Moondru Mudichu Serial Promo Update 16-07-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நீ இந்த வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளா சூர்யாவோட சந்தோஷமா இருக்கணும் என்று அருணாச்சலம் சொல்ல நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யா விவேக் சந்திக்க வர அவர் சூர்யாவிடம் எதுக்கு வீடு விக்கணும் என்று கேட்கிறார். நீ பேசாம சைனிங் அத்தாரிட்டிய உங்க அம்மாவுக்கோ இல்ல உங்க அப்பாவுக்கோ கொடுத்துடு பிரச்சனையே முடிஞ்சிடும் என்று சொல்லுகிறார். இருந்தாலும் நந்தினி எவ்வளவு பாதிக்கப்படுவா தெரியுமா என்று சொல்ல சூர்யா நான் ஒன்னு பண்ணா அதுல ஒரு விஷயம் இருக்குன்னு நீ நம்பர இல்ல வா என்று சொல்லி அழைத்து சொல்கிறார்.
மாதவி நந்தினியை கூப்பிட்டு சூர்யா இந்த வீடு விக்கப் போற விஷயம் உனக்கு தெரியும் தானே என்று கேட்க என்ன சொல்றீங்கம்மா எனக்கு புரியல என்று சொல்லுகிறார். ரொம்ப நடிக்காத என்று சுரேகா செல்ல உங்க எல்லாருக்கும் எப்ப தெரியுமோ அப்பதான் எனக்கும் தெரியும் என்று சொல்லுகிறார். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று சுரேகா சொல்ல அருணாச்சலம் இப்ப எதுக்கு அவகிட்ட வம்பு வைக்கிறீங்க என்று கேட்க பேசினாலே வம்பு இருக்கிறது தானா என்று சொல்ல நீங்க ரெண்டு பேரும் பேசலாம் எங்க போய் முடியும்னு தெரியும் என்று சொல்லுகிறார். அப்போ உங்களுக்கு தெரியுமா என்று கேட்க எனக்கும் தெரியாது என்று சொல்ல வெளியில் கார் வரும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியில் வந்து பார்க்க விவேக் மற்றும் கன்னியப்பன் மாறு வேஷத்தில் வீடு வாங்க வருகின்றனர். புரோக்கர் கூட வந்து நிற்க சூர்யா வந்து அவர்களை அழைத்துச் செல்கிறார். பிறகு அவர்களை உட்கார வைத்து விசாரிக்க இந்த வீட்டை வாங்க வந்திருப்பதாக சொல்லுகின்றனர்.
என்ன சூர்யா இது என்று அருணாச்சலம் கேட்க, மாதவி சுரேகா இருவரும் இதையெல்லாம் என்னென்ன கேட்க மாட்டீங்களா என்று கேட்கின்றனர். நந்தினி இவர்கள் இருவரின் குரலைக் கேட்டு சந்தேகப்படுகிறார். உடனே சூர்யா நம்ம டீல் பேச ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டு எவ்வளவு காசுக்கு வாங்கிக்கிறீங்க என்று கேட்க மாதவி சுரேகா சென்று சுந்தரவல்லி இடம் விஷயத்தை சொல்லி அழைத்து வருகின்றனர். இவங்க எதுக்கு இங்க வந்து இருக்காங்க என்று கேட்க வீடு வாங்க தான் என்று சொல்லுகிறார் புரோக்கர். இங்க பாருங்க நாங்க உங்க எல்லாரும் மேலயும் கொலை வெறியில இருக்கேன்னு சுந்தரவல்லி சொல்லுகிறார்.
இங்க இருந்து கிளம்புங்க என்ற சொல்ல, நீங்க யாரா வேணா இருங்க இன்னும் கொஞ்ச நேரம் நீங்க இங்க இருந்தீங்கன்னா உங்க ஸ்பேர் பார்ட்ஸ் தனித்தனியா வித்திடுவேன் என்று சொல்லுகிறார். அருணாச்சலம் பணம் இல்லாம என்ன பண்ண முடியும் என்று சொல்ல சூர்யா எனக்கு தேவை பணம் ஒன்னு கையெழுத்து போடட்டும் இல்லை இந்த வீட்டை விட்டுக் கொடுக்கட்டும் என்று சொல்லுகிறார். சரி நான் கையெழுத்த போடுகிறேன் என்று சுந்தரவல்லி சொல்ல சூர்யா அவர்களை அனுப்பி வைக்கிறார். மாதவி அசோகனிடம் பெரிய பார்ட்டியா இருப்பாங்க போல விசாரிச்சு வைங்க நம்மளுக்கு உதவும் என்று சொல்ல அசோகன் அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய கார் டிக்கிக்குள் மறைந்து கொள்கிறார்.
சூர்யா செக் புக் ஐ கொடுக்க சுந்தரவல்லி வேறு வழி இல்லாமல் நந்தினியை பார்த்து முறைத்துக் கொண்டு கையெழுத்து போடுகிறார். உடனே சூர்யாவிடம் இன்னைக்கு வேணா உன்கிட்ட தோத்து இருக்கலாம் ஆனா இது வீட்டோட பாரம்பரிய சொத்து அதை என்னைக்கும் விடமாட்டேன். ஒவ்வொரு அப்பா அம்மாவும் சொத்தை வாங்க எவ்வளவு பாடுபடுவாங்கன்னு தெரியுமா? அதை நீ அவ்வளவு ஈஸியா வித்துடுவியா, இந்த வீட்டை வாங்க நானும் உங்க அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கி கட்டி இருக்கும் தெரியுமா? இது ஒரு கோவில் என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கிச்சனில் கல்யாணத்திடம் நம்ம எல்லாம் ஆயிரம் இரண்டாயிரத்த பெருசா பாக்கறவங்க ஆனா இவங்க கோடிக்கணக்கில் கையெழுத்து போட சொல்றாங்க பாக்கவே பக்குனு இருக்கு என்று சொல்ல கல்யாணம் சூர்யா தம்பி சுந்தரவல்லி அம்மாவுக்கு வெச்சாருல செக்கு என்று சொல்ல சுந்தரவல்லி கேட்டு விடுகிறார்.
மறுபக்கம் சூர்யா உருட்டி மிரட்டி சாதிச்சிடலாம்னு பாக்குறாங்க நம்ம கிட்ட வேலை ஆகுமா என்று கேட்கிறார்.நான் தோத்துட்டேனா சுந்தரவல்லி எப்பவுமே தோக்கமாட்டா என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…