சுந்தரவல்லி போட்ட திட்டம், முறியடிப்பாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்பது மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கல்யாணத்திடம் நியூஸ் பேப்பர் வாங்கிக்கொண்டு வர சொல்லி இருக்கும் விஷயத்தை சொல்ல அருணாச்சலம் எனக்கு காபி வேணும் என்று சொல்லி உள்ளே அனுப்பிவிட்டு கல்யாணம் வந்தவுடன் நியூஸ் பேப்பரை வாங்கிவிட்டு சூத்து வட்டாரத்துல எங்கேயுமே நியூஸ் பேப்பர் இல்லை என்று சொல்லிடு என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அருணாச்சலம் வந்து உள்ளே உட்கார்ந்து விட கல்யாணம் அருணாச்சலம் சொன்னது போல எங்கேயுமே பேப்பர் கிடைக்கலாமா என்று சொல்ல சுந்தரவல்லி அது எப்படி கிடைக்காமல் இருக்கும் என்று கேட்கிறார். சரி நீ நியூஸ் சேனல்ல பாரு என்று சொல்லி அழைத்து சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யாவிற்கு விவேக் போன் போட நந்தினி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் பிறகு போகும்போது சூர்யா நந்தினி கையை பிடித்துக்கொண்டு விடாமல் இருக்கிறார். பிறகு விவேக் நியூஸ் பேப்பர் விஷயம் பற்றி பேசிக்கொண்டு இருக்க நந்தினி கையை இழுக்க அப்பொழுதும் விடாமல் பேசிக்கொண்டே இருக்க பிறகு பேசி முடித்துவிட்டு நந்தினியின் பொட்டை சரி செய்துவிட்டு இப்போ போ என்று சொல்ல நந்தினி சூர்யாவை பார்த்துக் கொண்டே செல்கிறார். பிறகு நந்தினி கண்ணாடி முன் நின்று அமைதியாக பார்த்து லேசாக சிரித்து விட்டு சென்று விடுகிறார்.

சூர்யா கீழே வந்து அருணாச்சலத்திடம் எனக்கு நிறைய மீட்டிங் வெளியே போற வேலை எல்லாம் இருக்கு அதனால என்னோட பொறுப்பு எல்லாத்தையும் நந்தினி கிட்ட கொடுக்கப் போறேன் என்று சொல்ல, சுந்தரவல்லி உனக்கென்ன கம்பெனி என்ன விளையாட்டா போச்சா என்று சொல்ல, நந்தினி கம்பெனிக்கு போனா கண்டிப்பா எல்லா வேலையும் கரெக்டா நடக்கும் யாரும் பயப்பட வேண்டாம் என்று சொல்ல அவளுக்கு என்ன தகுதி இருக்கு என்று சுந்தரவல்லி கேட்க அவ என்னோட பொண்டாட்டி என்று சொல்லுகிறார் இதைவிட வேற என்ன தகுதி வேண்டும் என்று கேட்க, அவ இந்த வீட்டோட மருமக ஆக முடியாது. இந்த வீட்ட பொறுத்தவரைக்கும் அவ வேலைக்காரி தான் என்று சொன்னார் சூர்யா போதும் இதோட நிறுத்த சொல்லுங்க இல்லன்னா நான் முறையா ரெஜிஸ்டர் பண்ணி இங்க பிரேம் போட்டு மாட்டுவேன் என சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகி சென்று விடுகிறார்.

எதுக்குடா இப்ப தேவையில்லாம இதெல்லாம் பேசிக்கிட்டு இருக்க என்று கேட்க எல்லாம் ஒரு காரணமா தான் டாடி நீங்க எதுவும் டென்ஷன் ஆகாதீங்க என்று பேசிக் கொண்டு இருக்க அசோகன் கையை மறைத்துக்கொண்டு வேக வேகமாக உள்ளே ஓடி வருகிறார். சூர்யா அருணாச்சலம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து வந்த நிற்கிறார். கையெழுத்து மறைச்சு வச்சிருக்க ஏதாவது பொக்கிஷம் இருக்கா என்று கேட்க பொக்கிஷம் இல்ல ரகசியம் என்று சொல்லுகிறார். நான் யார்கிட்டயும் முதலில் காட்ட மாட்டேன் அத்தை கிட்ட தான் காட்டுவேன் என சொல்லி காலையிலிருந்து நீங்க தேடிக்கிட்டு இருந்த விஷயத்தை நான் வாங்கிட்டு வந்துட்டேன் என்று ஹாலில் இருந்து கத்திக் கொண்டே நியூஸ் பேப்பரை ஆட்ட, சூர்யா மற்றும் அருணாச்சலம் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே நான் இதை அத்தை கிட்ட கொடுத்தே ஆகுவேன் என சொல்லி எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறார்.

