moondru mudichu serial promo update 14-11-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா டாடி என்று கூப்பிட அவரும் மீட்டிங்கு போயிருக்காரு என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவை கட்டாயப்படுத்தி மாத்திரையை கொடுக்க கொஞ்ச நேரத்தில் சூர்யா நந்தினி என சொல்லிக் கொண்டே மயங்கி விடுகிறார். மறுபக்கம் கல்யாணம் நந்தினி இடம் எப்படிம்மா இவ்வளவு தைரியமா பேசின என்று பாராட்டி பேசுகிறார். நமக்குன்னு வரும்போது அமைதியா போயிடுவோம் ஆனா நம்ம மனசுக்கு புடிச்சவங்க ஏதாவது நடந்தால் இறங்கி சண்டை போடணும்னு என்று தோணும் இல்ல அதனால தான் என்று சொல்லுகிறார். இன்னைக்கு மாதிரியே நீ எப்பவுமே தைரியமா இருக்கணும் என்று சொல்ல, அதுவும் இல்லாம இந்த வாட்டி இவங்க பெரிய திட்டத்தை போட்டு இருக்காங்க என்று சொல்ல அவங்க என்ன வேணா செய்யட்டும் ஆனா என் மனசுல இருக்குற சூர்யா சாரை யாராலயும் விரட்ட முடியாது என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் மாதவி சுந்தரவல்லி இடம் நாங்கள் மேல சூர்யா பக்கத்துல இருப்போம் ஆனா கீழ நீங்க தான் பாத்துக்கணும் உங்களுக்கு மட்டும்தான் அவ பயந்துகிட்டு உள்ள வராமல் இருப்பா என்று சொல்ல சுந்தரவள்ளியும் சம்மதிக்கிறார். கல்யாணம் நந்தினி இடம் நீங்க ரெண்டு பேரும் ஒரு குழந்தையை பெத்துக்கணும் அப்பதான் கொஞ்சும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கும் இந்த வீட்ல இருக்குற சண்டை எல்லாமே குழந்தை சத்தம் கேட்டா இல்லாம போயிடும் கண்டிப்பா இது நடக்கும் என்று சொல்லுகிறார். எங்கேயோ பட்டுக்கோட்டை கிராமத்தில் பிறந்து வயல்வெளியில் வேலை செஞ்சுகிட்டு இருந்த நான் இப்படி ஒரு வீட்ல வந்து வாழ்வேன்னு நான் நினைக்கல அப்படியே போறப்போக்கில் போக வேண்டியதுதான் என்று சொல்ல நீ நினைக்கிறாயோ இல்லையோ அண்ணனா ஆசைப்படறேன் கண்டிப்பா நீ குழந்தை குட்டியோட சந்தோஷமா வாழ்வ என்று சொல்ல மாதவியும் சுரேகாவும் வர ஏழரைங்க வந்துடுச்சு என்று சொல்லுகிறார்.
உடனே நீ வீட்டுக்குள்ள கிச்சன் வரைக்கும் வரலாம் ஆனா சூர்யாவை பார்க்கணும்னு மேல வர வேலை வச்சுக்க கூடாது என்று சொல்லி விட்டு சென்று விடுகின்றனர். உடனே கல்யாணம் நீ அவங்க சொன்ன இன்னொரு விஷயத்தை கவனிச்சியா அவங்களே வீட்டை விட்டு துரத்த சொல்லிட்டு இப்போ கிச்சன் வரைக்கும் வரலாம்னு சொல்றாங்கன்னா அவங்க பயந்துட்டாங்கன்னு அர்த்தம் என்று சொல்ல நந்தினி நீங்க வேற இதை விட பெருசா யோசிப்பாங்க என்று சொல்லுகிறார். நான் சூர்யா சாரை பார்க்க முடியாது போல என்று சொல்ல நீ எதை பத்தியும் கவலைப்படாதம்மா இங்க இருக்குற தடையெல்லாம் தாண்டி சூர்யா சார நான் உன்ன பாக்க வைப்பேன் அண்ணன் நான் இருக்கேன் என்று சொல்லுகிறார். சூர்யா ரூமுக்கு வெளியில் உட்கார்ந்து கொண்டு அசோகன் புலம்பிக்கொண்டே இருக்க சூர்யா மீண்டும் கண் விழித்து நந்தினி நந்தினி என கத்திக்கொண்டே இருக்கிறார்.
சூர்யாவின் சத்தம் கேட்ட நந்தினி அவர் கத்திகிட்டே இருக்காரு என்று சொல்ல நான் போய் பாத்துட்டு வருவேன் என வீட்டுக்குள் வர சுந்தர வள்ளியை பார்த்து அமைதியாக நிற்க அசோகன் மீண்டும் மாதவியை அழைத்து வருகிறார். அவ வீட்ல இல்ல என்று சொல்ல பொய் சொல்லாதீங்க அவ இங்கதான் இருக்கா நான் நந்தினி பாக்கணும் என்று சொல்லி அடம் பண்ண நந்தினி சூர்யாவை பார்க்க முடியாமல் தவிக்கிறார். உடனே அசோகனிடம் உடனே மாத்திரையை எடுங்க என்று சொல்லி அவர்கள் மாத்திரையை கொடுத்து படுக்க வைத்து விடுகின்றனர். நந்தினியும் வேறு வழியில்லாமல் வெளியில் வந்து உட்கார்ந்திருக்கிறார். அருணாச்சலம் சுந்தரவல்லிக்கு போன் போட்டு சூர்யாவை கவனமாக பார்த்துக்க சொல்லுகிறார்.
உடனே நந்தினி மற்றும் கல்யாணத்துக்கு என்ன ஆச்சு அவங்க போன் ஏன் எடுக்கல என்று கேட்க முதல்ல அவங்க எடுக்கலன்றதனால எனக்கு பண்ணீங்களா என்று கோபப்படுகிறார். நான் சூர்யாவுக்கு எப்படி இருக்குன்னு கேட்க தான் நான் இப்படி பண்ண உடனே நீ குதிக்காத இப்போ நந்தினி எங்க என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் கல்யாணம் நந்தினி இடம் நான் போய் என்ன நிலவரம்னு பாத்துட்டு வரேன் அதுக்கப்புறம் நீ போய் பாரு என்று சொல்ல கல்யாணம் உள்ளே வந்து கவனிக்க அசோகன் தூங்கிக் கொண்டிருக்கிறார் மறுபக்கம் நந்தினியும் இந்த நேரத்துல போனா எல்லோரும் தூங்கிட்டு இருப்பாங்க சூர்யா சார் பார்த்துடலாம் என்று முடிவெடுக்க பிறகு உள்ளே சென்றவுடன் சுந்தரவல்லி கூப்பிடுகிறார்.. வேறு வழியில்லாமல் கல்யாணத்திடம் மனசுக்கு பிடிச்சவங்க கஷ்டத்துல இருக்கும்போது எதுவுமே செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கிற கொடுமை எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா மீண்டும் மயக்கத்தில் இருந்து எழுந்து நந்தினி என்று கூப்பிட மீண்டும் நந்தினி கவனிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…