிவிட்டு நீ போனவை நான் மேனேஜர் கிட்ட பேசுறேன் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா விற்கு நந்தினி ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க நீ பிச்சை போட்டு இந்த ஜூஸ நான் குடிக்கணுமா உன்ன மாதிரி என்ன பொறுக்கி தின்றவ நினைச்சியா என்ன என்று கேட்டு நந்தினியை அசிங்கப்படுத்துகிறார். நந்தினி வெளியில் வந்த பிறகு சூர்யா கம்பெனி புடிச்சிருக்கா என்று கேட்க சூப்பரா இருக்கு என்று சொல்ல அப்போ டெய்லியும் வந்துரு என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் அர்ச்சனா பியூனை கூப்பிட்டு கொண்டு இருக்க அவர் கேட்காமல் போனதால் அவரை கன்னத்தில் அறைந்து விட சூர்யா உடனே என்னுடைய எம்பிளாய் மேல நீ எப்படி கைவைப்பது என்று கேள்வி கேட்கிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…