போலீஸிடம் இருந்து தப்பிய சூர்யா, நந்தினி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா ஆட்டோவில் வரும்போது ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஒரு பார்சல் வரும் அதை வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் டூவீலரில் வந்த நபர் ஆட்டோவின் நம்பரை பார்த்துவிட்டு சூர்யாவிடம் பார்சலை கொடுத்துவிட்டு செல்கிறார். சூர்யாவும் ஆட்டோவில் வந்து கொண்டிருக்க மறுப்பக்கம் நந்தினியை ரவுடிகள் துரத்திக் கொண்டு வருகின்றனர். சூர்யா வந்து கொண்டிருக்க அப்போது போலீஸ் செக் பண்ணி கொண்டு இருப்பதை பார்த்து சூர்யா பயந்து தப்பித்து ஓட போலீஸ் அவரை துரத்தி வருகின்றனர். நந்தினி ஒரு இடத்தில் மறைந்து இருக்க இருமல் வந்தவுடன் அவர்கள் சுதாரித்து விடுகின்றனர். உடனே நந்தினி சுத்தி வளைக்க நந்தினி அங்கிருந்தும் தப்பித்து ஓட பார்த்துவிட்டு மீண்டும் துரத்துகின்றனர். மறுபக்கம் சுந்தரவல்லி மற்றும் அருணாச்சலத்திற்கான திருமண நாள் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடக்கிறது. கேக் வெட்டிடலாம் என்று அசோகன் சொல்ல முதல்ல இவங்களுக்கு கல்யாணம் நடக்கட்டும் என்று சுரேகா சொல்லுகிறார். அன்னைக்கு என்ன எல்லாம் நடந்ததோ அது திருப்பியும் பண்ணனும் என்று சொல்ல அருணாச்சலம் எதுக்காக இதெல்லாம் என்று கேட்கிறார். பிறகு ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக்கொள்ள அனைவரிடமும் அர்ச்சதை கொடுக்கின்றனர். உடனே அருணாச்சலம் தாலி கட்டுவது போல ஆக்ஷன் பண்ண அனைவரும் ஆசீர்வாதம் செய்கின்றனர். சூர்யா அங்கிருந்து தான் ஒன்றில் பீரோ இருக்க அதில் ஏறி மறைந்து கொள்கிறார். அனைவரும் கேக் வெட்ட கூப்பிட அருணாச்சலம் இவ்வளவு நேரம் நீ சொன்னதெல்லாம் கேட்டாச்சு சூர்யாவும் நந்தினியும் வந்தால்தான் நான் கேக் வெட்ட வேண்டும் என்று சொல்லுகிறார்.

அவங்க வராமல் போய்ட்டா என்ன பண்ணுவீங்க என்று சுந்தரவல்லி கேட்க, அவன் வாக்கு கொடுத்து இருக்கான் கண்டிப்பா வருவான் என்று சொல்கிறார்.எப்ப பாத்தாலும் அவ காணாம போவா அவளை யாராவது கண்டுபிடிப்பீங்க இதே வேலையா வச்சிருக்கீங்க இந்தவாட்டி அதே மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கீங்க கண்டிப்பா அவ வரமாட்டா என்று சொல்லுகிறார். என் புள்ள கண்டிப்பா வருவான் என்று சொல்ல இப்போ கேக் கட் பண்ண வர முடியுமா முடியாதா என்று சுந்தரவல்லி கேட்க சூர்யா வந்தா தான் அவன் வந்தா கட் பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டு அருணாச்சலம் அங்கிருந்து நகர்ந்து வந்து விடுகிறார். ரவுடிகளின் முதலாளி போன் போட்டு இன்னும் சரக்கே வரல ஒரு கோடி ரூபாய் மதிப்பு எங்கே என்று கேட்க அவன் பொண்டாட்டி வச்சி தான் மிரட்டி கிட்டு இருந்தோம் அவ தப்பிச்சிட்டா ஒருவேளை அவ சொல்லிட்டாளே என்னன்னு தெரியல என்று சொல்ல கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க அவளை எப்படியாவது புடிச்சுடுவோம் என்று சொல்லுகின்றனர். அவன் அங்கே வர வாய்ப்பு இருக்கு வந்த அவனை புடிச்சு வைங்க என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். மறுபக்கம் நந்தினி சூர்யா ஏரிய வண்டியிலேயே ஏரி பீரோவுக்கு எதிரில் இருந்த பிரிட்ஜுக்குள்ள ஒளிந்து கொள்கிறார். உடனே பங்க்ஷனில் இருப்பவர்கள் இந்த விழாவை இன்னும் சிறப்பிக்க டான்ஸ் ஆடுங்க என்று சொல்ல சுரேகா மாதவி என அனைவரும் சுந்தரவல்லி டான்ஸ் ஆட சொல்லுகின்றனர்.

