மாதவி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் உங்க அம்மாவையும் என்னையும் ஒரே இடத்துல கையெழுத்து போட சொன்னா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஆயிட முடியுமா? என்று கேட்க சூர்யா அவங்களும் மாற மாட்டாங்க நீயும் மாற மாட்டேன் என்று சொல்ல, உங்க அம்மா இடத்துல யாரா இருந்தாலும் ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்ல, இந்த விஷயத்துல நீ தலையிடாதே நான் சொல்றத மட்டும் நீ செய் என்று சொல்லுகிறார். என்னை யாராவது ஏமாத்திட்டாங்கன்னா என்ன பண்றது என்று கேட்க சூர்யா சிரிக்கிறார். அப்படியெல்லாம் உன்னை யாரும் ஏமாத்த மாட்டாங்க என்று இதுல பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை என்று சொல்லுகிறார். நீ அமைதியா இங்க நடக்கிறது வேடிக்கை மட்டும் பாரு என்று சொல்லிவிட்டு சென்று வருகிறார்.

மறுபக்கம் வெளியில் சுந்தரவல்லி கூப்பிடு கல்யாணம் வந்து என்ன விஷயம் என்று கேட்க சொத்து வாங்கும் விஷயம் பற்றி பேச வேண்டும் என்று சொல்ல சுந்தரவல்லி கூப்பிடுகிறார். என்ன விஷயம் என்று கேட்க நீங்க விக்க போற பிராப்பர்ட்டையே வாங்க வந்திருக்கேன் என்று சொல்ல எனக்கு புரியல என்று சொல்ல இந்த வீடுதான் விக்கிறதுக்கு வந்து இருக்கு என சொன்னவுடன் மாதவி சுந்தரவல்லி கோபப்பட்டு யார் சொன்னது என்று கேட்க சூர்யா நான் தான் சொன்னேன் என வந்து நிற்கிறார். அருணாச்சலம் வர அவரிடம் வீட்டை விக்க போகும் விஷயத்தை சொல்ல ஏன் என கேட்கிறார். நிறைய காசு தேவைப்படுது டாடி சம்பளம் கொடுக்கணும் அதனால தான் விற்க முடிவு பண்ணி இருக்க என்று சொல்ல யார் சொத்தை யார் விற்கிறது என்று சுந்தர வள்ளி கேட்கிறார்.

முதலில் இந்த வீட்டை வித்துடுவேன் காசு பத்தலனா இன்னும் இருக்கிற ப்ராப்பர்ட்டி எல்லாத்தையும் விட்டுடுவேன் என சொல்லுகிறார். உடனே சூர்யா வந்தவரிடம் நல்லபடியா இந்த வீட்டை முடிச்சு போடுங்க எனக்கு உடனே காசு வந்தது என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே மாதவி சுரேகா இருவரும் வந்து சூர்யா இவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கான் நீங்க அமைதியா இருக்கீங்க என்று கேட்கின்றனர். அவன் இந்த வீட்டை விற்க மாட்டான் என்ன பிளாக்மெயில் பண்ண இப்படி பண்றான் நானா அவனா என்று பார்த்துக்கிறேன் என்று சொல்ல நீங்க சூர்யாவை தப்பா புரிஞ்சு இருக்கீங்க, நீங்க சூர்யாவை நம்பாதீங்க இந்த விஷயத்துல அப்பா கிட்ட பேசுங்க என்று சொல்லுகிறார். சூர்யா தனியாக நின்று கொண்டு இருக்க நந்தினி பேச வேண்டும் என வருகிறார்.

நந்தினி சூர்யாவிடம் நீங்கள் எல்லாம் பணக்காரவங்க நினைச்சது நெனச்ச நேரத்துல உங்களுக்கு கிடைக்கும் எதுக்காகவும் நீங்க ஏங்கி இருக்க மாட்டீங்க ஆனா நாங்க அப்படி கிடையாது மழை பேஞ்சா பாய் தலையணைய தூக்கிக்கிட்டு எங்க தூங்குறதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கோம் எவ்வளவோ நாள் கோவில் திண்ணையில் தூங்கி இருப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்க அருணாச்சலம் இதை கவனிக்கிறார்.

ஒருவேளை நீங்க இந்த வீட்டை கட்டி இருந்தா உங்களுக்கு அந்த கஷ்டம் தெரிந்திருக்கும் எங்கள் ஊரில் எல்லாம் கஷ்டத்தினால பூர்வீக இடத்தை விக்கும் போது வாங்குறவங்க விக்கிறவங்களுக்கு மோதிரம் போடுவாங்க ஏன்னா அவங்க கஷ்டத்தோட வைக்கக்கூடாது என்பதற்காக தான் உங்களுக்கு வேணா இந்த வலி தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனா அருணாச்சலம் ஐயாவுக்கும் சுந்தரவல்லி அம்மாவுக்கும் இது மிகப்பெரிய மனக்கஷ்டத்தை கொடுக்கும். மூணு பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இருக்காங்க அப்ப இந்த வீட அவங்களுக்கு எவ்வளவு முக்கியமா இருக்கும் எனக்கென்னமோ நீங்க இந்த வீட்டை விற்கிறது சரியா தோணலை என்று சொல்லுகிறார். இத சொல்றதுக்கு கூட எனக்கு உரிமை இல்ல தான் ஆனா சொல்லணும்னு தோணுச்சு என்று சொல்ல சூர்யா எதுவும் பேசாமல் வர அருணாச்சலம் சூர்யாவை கூப்பிட்டும் எதுவும் சொல்லாமல் சென்று விடுகிறார்.

பிறகு அருணாச்சலம் நீ சொன்னது எல்லாத்தையும் கேட்டேன். சுந்தரவல்லி என் பொண்ணுங்களும் உன்னை அவ்வளவு அசிங்கப்படுத்தி பேசும்போதும் இந்த வீட்டுக்காக நீ பேசுற இந்த குணம் தான் நீ இந்த வீட்ல இருக்கணும்னு சொல்றதுக்கு காரணம். இனிமே நீ இந்த வீட்ல இருந்து போறன்னு சொல்லக்கூடாது இந்த வீட்டில இந்த வீட்டோட மருமகளா சூர்யாவோட பொண்டாட்டியா சந்தோஷமா இருக்கணும் அதுதான் என்னோட ஆசை என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி நந்தினி இடம் அது எப்படி உன் கிட்ட டிஸ்கஸ் பண்ணாம இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருப்பான் என்று கேட்க நீங்க என்ன சொல்றீங்கம்மா எனக்கு புரியல என்று சொல்லுகிறார். எனக்கு தேவை பணம் அதை இந்த வீடு எடுத்தாலும் சரி சைன் பண்ணாலும் சரி என்று சூர்யா சொல்லுகிறார்.

இவனோட பொண்டாட்டி இந்த வீட்டோட தலைவியா என்னைக்குமே ஆக விடமாட்டேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 15-07-25
jothika lakshu

Recent Posts

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…

11 hours ago

சூர்யா 46 : வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…

13 hours ago

லோகா: 25 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…

14 hours ago

விஜி சொன்ன வார்த்தை, சூர்யா எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

15 hours ago

கிஸ் : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…

18 hours ago

முத்து,மீனா சொன்ன வார்த்தை.. விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…

18 hours ago