நந்தினி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அசோகனுக்கு பாலை கொடுக்க முடியாமல் கல்யாணம் வந்து விடுகிறார். நந்தினி இப்ப என்ன பண்றது என்று கேட்க என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று சொல்லிவிட்டு வாஷிங்மெஷினில் அழுக்கு துணி போடும் இடத்துக்கு வந்து இதில் மாதவி அம்மா சேலை இருந்தா எடுமா என்று சொல்லுகிறார். எதுக்கு இந்த புடவை என்று கேட்க இந்த புடவையை வச்சு அந்த அறவேக்காடு அசோகனை அடக்க போறேன் என்று சொல்லிவிட்டு பொறுத்திருந்து இந்த கல்யாணத்தோடு ஆட்டத்தை பாரு என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மாதவி சூர்யா ரூமுக்கு வந்து இவன மறுபடியும் குடிக்க விடாமல் பண்ணனும் என்று முடிவெடுத்து சரக்கு பாட்டில்களை பாத்ரூமில் ஊற்றி விட்டு சென்று விடுகிறார்.

கல்யாணம் மாதவியின் புடவையை கட்டிக்கொண்டு இருக்க, மறுபக்கம் அசோகன் சூர்யாவின் சரக்கு பாட்டிலை எடுத்து குடிக்க ஆசைப்பட்டு ரூமுக்கு செல்கிறார். ஆனால் பாட்டில்கள் காலியாக இருப்பதை பார்த்து அதில் கொஞ்சம் கொஞ்சம் இருப்பதை கவனித்த அசோகன் அனைத்து பாட்டில்களையும் எடுத்து கீழே அடுக்கி வைத்துவிட்டு ஒரு டம்ளரில் அனைத்தையும் மிக்ஸ் பண்ணி ஊத்தி குடித்து விட்டு தள்ளாடிக்கொண்டே வந்த அசோகன் பெட் மீது படுத்து விடுகிறார். மறுபக்கம் கல்யாணமும் சேலையை கட்டி முக்காடு போட்டுக் கொண்டு மேலே வருகிறார். அசோகன் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த கல்யாணம் சேலையில் முந்தானையை எடுத்து வருடி விடுகிறார்.

உடனே கண் விழித்த அசோகன் இப்பயாவது உனக்கு இந்த மாமனோட ஞாபகம் உனக்கு வந்தது லவ் யூ மாதவி என்று சொல்லி கல்யாணத்தை பிடித்து இழுத்துக் கொண்டு இருக்க அவரும் அப்படியே டான்ஸ் ஆடிக் கொண்டு இருவரும் கீழே இறங்கி வருகின்றனர் இதனைப் பார்த்த நந்தினி சந்தோஷப்பட்டு சிரிக்கிறார்.

அசோகன் கல்யாணத்தை மாதவியாக நினைத்து நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ரூமுக்குள்ள போகலாம் என இழுத்துக்கொண்டே இருக்கிறார். மாமன உசுப்பேத்தி விட்டுட்டு ஏன்டா ஓடுகிறாய் என்று விழித்துக் கொண்டே இருக்க, நந்தினி ஓடி வந்து கல்யாணத்தை பார்க்க கல்யாணம் நீ எதுக்கு இங்க வந்த நீ போய் சின்னையாவ பாரு என்று சொல்ல நந்தினி சந்தோஷமாக மேலே ஓடுகிறார். மறுபக்கம் அசோகனை கல்யாணம் ரூமில் தள்ளிவிட்டு கதவை சாத்திவிட்டு சென்று விடுகிறார். நந்தினி சந்தோஷமாக சூர்யா ரூமுக்குள் வர எதிரில் சுந்தரவல்லி வந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே பின்னால் வருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அசோகன் மாதவி இடம் நீதான கூட்டிக்கிட்டு வந்த என்று சொல்ல சுந்தரவல்லி முறைக்கிறார் நீங்க என்னமோ இவர் சொல்றத நம்பிட்டு என்ன சந்தேக படாதீங்க என்று சொல்ல மறுபக்கம் நந்தினி சுந்தரவல்லி இடம் ஒரே வாட்டி மட்டும் கண்ணுல காட்டுங்க நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என்று சொல்ல என்ன சொன்னாலும் கேட்பியா என்று சொல்லி விட்டு இந்த வீட்டை விட்டு போயிடுவியா என்று கேட்க நந்தினி அமைதியாகி விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 21-11-25
jothika lakshu

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

1 day ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

1 day ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

1 day ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

2 days ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

2 days ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

2 days ago