சுரேகா பாட்டு போட சுந்தரவல்லி மாதிரி என அனைவரும் டான்ஸ் ஆடுகின்றனர். அந்த வண்டி மீண்டும் அட்ரஸ் கேட்க நிற்க அந்த ரவுடிகள் வண்டியில் வருகின்றனர் அப்போது இந்த குடோன் அட்ரஸ் எங்கே என்று கேட்க இது எங்களோட குடோன் தான் இந்த பக்கம் போன ஒரு கேட்டு வரும் உள்ள இறக்கி வச்சுட்டு போன் பண்ணி சொல்லு என்று சொல்லிவிடுகின்றனர். நந்தினியும் சூர்யாவும் ஒருவருக்கொருவர் மாத்தி மாத்தி திறந்து பார்த்துக் கொள்ளுகின்றனர் ஆனால் இருவரும் பார்த்துக் கொள்ளாமல் இருக்க, வண்டி நந்தினி கடத்தி வைத்திருந்த குடோனுக்கே வந்து விடுகிறது. பீரோவை இறக்கம் முயற்சி செய்ய வெயிட்டாக இருப்பதால் அனைவரும் தூக்கி கீழே இறக்கி வைக்கின்றனர். உடனே நந்தினி இருக்கும் ஃப்ரிட்ஜையும் இறக்கி வைக்கின்றனர். பீரோவையும் பிரிட்ஜையும் எடுத்துக் கொண்டு வந்து உள்ளே வைத்துவிட முதல்ல பிரிட்ஜில் எல்லா பொருளையும் வச்சிடலாம் என்று பிரிட்ஜ் திறக்க நந்தினியை பார்த்து சிரிக்கின்றனர். இவளை எங்கெல்லாம் தேடினோம் இங்கே இருக்கா பாருங்க என்று சொல்ல வெளியில் கூப்பிடுகின்றனர். லேட் பண்ண வேணாம் உடனே சூர்யாவுக்கு போன் போடு என்று சொல்ல அவனும் போன் போட்டு நாங்க அனுப்புற லொகேஷனுக்கு பத்து நிமிஷத்துல வந்து சரக்கு கொடுத்துட்டு உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போ என்று சொல்லுகிறார். லொகேஷன் காட்டுவதை பார்த்து பீரோவை திறந்து வருகிறார்.

என்னடா ஷாக் மேல ஷாக் குடுக்குறீங்க என்று சொல்ல, முதல்ல எங்களோட பார்சல் கொடு என்று சொல்ல, சூர்யாவும் கொடுத்துவிட்டு நந்தினியை அழைத்துச் செல்ல அவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். இப்படியே உங்களை விட்டா எப்படி நாங்க என்ன தொழில் பண்றோம்னு உங்களுக்கு தெரிஞ்சிருச்சு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண நாங்கதானே மாட்டுவோம் என்று சொல்லுகிறார். இவன கைய கால புடிச்சு கட்டிப்போடுங்கடா என்று சொல்ல சூர்யா அவர்களிடம் சண்டை போடுகிறார். மறுபக்கம் நந்தினியை சாரில் உட்கார வைத்து கட்டிப்போட்டு பட்டாசை மேலே சுத்துகின்றனர். கொளுத்த போகும் நேரம் பார்த்து சூர்யா அவர்களை தள்ளிவிட்டு சண்டை போடுகிறார். உடனே நந்தினியின் மேலே இருக்கும் பட்டாசுகளை எடுத்துவிட்டு நந்தினியை கழட்டி விடுகிறார்.

சூர்யாவை அங்கிருப்பவர்கள் சுற்றி பிடித்து விட நந்தினி கட்டையை எடுத்து அவர்களை அடிக்க அந்த இடத்திற்கு போலீஸ் வந்து விடுகின்றனர். உடனே அவர்களை போலீஸ் அடித்து அழைத்துச் சென்று விட சூர்யா வா நந்தினி என கூப்பிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial promo update 14-02-26
jothika lakshu

Recent Posts

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

47 minutes ago

அப்பா அம்மா பேச்சை கேளுங்க சந்தோஷமா இருங்க.. கேபிஒய் பாலா கொடுத்த அட்வைஸ்..!

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…

2 hours ago

பெண்கள் எங்கள் எதை கொடுத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பார்கள்.. கீர்த்தி சுரேஷ் பேச்சு.!!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…

2 hours ago

Vaan Vaan Song

https://youtu.be/9Qyv0EH4QSQ?si=ShoB3XY3-utmKKO2

5 hours ago

பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கிய மனோஜ் விஜயா.. ரவியை பிளாக் மெயில் பண்ணும் நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

8 hours ago

லைஃப்ல நம்மளுக்கும் ஒரு பாயிண்ட் வரும்.. அப்போ உலகமே நம்மளை வேடிக்கை பார்க்கும்.. மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ்…

1 day ago