Moondru mudichu serial promo update 20-02-26
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் இவதான் என்ன பழிவாங்க அப்பாவுக்கு விஷத்தை குடுத்துருப்பா என்று சொல்ல, என் மேல பழி போடாதீங்க கருப்பசாமி மேல சத்தியமா நான் இதை பண்ணல என்று சொல்ல, சுந்தரவல்லி இடம் இவளை மன்னிக்க சொல்றீங்களா அப்பாவுக்கு ஏதாவது இருந்தால் யார் பொறுப்பு என்று கேட்க அருணாச்சலம் நந்தினி யாரோ கிடையாது அவ இந்த வீட்டோட மருமகள் என்று சொல்ல, சுந்தரவல்லி ஆன்ட்டி இவளை எப்படி பாக்குறாங்களோ அப்படித்தான் நானும் பார்த்தேன் அவருக்கு எதுக்கு நான் விஷத்தை கொடுக்கணும் என்று கேட்கிறார். எங்க உன்ன விரட்டி விட்டுட்டு என்னை இந்த வீட்டோட மருமகள் ஆகிடுவார்களோ என்று உனக்கு பயமா அதனாலதான் விட்டிருந்தா எனக்கும் விஷத்தை வச்சிருப்ப என்று சொல்லுகிறார். சுந்தரவள்ளி ஆன்ட்டிக்கும் உன் மேல கோபம் தான் அவங்களுக்கும் நீ வேஷத்தை வைத்திருப்பாய் என்று சொல்ல, நந்தினி அழுது கொண்டே நான் எந்த தப்பும் பண்ணல நான் தப்பு பண்ணாதவனே சாமி தான் நிரூபிக்கணும் என்று சொல்ல சுந்தரவல்லி பண்றதெல்லாம் குள்ளநரித்தனம் இதுல சப்போட்டுக்கு சாமியை கூப்பிடுறியா என்று சொல்லி அறையப்போக அருணாச்சலம் தடுக்கிறார். சூர்யா இதை கவனித்து விட்டு கோபப்பட்டு எங்க மேல கை வைங்க பார்க்கலாம் எதுக்கு நிறுத்திட்டிங்க என்று கோபப்படுகிறார். நந்தினி விஷத்தை வச்சுட்டான்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பகையா என்று கேட்கிறார்.
அப்பாவை கொலை பண்ண அவளுக்கு மோட்டிவ் இருக்கு என்று சொல்ல, என்ன மோட்டி இருக்கணும் சொல்லு என்று கோபப்படுகிறார். உடனே ரஞ்சித் ஹரிதாவிடம் அந்த பொண்ண பாத்தா ஒருத்தரை கொலை பண்ற மாதிரியா இருக்கு இந்த பொண்ணுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது இது வேற யாரோ பண்ணி இருக்காங்க என்று சொல்ல அதை கொஞ்சம் சத்தமா எல்லாருக்கும் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சூரியா நந்தினி அழைத்துச் சென்று விடுகிறார். சுந்தரவல்லி அண்ணனே டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தவுடன் சுந்தரவல்லி அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். நம்ம ரொம்ப நாள் கழிச்சு சேர்ந்திருக்கும் அதுதான் டிஸ்டி பட்டிருக்கும் என்று சொல்ல, இப்போதைக்கு இதை விட்டுட்டு கல்யாண வேலையை பார்க்கலாம் என்று சொல்லுகின்றன. இந்த வாரத்தில் ஒரு நல்ல நாளா பாரு நிச்சயமா வச்சுக்கலாம் என்று சொன்ன சுந்தரவல்லி சரி என்று சொல்லி ரெஸ்ட் எடுக்க அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் பரமு நான் ஒரு பாட்டில் விஷத்தை ஒரே ஆப்பிள் ஏத்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன் என்று கோபப்படுகிறார். நம்மதான் தோத்துட்டோமே ஊருக்கு போகலாமா என்று கேட்க, நான் பட்ட வேதனையை அந்த சுந்தரவல்லி குடும்பம் அனுபவிக்கணும் ஜெயிக்கிற வரைக்கும் போராடிகிட்டே இருப்பேன் அடுத்த திட்டத்தை ரெடி பண்ணிட்டேன் என்று சொல்லுகிறார். அந்த சுந்தரவல்லி கதறி அழணும் அடுத்த அட்டாக் காப்பாத்த முடியாத மாதிரி இருக்கணும். கண்டிப்பா ஒரு சாவாவது விழும் என்று சொல்கிறார். மறுபக்கம் சூர்யா மொட்டை மாடியில் இருக்க நான் உங்களை ரிலாக்ஸ் பண்றேன் என்று சொல்லி சரக்கு பாட்டில் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் நீங்க எப்படி இப்படி என்று கேட்க நீங்க குடுப்பீங்கன்னு எனக்கு தெரியும் உனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல என்ன குடிக்க வச்சு இன்னைக்கு நீ யாருன்னு எல்லாருக்கும் நிரூபிக்கிறேன் என்று சொல்லுகிறார்.
