நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா அசோகனை கூப்பிட்டு வீட்டுக்குள்ளே எப்படி மாமா இருக்க கேட்டுவிட்டு உன்னோட கை கண்ணுக்கெல்லாம் என்ன ஆச்சு என்று பாசமாக கேட்கிறார். பிறகு இந்த கை வலி சரியாகனும்னா நம்ம சரக்கு அடிக்கலாம் என அழைத்துச் செல்கிறார். பிறகு காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சூர்யா மற்றும் அசோகன் இருவரும் குடிக்க ஆரம்பிக்கின்றனர்.பிறகு குடித்துவிட்டு இவ்வளவு நாள் இல்லாம இப்ப எதுக்கு என்ன குடிக்க கூட்டிட்டு வந்த என்று அசோகன் கேட்க என்ன சந்தேகப்படறியா என்று சூர்யா கேட்கிறார். நான் உன்ன லவ் பண்றேன்னு சூர்யா சொல்லுகிறார். மீண்டும் அசோகன் குடித்துக் கொண்டே இருக்க ஃபுல் போதையாக இருக்க பிறகு கண்ணில் எப்படி அடிபட்டது என்று கேட்க அசோகனின் நடந்த விஷயத்தை சொல்லுகிறார்.

கையில் அடிபட்ட விஷயத்தை கேட்க அதையும் சொல்லுகிறார். பிறகு இருவரும் வீட்டுக்கு வந்து விட சூர்யா காரில் இருந்து இறங்கி நீ உள்ளே வர வேண்டாம் மாமா நீ இந்த வீட்டோட மருமகன் உனக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க வேண்டும் நான் கூப்பிடுற வரைக்கும் நீ வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சூர்யா வீட்டுக்குள் கிப்ட் பாக்ஸ் எடுத்து வர எதுக்கு கிப்ட் என்று கேட்கிறார். இந்த கிப்ட் யாருக்கு தெரியுமா என்னோட உடன்பிறப்புகளுக்குத்தான் என்று சொல்லுகிறார். என்னோட அக்காவுக்கும், தங்கச்சிக்கும் கிப்ட் கொடுப்பது யாராலும் தடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு கல்யாணத்தை கூப்பிட்டு அழைத்து வரச் சொல்லுகிறார். பிறகு மாதவி,சுரேகாவும் வந்துவிட அவர்களை வரவேற்று உட்கார வைக்கிறார்.

சுரேகா எனக்கு கிப்ட்டா என்று சந்தோஷப்பட உனக்கு தான் தங்கச்சி என்று சூர்யா சொல்லுகிறார். கிப்டை பிரிக்கும் போது இங்கு யாரோ ஒருத்தர் மிஸ் ஆகுறாங்க என்று சொல்ல அசோகன் சார் என்று சொல்ல கல்யாணம் அவர கார்ல விட்டுட்டு வந்து இருக்கேன் கூட்டிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். கல்யாணமும் அவரை அழைத்து வர முடியாமல் அழைத்து வருகிறார். பிறகு அப்படி என்னதான்டா வச்சிருக்க என்று அருணாச்சலம் கேட்க இன்னும் முக்கியமான ஆள் வரணும் என்று நந்தினியை கூப்பிடுகிறார். உடனே மாதவி நீ பேசறது எதுவும் சரியில்ல கிப்ட் வேண்டாம் என கிளம்ப போக பிரதர் குடுக்குற கிப்ட் போய் வேணான்னு சொல்லுவாங்களா என்பது சூர்யா கேட்கிறார். சரி கிப்ட் பிரிச்சிடலாமா என்று கேட்கிறார்.

முதலில் மிக்ஸி ஜாடி எடுக்க எதுக்குடா இதை பேக் பண்ணி இருக்க என்று கேட்க மாதவி மற்றும் சுரேகாவிற்கு பயம் ஏற்படுகிறது. அப்போ எல்லாருக்கும் இது என்னன்னு தெரியுமா இரண்டாவது கிப்ட் எடுத்து விடலாம் என்று சொல்லி ஒண்டிக்கோல் எடுக்க இதைவிட ஸ்பெஷல் கிப்ட் ஒன்னு இருக்கு அதை எடுக்க வா என்று சொல்லி சொம்பு எடுக்கிறார் உடனே மாதவி பயப்படுகிறார். சில பேருக்கு அரை குறையா தெரியாது சில பேருக்கு தெரியவே தெரியாது நான் என்ன பண்ணப் போறேன் தெரியுமா என்று சொல்லிவிட்டு அசோகனை எழுப்பி நிக்க வைத்து மிக்ஸி ஜாடி கையில் கொடுக்க இது எல்லாமே மாதவியும் சுரேகாவும் செஞ்ச வேலை என்று அசோகன் சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி கைக்கு மருந்து வைத்து விட அதுதான் உங்க கை சரியாயிடுச்சுன்னா நான் ஊருக்கு போகட்டுமா என்று கேட்க அதுதான் உன் கைக்கு பிரச்சனை வந்துருச்சு என்று சொல்லுகிறார் மறுபக்கம் சுந்தரவல்லி இன்னும் அவ எதுக்கு எங்க இருக்கனும் என்று கேட்க அவ இங்கதான் இருப்பா என்று சூர்யா சொல்லுகிறார். அப்போ இது மாதிரி தான் நடக்கும்னு சுந்தரவல்லி சொல்லுகிறார். சூர்யா அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க நந்தினிக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார்.என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 09-08-25
jothika lakshu

Recent Posts

எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு.!!

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…

2 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

19 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

19 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

19 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

19 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

20 hours ago