நந்தினியை தேடும் சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சூர்யாவை டிஸ்டாச் பண்ணி கூட்டிட்டு போகணும் என்று சொல்ல கரெக்டா சொன்னீங்கம்மா அப்பா இல்லாத இந்த பத்து நாள் சூர்யா படுத்துகிட்டு இருக்கும்போதே அவள வீட்ட விட்டு அடிச்சு தொரத்தணும் என்று சொல்ல சுந்தரவல்லி அப்போ இந்த வீட்டை விட்டு அனுப்பிடுங்கன்னு சொல்லுவா இப்ப அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கா எப்படி போவா என்று சொல்ல முதல்ல அவளை சூர்யா ரூமுக்குள்ள விடக்கூடாது அதுவும் இல்லாம மாடிக்கே விடக்கூடாது என்று சொல்ல அதுவும் இல்லாம சூர்யா மனசுல நந்தினி வீட்ல இல்ல அவ கோச்சிக்கிட்டு போயிட்டான்னு சொல்லி அவனை நம்ப வைக்கணும். நம்ம அவளுக்காக எவ்வளவு பண்ணோ அவ நம்மள தவிக்க விட்டுட்டு போயிட்டாள் என்று அவன் நினைக்க வைக்கணும் சூர்யா அவளை மனதளவில் வெறுத்துட்டா ஈஸியா அடிச்சு விரட்டி விடலாம் என்று சொல்லுகிறார். மாதவி சொல்றதுதான் சரி அப்படியே செஞ்சுடலாம் என சுந்தரவல்லி சொல்லுகிறார் மறுபக்கம் அருணாச்சலம் கிளம்பி விட்டு வெளியில் வந்து நந்தினி இடம் சூர்யா அவ பத்திரமா பாத்துப்போமா என்று சொல்ல நான் பாத்துக்குவாயா என்று சொல்லுகிறார் ஆனால் அவர்கள் என்ன சொல்லுவாங்களோ பயமா இருக்கு என்று சொல்லுகிறார்.

மாதவி அடிச்சதுனால இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேசுவாங்க அவ்வளவுதான் நம்ம ஏதாவது ஒன்னு தான் எனக்கு போன் பண்ணு நான் பாத்துக்குறேன் என்ற சொல்லிவிட்டு போக கல்யாணமும் அவங்க என்ன பண்ண காத்து இருக்காங்களோ தெரியலையே என்று சொல்ல எல்லாமே சமாளிச்சு தான் ஆகணுமா என்று சொல்லுகிறார். உடனே உள்ளே வந்த நந்தினி உட்கார கொஞ்ச நேரத்தில் விஜி போன் போட்டு பேசுகிறார். அண்ணனுக்கு ரொம்ப உள் காயம் வெளி காயம் அதிகமா இருக்கு அவர நீதான் நடக்க விடாம பார்த்துக்கணும் என்று சொல்ல அதை விட வேற என்ன வேலை இருக்கு அக்கா என்று சொல்லிவிட்டு யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி பெருசு பண்ணிக்காத என்று சொல் எல்லாம் பழகினது தானே என்று நந்தினி சொல்ல சரி நந்தினி பார்த்து போ என சொல்லிவிட்டு போனை வைக்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி டாக்டரிடம் பேச அவரு மோஸ்ட் ஆஃப் டைம் மயக்கத்துல தான் இருப்பாரு கண் முழிக்கும் போது ஜூஸ் அல்லது இளநீர் இது மாதிரி கொடுங்க அவர் ரெஸ்ட் எடுக்கிறது ரொம்ப முக்கியம் என்று சொல்லி டிஸ்சார்ஜ் பண்ணுகின்றனர்.வீட்டுக்கு வந்து இறங்க ஆம்புலன்ஸில் இருந்து சூர்யாவை வெளியில் இறக்குகின்றனர்.

சூர்யாவை உள்ளே அழைத்துப் போக உடனே நந்தினி மேலே போக முயற்சி செய்ய சுந்தரவல்லி தடுத்து நிறுத்தி நீ எதுக்கு இப்போ மேல போற என்று கேட்கிறார் சூர்யா சார் பார்த்துக்கணும் என்று சொல்ல நீயும் உங்க அப்பனும் பண்ணதெல்லாம் போதாதா அவன மொத்தமா அனுப்ப பாக்குறீங்களா சூர்யா சார பக்கத்துல இருந்து பார்த்துக்கிறேன் அம்மா என்ற சொல்ல நாங்க இருக்கோம்ல எங்களுக்கும் கை கால் இருக்கு அவனுக்கு அம்மா நான் இருக்கேன் அக்கா,தங்கச்சி இருக்காங்க பார்த்துப்பாங்க படிக்கட்டுல கால் எடுத்து வச்சா கால ஒடச்சிடுவேன் கண்ணு முன்னாடி நிக்காத இங்க இருந்து போயிடு என்று நந்தினியை திட்டி அனுப்புகிறார். நந்தினி கெஞ்சி கொண்டே இருக்க மூஞ்சி எதிரில் நிக்காத தத்திரம் புடிச்ச மாதிரி இருக்கு என்று சொல்லிவிட்டு மேலே சென்று விடுகின்றனர். பிறகு சுந்தரவல்லி மேலே வந்து மாதவியை பார்க்கச் சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கீழ நர்சு இறங்கி வர நந்தினி சூர்யா சார் எப்படி இருக்கிறார் என்று கேட்க மயக்கத்தில் தான் இருக்கிறார் பயப்பட வேண்டியதில்லை என்று சொல்லுகின்றனர்.

சுந்தரவல்லி நந்தினி திட்டியதை நினைத்து மூவரும் சந்தோஷப்பட இப்படியே இதை விடக் கூடாது ஒன்னு இவ அப்பாவுக்கு போன் பண்ணுவா இல்ல அப்பா இவளுக்கு போன் பண்ணாரு அவகிட்ட இருந்து முதலில் போனை புடுங்கனும் அதே மாதிரி கல்யாணத்துக்கிட்ட இருக்கிற ஃபோனையும் புடுங்கனும் என்று சொல்லுகிறார். நம்ம கேட்டா போனை கொடுக்க மாட்டார் என்று சொல்ல நம்ம கேட்டா கொடுக்க மாட்டா ஆனால் அம்மா கேட்டா கொடுப்பா என்று சொல்லி சுந்தரவல்லி இடம் வந்து விஷயத்தை சொல்லுகின்றன. சுந்தரவல்லியும் வந்து நந்தினி இடம் எடுத்துட்டு வா என்று சொல்ல எதுக்குமா போன் கேக்குறீங்க என்று சொல்லுகிறார் ஏன் சொன்னா தான் எடுத்துட்டு வருவியா போய் எடுத்துட்டு வாடி என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி நந்தினி கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி வெளியே போடி என்று சொல்ல உடனே நந்தினி உங்க தாலிக்கெல்லாம் என்ன மதிப்பு இருக்கோ அதே மாதிரி அவர்கள் கட்டின என் கழுத்துல இருக்குற தாலிக்கும் பொருந்தும் என்று சொல்ல மறுப்பக்கம் சூர்யா கண் முழித்து நந்தினி என சொல்லுகிறார் வலிக்குது நந்தினி என பேசுகிறார். சூர்யா சார் கண்ணு முழிச்சி அவர் எழுந்து நடக்கிற வரைக்கும் நான் இங்கதான் இருக்க போறேன் என உட்கார்ந்து விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

14 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

14 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

14 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago