Moondru Mudichu Serial Promo Update 10-7-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் கடத்தல்காரன் சூர்யாவுக்கு போன் போட்டு நந்தினியை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல நந்தினி சூர்யா சார் சூர்யா சார் என கத்துகிறார். உன் பொண்டாட்டி உயிரோட வேண்டுமா இல்ல கை கால் தனியா வேணுமா என்று மிரட்ட சூர்யா எதுக்காக அவளை கடத்தி இருக்க என்று பதட்டமாக பேசுகிறார். 50 லட்சம் பணத்தோட நான் சொல்ற இடத்துக்கு வந்தா உன் பொண்டாட்டியை அனுப்பிவிடுவேன். பணம் தருவதாக சூர்யா சொல்ல, பணம் தரேன்னு சொல்லி அப்புறம் போலீஸ் கூட்டிட்டு வந்தேனா இவளை உயிரோட பார்க்க முடியாது என்று மிரட்டுகிறார். உடனே எங்க வரணும்னு சூர்யா கேட்ட அதை நான் போன் பண்ண சொல்றேன் என சொல்லி வைத்து விடுகிறார். உடனே விவேக்கிற்கு போன் போட்டு பணம் ஏற்பாடு பண்ண விஷயத்தை சொல்லி, பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வர சொல்ல சூர்யா வீட்டுக்கு வந்து நந்தினி கடத்திய விஷயத்தையும் பணம் கேட்கும் விஷயத்தையும் சொல்ல அருணாச்சலம் யார் கடத்தி இருக்காங்க என்ன விஷயம் என்று கேட்க அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது முதலில் அவளை நல்லபடியா காப்பாத்தணும் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார்.
உடனே கொஞ்ச நேரத்தில் விவேக் பணத்துடன் வீட்டுக்கு வர கல்யாணத்தை அனுப்பி சூட்கேஸ் எடுத்துக் கொண்டு வர சொல்லுகிறார். பையில் இருக்கும் 50 லட்சம் பணத்தைப் பார்த்து மாதவி அசோகன் வாயை பிளக்கின்றனர். உடனே சுரேகா இவ்வளவு பணத்தால் அவளுக்காக கொடுக்க போறானா என்று கேட்கிறார். உடனே சுந்தரவல்லி நீ என்ன நெனச்சுக்கிட்டு இருக்க நான் இது எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அவளுக்காக இத தூக்கி கொடுக்கிறாயா என்று கேட்க நான் இவங்க பணத்தை எடுக்கல, வெளியில தான் கடன் வாங்கி இருக்கேன் என்று சொல்ல கடன் வாங்கி செலவு பண்ற அளவுக்கு அவ என்ன அவ்ளோ பெரிய ஆளா என்று கேட்க சூர்யா எனக்கு மனசாட்சி இருக்கு அவளுக்காக 50 லட்சம் இல்ல 50 கோடி கூட செலவு பண்ணுவேன் என சொல்லுகிறார். இதை கேட்க யாருக்கும் உரிமை கிடையாது என்று சொல்ல சுந்தரவல்லி கோபப்படுகிறார்.
கல்யாணம் சூட்கேஸ் எடுத்துக்கொண்டு வராததால் கடுப்பான சூர்யா மீண்டும் பையில் பணத்தை எடுத்துக்கொண்டு கோபமாக மேலே சென்று விடுகிறார். மறுபக்கம் வட்டிக்கார பெண்மணி ரவுடி இடம் உஷாரா இரு பணம் ரொம்ப முக்கியம் போலீஸ் வந்தால் யோசிக்காமல் இவளை போட்டு தள்ளிடு என்று சொல்லி காரில் அழைத்துச் செல்கின்றனர். ரவுடி போன் பண்ணி பணம் ரெடியா என்று கேட்க அதெல்லாம் ரெடியா இருக்கு எங்க வரணும் என்று கேட்கிறார். நீ எங்கேயும் வர வேண்டாம் நான் ஸ்பாட்டுக்கு வந்துட்டு சொல்றேன் அங்கே இரு என்று சொல்லுகிறார்.
விவேக் சூர்யாவிடம் அவன் போன் பண்றதுக்குள்ள உனக்கு தெரிஞ்ச போலீஸ் கிட்ட பேசலாமா என்று கேட்க ஏற்கனவே நேரம் ஆயிடுச்சு இதுக்கு மேல போலீசுக்கு போக முடியாது நந்தினியோட உயிர் முக்கியம் என சூர்யா காரை நிறுத்தி காத்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் நந்தினி விட்டுடுங்க விட்டுடுங்க என பேசிக்கொண்டே இருக்க ரவுடிகள் கையையும் வாயையும் கட்டி விடுகின்றனர். சிங்காரம் சைக்கிளில் வர நந்தினி கடத்தி வரும் கார் சைக்கிள் மீது மோதி கீழே விழுந்து விடுகிறார். சிங்காரம் அவரிடம் பார்த்து வர வேண்டியதுதானே என்று கேட்டுக் கொண்டிருக்க ரவுடிகள் சிங்காரத்தைத் திட்டி அனுப்பி விடுகின்றனர். சிங்காரம் திரும்பி பார்க்கும் போது காரில் இருக்கும் நந்தினி பார்த்துவிட்டு காரை பின் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி வருகிறார்.
கடத்தல்காரன் சூர்யாவிற்கு ஃபோன் போட்டு பணம் ரெடியா என்று கேட்க, அதெல்லாம் ரெடியாக இருக்கிறது. நந்தினி உடன் பேச வேண்டும் என்று சொல்ல அதெல்லாம் பணத்தை வாங்காமல் பேச முடியாது என்று சொல்லி விடுகிறார். பணத்தை தரேன்னு சொல்லி போலீஸ்ல சொல்லிட்டனா அவளை போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்போம் என்றுசொல்லிவிட்டு எந்த இடத்துக்கு வரணும்னு நான் போன் பண்ணி சொல்றேன் என சொல்லிவிட்டு மீண்டும் போனை வைத்து விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் கடத்தல் காரர்களிடம் பணத்தை கொடுத்த சூர்யா ஹெலிகேம் வைத்து அவர்களை ஓட விடுகிறார். அருணாச்சலம் போலீஸிடம் நந்தினியை பற்றி ஏதாவது தெரிந்ததா என விசாரிக்கிறார்.
நந்தினி காரிலிருந்து இறங்கி ஓடி வர சூர்யா கவனித்து விட்டு ஹெலிகேம் ரிமோட்டை விவேக்கிடம் கொடுத்துவிட்டு ஓடி வருகிறார். நந்தினியை சந்தித்தாரா? காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…