moondru mudichu serial promo update 09-09-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவின் இன்டர்வியூ பார்த்து மாதவி மற்றும் சுந்தரவல்லி கோபமாக சென்றுவிட நந்தினி மயங்கி விழுந்து விடுகிறார். உடனே கல்யாணம் சத்தம் போட அருணாச்சலம் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். மறுபக்கம் சுதாகர் இந்த இன்டர்வியூ பார்த்து டிவியை உடைத்து விட்டு சுந்தரவல்லிக்கு போன் போடுகிறார். டிவியை ஆன் பண்ண உடனே டிவியில அவ மூஞ்சி வருது அதனால டிவியை தூக்கி போட்டு உடைத்து விட்டேன் அவளை பார்த்த உடனே என்னோட ரத்தம் கொதிக்குது என்று கோபப்படுகிறார். அவளுக்கு எதுக்கு மாலை மரியாதை, கொஞ்ச நாள் நான் பேசலன்னு தெரிஞ்சு நீங்களும் அவளும் கொஞ்சிக் கொளாவ ஆரம்பிச்சிட்டீங்களா என்று கேட்க,அவ என்னோட வாழ்நாள் எதிரி அவ கூட என்னால் ராசியாக முடியாது என்று சொல்ல, நீங்க வைங்க அவளை நான் பாத்துக்குறேன் என சுதாகர் கோபமாக போனை வைக்கிறார்.
மாதவி சுரேகா அசோகன் மூவரும் சூர்யா பண்ண விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க சூர்யா காரில் வந்து இறங்கி டாடி டாடி என சந்தோஷமாக கூப்பிடுகிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் வர ஸ்வீட் கொடுக்கிறார். இந்த ஸ்வீட் எதுக்கு தெரியுமா அடுத்த வருஷம் நந்தினி சிஇஓ சீட்ல உக்கார வச்சு அவளை சிறந்த தொழிலதிபர் அவார்ட் வாங்க வைப்பேன் என சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகி சென்று விடுகிறார். ரூமுக்கு வந்த நந்தினி படுக்க ஏற்பாடுகளை செய்ய வழக்கம்போல நீ என்கிட்ட ஏதாவது கேப்ப எதுவுமே கேட்கலையா என்று கேட்கிறார். நான் கேட்டா மட்டும் நீங்க செய்யாமையா இருக்க போறீங்க என்று சொல்ல, நீ சொல்லப் போறியோ இல்லையோ நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என உட்கார சொல்லுகிறார்.
இப்போ நான் டிவில பல விஷயத்துக்கு இந்த வீட்ல உன்ன யாராவது ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் சொல்லல என்று சொல்லுகிறார். இப்போ இந்த வீட்ல தெளிவான ஆடு புலி ஆட்டம் ஆரம்பிச்சிருக்கு ஒரு பக்கம் ஆடு ஒரு பக்கம் புலி இதுல யாரு ஜெயிக்க போறாங்க என்றுதான் விஷயம் என சொல்லுகிறார். இதுல நீ ஆட இருக்க போறியா இல்ல புலியா இருக்க போறியா என்று கேட்க ஒரு குடும்பத்துல இது தேவையா என்று கேட்கிறார். உனக்கும் எனக்கும் சண்டை வர வைக்க, பகல் இரவா வேலை பாக்குறாங்க. அவங்களுக்கு உன் மேல இருக்கிற ஒப்பினியன் மாத்தணும் அதுக்கு உன்னோட உதவி ரொம்ப முக்கியம். நான் உன்னை கோபுர உச்சியில் கண்டிப்பா உட்கார வைப்பேன். இதுல நீ என் கூட இருப்பியா இல்ல ஒதுங்கி நிற்க போறியா நல்லா யோசிச்சு பாரு என்று சொல்லிவிட்டு தூங்கச் சொல்கிறார்.
சுந்தரவல்லி வெளியில் நின்று கொண்டிருக்க மாதவி வந்து சூர்யா எண்ணமா இப்படி பேசிக்கிட்டு இருக்கான் என்று கேட்க, உன் தம்பி சொல்ற ஆடு புலி ஆட்டத்துல அவன் புலி தான் ஆனா ஆடு நான் இல்ல அந்த வேலைக்காரி நந்தினி. நாளைக்கு நீ நினைக்கிறது எல்லாமே நடக்கும் என சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு சுரேகாவை கூப்பிட்டு கிச்சனில் இருக்கும் கறித்துணிகளை எடுத்துக்கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். சுரேகாவும் கிச்சனில் இருக்கும் துணிகளை எடுத்துக்கொண்டு வந்து சுந்தரவல்லி இடம் கொடுக்க உடனே சுந்தரவல்லி சூர்யா உயிராக நினைக்கும் சட்டையை சுரேகாவிடம் கொடுத்து இதை எடுத்துக்கிட்டு போய் வை என கொடுத்து அனுப்ப சுரேகாவும் வைத்து விடுகிறார். பிறகு சுந்தரவல்லி இடம் வந்து எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது போ என சொல்லுகிறார்.
பிறகு கல்யாணத்தைக் கூப்பிட்டு எனக்கு டாக்டர் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிக்க சொல்லி இருக்காங்க நீ போய் கடையில் வாங்கிட்டு வா பக்கத்துல இருக்குற கடையில இல்லனாலும் தூரமா இருக்குற கடையிலையாவது வாங்கிட்டு வா எவ்வளவு லேட் ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி பிளான் போட்டு கல்யாணத்தை வெளியில் அனுப்பி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவின் சட்டையில் நந்தினி துடைத்திருந்ததை பார்த்து சூர்யா கன்னத்தில் அறைந்துவிட நந்தினி கண் கலங்கி அழுது கொண்டிருக்க சூர்யா வந்து பேசுகிறார்.நீங்க என்கிட்ட வராதீங்க நான் எந்த தப்பும் பண்ணல என்று சொல்லுகிறார் நந்தினி. பிறகு அருணாச்சலத்திடம் சாம்பார் கொட்டிடுசி தொடச்சுக்கிட்டு இருந்தேன் திடீர்னு வந்து அடிச்சிட்டாரு என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சூர்யா நந்தினி இடம் அதை வச்சு நீ தொடச்சி கிட்டு இருந்த உடனே அந்தக் கோவத்துல உடனே என கண்கலங்கி நந்தினி இடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…
Thooimai India Lyrical Video | PARRISU | Ranjit Govind , Vandana Srinivas | RAJEESH K…
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…