பிறகு இருவரும் என்ன செய்வது என யோசிக்க நான் போய் பார்க்கிறேன் என சொல்லி சூர்யா வர அசோகன் நியூஸ் பேப்பரை படிக்க உட்கார சூர்யா நான் படிக்கிறேன் நீ படித்தது போதும் என வாக்குவாதம் செய்ய, அசோகன் அதில் அருணாச்சலம் என்ற பெயரிடுப்பதை பார்க்க நான் பார்க்கணும் மாப்பிள்ளை என்று கேட்க சூர்யா பேப்பரை புடுங்கி வைத்துக்கொண்டு கொடுக்க முடியாது என்று சொல்லுகிறார். அத்த திட்டுவாங்க நீ ரெண்டு பேப்பர் எடுத்துக்கிட்டு என்கிட்ட ரெண்டு குடு என்று சொல்ல முதல் இரண்டு பேப்பரை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பேப்பரை சூர்யா எடுத்து வைத்துக் கொள்கிறார். உடனே அதில் இருக்கும் இவர்களுடைய ரெஜிஸ்ட்ரேஷன் பக்கத்தை மட்டும் கிழித்து விடுகிறார். மறுபக்கம் விவேக் மற்றும் சூர்யா இருவரும் வந்து வக்கீலை சந்தித்து எப்போ ரெஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம் என்று கேட்க இதுவரைக்கும் எந்த அப்ஜக்ஷனும் வரல அதனால நாளைக்கோ இல்ல அடுத்த நாளோ பண்ணிடலாம் என சொல்லுகிறார்.

பிறகு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு என்னென்ன தேவை என்று விசாரித்துவிட்டு இருவரும் கிளம்புகின்றனர். நந்தினி துணி துவைக்க துணிகளை எடுத்துக் கொண்டு இருக்க, சூர்யா நீ எதுக்கு எப்ப பார்த்தாலும் வேலைன்னு பார்த்துக்கிட்டு இருக்க உனக்கு யாரு நீங்க அவார்ட் கொடுக்க மாட்டாங்க என்று சொல்லிவிட்டு ஜாலியா இருக்கறதுனா என்னன்னு சொல்லு என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா கிழித்துப் போட்ட நியூஸ் பேப்பர் துண்டு மாதவி எடுத்து கண்டுபிடித்து விட எப்படி இந்த ரெஜிஸ்ட்ரேஷனில் நிறுத்துவது என்று சொல்ல அதற்கு நான் பிளான் எப்பவோ பண்ணிட்டேன் என சொல்லுகிறார். மறுபக்கம் அருணாச்சலம் சூர்யாவிடம் இந்த ரிஜிஸ்ட்ரேஷன் விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் என்று சொல்லுகிறார். ஆனால் சூர்யா திடீர்னு ஒரு அப்ரோச் மாறுதுனா வேற ஏதோ ஒரு காரணம் இருக்கு டாடி என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி வக்கீலுக்கு போன் போட்டு நான் சொல்ற டாகுமென்ட்ட உடனே ரெடி பண்ணி எடுத்துட்டு வாங்க என்று சொல்லி என் பெயர் நந்தினி என சொல்ல ஆரம்பித்து ஏதோ ஒரு விஷயத்தை சொல்லுகிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 21-08-25
jothika lakshu

Recent Posts

வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்களை பகிர்ந்த ஏ ஆர் ரகுமான்..!

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார்…

41 minutes ago

விக்ரம் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் விக்ரம் தற்போது விக்ரம் 63 மற்றும் 64 ஆகிய படங்களில்…

1 hour ago

தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்வதற்கான காரணத்தை கூறிய சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

1 hour ago

மன்னிப்பு கேட்க சொன்ன சூர்யா, மாதவியின் முடிவு என்ன? மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

சீதாவை சமாதானப்படுத்திய அருண், பயத்தில் கிருஷ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண்…

5 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட காவியா அறிவுமணி..!

இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…

1 week ago