இப்போ கொஞ்ச நாளா குடிக்காம இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன் யார் காரணம் என்று கேட்க நந்தினி தான் என்று சொல்கிறார். ஏன் அவங்க சண்டை போட்டாங்களா என்று கேட்க அதையும் மீறி ஒரு காரியம் பண்ணிட்டா என்று நந்தினி குடித்துவிட்டு அலப்பறை செய்த விஷயத்தை சொல்லுகிறார். இப்ப எப்படி குடிப்ப என்று கேட்க அதெல்லாம் அவளுக்கு தெரியாம சமாளிச்சிடுவேன் என்று சொல்ல இப்போ எனக்கு சைடிஷ் சாப்பிடணும் போல இருக்கு என்று சொன்னவுடன் ரஞ்சித் நான் போய் எடுத்துட்டு வரவா என்று கேட்க கல்யாணத்துக்கு போன் பண்ணி எடுத்துட்டு வரேன் என்று சொல்லுகிறார். உடனே கல்யாணத்துக்கு போன் போட நந்தினி ஸ்பீக்கரில் போட சொல்லி பேச சூர்யா ஆம்லெட்டும் முந்திரியும் எடுத்து வா நந்தினிக்கு தெரியாம இதெல்லாம் செஞ்சு எடுத்துட்டு வா என்று சொன்னால் நந்தினி கேட்டு விடுகிறார். உடனே இன்னைக்கு நானா அவரானு பார்த்துடறேன் என்று சொல்லி சூர்யா கேட்ட அனைத்தையும் நந்தினியே செய்து கொடுக்கிறார். கல்யாணத்திற்காக சூர்யா காத்துக்கொண்டிருக்க நந்தினி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். ரஞ்சித் எனக்காக கஷ்டப்பட்டு எடுத்துக்கிட்டு வந்திருக்கான் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று சொல்லிவிட்டு ரஞ்சித் சூர்யாவிற்கு சரக்கு ஊத்திக் கொடுக்கிறார். ரஞ்சித் தண்ணியை எடுத்துக்கொண்டு குடிக்க எனக்கு கம்பெனி கொடுக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப தண்ணி குடிக்க பார்க்கிறாயா? என்று கேட்கிறார்.
இப்போ நீ என்ன எக்ஸ்போஸ் பண்ண நினைக்கிற என்ன குடிக்க வச்சு நீ நல்லவனாக பிளான் பண்றியா நீ எவ்ளோ பிளான் பண்ணுவ என்று எனக்கு தெரியும் கூடிய சீக்கிரம் உன்னை எல்லாரும் முன்னாடியும் சிக்க வைக்கிறேன் என்று சொல்ல நந்தினி அவரை அனுப்பிவிட்டு அவர் இப்பதான் குடிக்காமல் இருக்காரு தயவுசெய்து அதை எல்லாம் அவர் கண்ணில் காட்டாதீங்க என்று சொல்லிவிட்டு எடுத்துச் சென்று விடுகிறார். சுந்தரவல்லி தூக்கம் வராமல் இருக்க, என்னாச்சு என்று மாதவி கேட்க நடந்த விஷயத்தை பற்றி சுந்தரவல்லி சொல்லுகிறார். அந்த நந்தினியை நீங்க சும்மா விட கூடாது என்று சொல்ல, ஆப்பிள விஷம் வெச்சது நந்தினி கிடையாது அந்தப் பரமேஸ்வரி தான் என்று சொல்லுகிறார் நீங்க எப்படி சொல்றீங்க என்று கேட்க நல்லா யோசிச்சு பாரு அவ விஷம் வைக்கிறதா இருந்தா அண்ணன் சாப்பிட்டதுக்கு அப்புறம் உன்னையும் ஹரிதாவையும் சாப்பிட வேணாம்னு சொல்லி இருப்பாளா என்று சொல்ல கரெக்டு தான்மா என்று சொல்லுகிறார். அந்த பரமேஸ்வரி மேல் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் என்று சொல்ல நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். ரூமுக்கு வந்த சூர்யா டென்ஷனாக இருக்க எதுக்கு கோபப்படுறீங்க என்று சொல்ல அவன் நடிக்கிறான் அவன போய் நம்பிக்கிட்டு கொண்டிருக்க என்று சொல்லுகிறார்.
கண்டிப்பா அவன் நல்லவன் கிடையாது என்று சொல்ல, இப்ப எதுக்கு குடிக்காதவங்கள பாத்தா உங்களுக்கு எப்படி கோபம் வருது என்று சொல்ல, ஒரு மனுஷன் குடிக்காம நல்லவனா இருக்கக்கூடாதா என்று கேட்கிறார். அவன் பயங்கரமா நடிக்கிறான் தாய்க்குலத்து முன்னாடி என்னை அசிங்கப்படுத்த தான் அவன் இந்த திட்டத்தை போட்டு இருப்பான் என்ன குடிகார பையனா நிரூபிக்க பார்க்கிறான் என்று கோபப்படுகிறார். நீ முதலில் மனுஷங்களை புரிந்துகொள் என்று சொல்ல எனக்கு இது மாதிரி எல்லாம் பிரிச்சு பார்க்க தெரியாது என்று சொல்லுகிறார். உடனே சூர்யா கோபப்பட்டு நான் தனியா இருக்கணும் தயவு செய்து போ என்று சொல்ல நந்தனியின் முகம் மாறுகிறது உடனே சூர்யா நந்தினியை கவனிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி இடம் நந்தினி நான் ஒன்னு சொல்லட்டுமா என்று சொல்ல நீ ஒன்னும் பண்ண வேணாம் போய் காபி போடு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் நந்தினி சூர்யாவிடம் மனசுல என்னமோ படபடன்னு வருது ஐயா அம்மாவுக்கு ஏதோ ஆபத்து வரும் ஒன்னும் இல்ல ஒரு குருவி கத்துக்கிட்டே இருக்கு என்று சொல்லுகிறார்.
அதேபோல் சுந்தரவல்லி அருணாச்சலமும் காரில் செல்லும் போது அங்கு குறுக்கே கட்டையை போட்டு ரவுடிகள் அவர்களை அடிக்க சூர்யா சென்று காப்பாற்றுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…
"அஜித் படத்தில் இணையும் மோகன்லால்" அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில்…