தமிழ் சின்னத்திரையின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் நான் உனக்கு பெர்ஃப்யூம் வாங்கிட்டு வரேன் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு வேண்டாம் என சொல்லுகிறார். சரி நான் வெளியே போறேன் லேட் ஆகும் என சொல்லிவிட்டு கிளம்ப போகும்போது பட்டன் அருந்து கீழே விழுந்து விடுகிறது. சூர்யா சட்டையை மாற்ற போக நந்தினி வேண்டாம் என சொல்லி பட்டனை சட்டையில் வைத்து தைத்து விடுகிறார். சுந்தரவல்லி வெளியில் காத்துக் கொண்டிருக்க குடும்பத்தினரும் வந்து வெளியில் நிற்க காரில் இருந்து சிலர் இறங்கி வர அருணாச்சலம் யார் என்று கேட்கிறனர். அவர்களை வரவேற்று உட்கார வைத்து விட்டு சுரேகாவிடம் சூர்யாவை கூப்பிடச் சொல்லி மேலே அனுப்புகிறார். நந்தினியிடம் போதும் நந்தினி விட்டு விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்க சுரேகா வந்து பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார். அண்ணன் அண்ணி இருக்கும்போது இப்படித்தான் வந்து நிற்பாயா உனக்கு டீசன்ட் கிடையாதா என்று சொல்ல அம்மா கூப்பிட்டாங்க லாயர் வந்திருக்காங்க வர சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் என சொல்லி அனுப்புகிறார்.
அருணாச்சலம் எல்லாரும் வந்தாச்சு இப்பயாவது விஷயத்தை சொல்லு என்று சொல்ல சுந்தரவல்லி சொல்ல ஆரம்பிக்கிறார். மூணு மாசத்துக்கு பிசினஸ்ல தலையிடாமல் ரிலாக்ஸா இருக்கப் போகிறேன் என்று சொல்ல, அருணாச்சலம் நீயா இப்படி பேசுற என்று கேட்க ஆமா எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு தோணுது என்று சொல்லுகிறார். என்னோட சைனிங் அத்தாரிட்டியை வேற ஒருத்தருக்கு கொடுக்க முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்ல, இப்போதான் சூர்யா மாத்துனா அதுக்குள்ள நீயா என்று கேட்க இப்போதான் ரெஸ்ட் எடுக்க போறேன்னு சொன்னேன்ல என்று சொல்ல உடனே சுரேகா எனக்கா அக்காவுக்கா மாமாவுக்கா மாத்தி கொடுக்க போறீங்க என்று கேட்க, சுரேகா மற்றும் மாதவி இருவரும் எனக்காக தான் இருக்கும் என்று சொல்ல உங்க மூணு பேருக்குமே கிடையாது என்று சொல்லுகிறார்.
கல்யாணத்தை கூப்பிட்டு என் ரூமை தர அவர்களே வருவாங்க என்று சொல்ல அர்ச்சனா வந்து நிற்கிறார். உடனே குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாக நிற்கின்றனர். என்னோட அந்தஸ்துக்கும் கௌரவத்திற்கும் தகுதியானவர் அர்ச்சனா தான் அதனாலதான் அவ இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டேன் ஆனா அதுதான் நடக்கல ஆசைப்பட்டா மட்டும் போதாது இல்ல அதுக்கான அதிகாரத்தை கொடுக்கணும் இல்ல அதனால அடுத்த மூணு மாசத்துக்கு என்னோட சைனிங் அத்தாரிட்டி அர்ச்சனா தான் என சொல்லுகிறார். அர்ச்சனாவுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தம் இருக்கு என்று கேட்க சம்பந்தமே இல்லாத உங்களுக்கெல்லாம் உங்க பையன் கொடுக்கும்போது அர்ச்சனாவுக்கு ஏன் கொடுக்கக் கூடாது என்று சுந்தரவல்லி கேட்கிறார்.
அர்ச்சனா வர வைக்கிறதுக்கு முன்னாடி நம்ம டிஸ்கஸ் பண்ணி இருக்கலாம் என்று அருணாச்சலம் சொல்ல, எதை யார் கிட்ட கொடுக்கணும்னு எனக்கு தெரியும் இதுல எனக்கு எந்த மாற்றமும் கிடையாது. செக்கு மட்டும் இல்லை பைல்ஸ்லையும் அவ தான் சைன் பண்ணவா என்று சொல்லி ஃபைல் கேட்கின்றனர். அர்ச்சனா இங்கே யாருக்கோ விருப்பம் இல்லாத அப்போ வேண்டாம் என்று சொல்ல நீ சைன் மட்டும் பண்ணு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார். அர்ச்சனாவும் கையெழுத்து போட்டு கொடுக்க சூர்யா சூப்பர் என்று கைதட்டுகிறார். சுமாரா நடக்குற எங்க கம்பெனிய தூக்கி நிறுத்த போறியா சிறப்பா செய் இந்த தாய்குலத்தையும் சேர்த்து செஞ்சி விற்று வாய்ப்பு ஒருவாட்டி தான் வரும் அடிச்சு ஆடு என்று சூர்யா சொல்ல அர்ச்சனா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
இந்த தாய்குலத்தை காலி பண்ணா தான் என் முன்னாடி போக முடியுமா அந்த சான்ஸ் விட்டு விடாதே ஏதாவது டவுட் இருந்தா என்கிட்ட கேளு என்று சொல்லிவிட்டு நந்தினி மேலே போகச் சொல்லிவிட்டு வெளியில் கிளம்பி விடுகிறார். நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் என்று அர்ச்சனா சொல்ல எனக்கு தெரியும் என்று சொல்லி விட்டு ஆபீஸர்களை அனுப்பி வைக்கிறார். பிறகு சூர்யா விவேக் சந்தித்து நடந்த விஷயங்களை சொல்ல, உங்க அம்மா எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தாங்க என்று சொல்ல என்ன வெறுப்பேத்த தான் அவங்க இப்படி பண்றாங்க ஒன்று சொல்ல, இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்று சூர்யா கேட்க இதுக்கு ஒரு முடிவு எடுக்கிறது இருக்கட்டும் முதல்ல கம்பெனிக்கு வர அர்ச்சனாவுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று யோசித்து விட்டு அந்த அர்ச்சனா ஆபீஸ் உள்ள வந்தாலே ஏன்டா வந்தமொனு கதறனும் அந்த அளவுக்கு சம்பவம் பண்ணனும் என விவேக்கிடம் சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி சைனிங் அத்தாரிட்டியை அர்ச்சனாவிற்கு கொடுக்க சூர்யா கடுப்பாகிறார். சூர்யா அருணாச்சலம் மற்றும் சுந்தரவல்லி நிற்க வைத்து இவங்க ஆரம்பிச்சுருக்கிற ஆட்டத்துக்கு எனக்கு பதில் சொல்லியே ஆகணும் என்று சொல்லுகிறார். என்ன மெரட்டரியா என்று சுந்தரவல்லி கேட்க உங்க பொண்டாட்டி ஒரு தப்பான வேலையே தப்பான ஆள வச்சு பண்றாங்க என்று சொல்லுகிறார்.
நீ என்ன வேணா சொல்லிட்டு போ ஆனால் இந்த ஆட்டத்துல சுந்தரவல்லி தான் ஜெயிப்பா என சொல்ல, நாளையிலிருந்து என்னோட ஆட்டம் எப்படி இருக்க போகுதுன்றத பாருங்க என்று சூர்யா சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…
கார் டிக்கியில் கிரிஷ் இருப்பதை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…