Moondru Mudichu Serial Promo Update 15-08-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அசோகன் மாதவி சுரேகா மூவரும் நந்தினி இந்த வீட்ல இல்லாம இருக்குறதுக்கு நீங்கதானே காரணம் எங்களுக்கு தெரியும் என பேசிக்கொண்டு இருக்க அருணாச்சலம் வருகிறார். சூர்யா வந்து ஏதாவது தெரிஞ்சுதா டாடி என்று கேட்க எதுவும் தெரியல என்று சொல்ல நானும் விசாரிச்சேன் எதுவும் தெரியல என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி அதுவே ஒரு தகர டப்பா அது காணாம போச்சுன்னா தூக்கி போடுறத விட்டுட்டு துக்க வீடு மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்துல போன் பண்ணி என்ன கடத்திட்டாங்க என்ன காப்பாத்துங்கன்னு சொல்லுவா என்று சொல்ல, எனக்கு இதுவரைக்கும் சந்தேகமும் இல்ல ஆனால் இப்போ இவங்க சொல்றத வச்சு பார்த்தா இவங்களுக்கு அவ வெளியே போனதுல ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு என்று சொல்லுகிறார்.
நீங்க நந்தினிக்கு பண்ணதுக்கு எல்லாத்துக்கும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகணும் என்று கோபப்பட, சுந்தரவல்லி இன்னைக்கு வீட்ல பூஜை இருக்கு நிறைய வேலை இருக்கு இவன் கிட்ட எதுக்கு பேசிகிட்டு வாங்க என்று அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் நந்தினி காரில் வந்து கொண்டிருக்க எந்த ஏரியாவில் இருக்க என கெஸ்ட் கேட்க, உங்க வீடு எங்க இருக்கு என்று கேட்ட நான் பட்டுக்கோட்டையில் இருந்து இங்க வந்து ஒரு வீட்ல வேலை செய்றேன் என சொல்ல எத்தனை குழந்தை இருக்கு என்று கேட்க அதெல்லாம் இல்லை என நந்தினி சொல்லுகிறார். பிறகு நான் இங்கேயே இறங்குகிறேன் என சொல்லி நந்தினி காரிலிருந்து இறங்கி கொள்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி வீட்டுக்கு பூஜைக்கு ஆட்கள் வந்து கொண்டு இருக்க சூர்யா மற்றும் அருணாச்சலம் இருவரும் நந்தினி எங்க போயிருப்பா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு சூர்யா நான் வேணும்னா நந்தினி வீட்டுக்கு போய் பாக்கவா என்று சொல்ல அப்படித்தான் போய் பாரு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வீட்டுக்கு கெஸ்ட் கார் வர குடும்பத்துடன் வந்து சுந்தரவல்லி வரவேற்க வருகிறார். பிறகு சுந்தரவல்லி அவரைப் பாராட்டிப் பேச, என்னை புகழ்ந்தது போதும் என சொல்லுகிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். நானும் உங்க அம்மா மாதிரி சாதாரண ஒரு பிசினஸ் உமன் தான் என்று சொல்ல சரி உள்ளே போகலாம் என்று சுந்தரவல்லி கூப்பிட, கொஞ்ச நேரம் இரு என்று சொல்லி காருக்கு பக்கத்தில் வர நந்தினி உள்ளே இருக்கிறார். அவரை அழைக்க நந்தினி வேண்டாம் என சொல்லியும் வலுக்கட்டாயமாக கூப்பிட சுந்தரவல்லி அதிர்ச்சி அடைகிறார்.
இந்த பொண்ண எதுக்கு கூட்டிட்டு வந்தேன்னு பாக்குறீங்களா என்று கேட்கிறார். பிறகு கார் சாவி எடுத்துக் கொடுத்த விஷயத்தையும் திருடர்கள் துரத்திக் கொண்டு வந்த விஷயத்தையும் சொல்லுகிறார். அதுக்கப்புறம் நான் இறக்கி விட்டுட்டேன் ஆனா கண்ணாடில இறக்கி விட்டுட்டு பார்த்ததுக்கு அப்புறம் என சொல்ல, மீண்டும் அந்த திருடர்கள் நந்தினியை துரத்தி வருவதால் காரை நிறுத்தி மீண்டும் நந்தினி காரில் ஏற்றி கொள்கிறார். இந்த விஷயத்தை அவர்களிடம் சொல்லிவிட்டு உன் பெயர் என்னமோ சொன்னியே என்று கேட்க எனக்கு தெரியும் அவங்க பேரு நந்தினி என சூர்யா சொல்லுகிறார். எனக்கு மட்டும் இல்ல என்னோட அம்மாவுக்கும் தெரியும் என சொல்லி கோர்த்து விடுகிறார்.
உடனே நந்தினியிடம் நீ இந்த வீட்ல தான் வேலை பார்க்கிறதா சொன்னியா என்று கேட்க சூர்யா அவ இந்த வீட்டு வேலைக்காரி இல்லை இந்த வீட்டோட வீட்டுக்காரி என்று சொல்லுகிறார். லவ் மேரேஜ் என்று கேட்க சூர்யா எங்க அம்மா பார்த்து பார்த்து பண்ண கல்யாணம் என்று சொல்ல வந்திருக்கும் கெஸ்ட் சுந்தரவல்லிக்கு அட்வைஸ் கொடுக்கிறார். உடனே நந்தினிக்கு சப்போர்ட் பண்ணி பேச, மாமியார் மருமகள் சண்டைக்கு இப்படி பண்ணுவியா என்று கேட்க எப்படி கரெக்டா சொன்னீங்க என்று சூர்யா சொல்ல எல்லாமே பேசி தீர்த்துக்கலாம் வாங்க என்று உள்ளே அழைத்துச் செல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் கெஞ்சி கூப்பிடுறது நாளா இந்த டிராமா எல்லாம் பண்றா என்னமோ என்று மாதவி சொல்ல, சூர்யா வந்த கெஸ்ட் இடம் நான் நந்தினிக்கு தாலி கட்டுவேன் என்று நந்தினிக்கே தெரியாது என்று சொல்லுகிறார்.
ஆனா இப்ப நந்தினிக்கு எல்லாரும் முன்னாடியும் தாலி கட்ட போறேன் என்று சொல்ல அப்போது ஸ்பெஷல் தாலியா என்று கெஸ்ட் கேட்க சூர்யா கரெக்ட் என சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…
நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…
துரியன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்காக ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி 5 சீசன் முடிந்த…