முடிவை மாற்றிய நந்தினி, சூர்யா எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ
சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா ரூமில் பணத்தை எடுத்து பெட்டில் வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மறுபக்கம் கரண்ட் கட் ஆக சுரேகா வேர்வையில் இருக்க நந்தினி விசிறி விட இப்ப எதுக்கு சும்மா சும்மா இங்க வர அக்கறையா பாத்துக்குற மாதிரி சீன் போடுறியா முதல்ல இங்க இருந்து போ என்று சொல்லி அனுப்பி விடுகிறார். அருணாச்சலம் வந்து சுரேகா எப்படி இருக்கா என்று கேட்க ரொம்ப சீக்கிரமாவே சரியாயிடுச்சு நாளைக்கே முதல் தண்ணி ஊத்திடலாம் என்று சொல்ல அருணாச்சலமும் சரியான சொல்லிவிட்டு ரூமுக்கு வருகிறார். சுரேகாவை நலம் விசாரித்துவிட்டு பேசுகிறார். ரூமுக்கு வந்த நந்தினி இடம் பணத்தை கொடுத்து நீ இந்த வீட்ட விட்டு போற இல்ல இத வச்சுக்கோ நீ எப்போ வேணா போகலாம் உன்னை தடுக்க மாட்டேன் என்று சொல்ல நந்தினி அமைதியாக இருக்கிறார். உன்னை எத்தனையோ வாட்டி போக வேணாம்னு சொல்லி இருக்கேன் ஆனா இப்போ அது மாதிரி இல்ல நீ தாராளமாக கிளம்பலாம் என்று சொல்லுகிறார்.

நீ அன்னைக்கு ஒரு நாள் என்ன வீட்ல எடுத்துக்கிட்டு போய் விட்டுடுங்கன்னு கெஞ்சில்ல அதனால அங்கேயே நான் உடைஞ்சிட்டேன் உன் பேச்சையே கேட்காம எப்ப பார்த்தாலும் நான் சொல்றதை கேளு நான் என்று மட்டும் நான் சொல்லி இருக்கேன். என்ன நெனச்சு நானே அசிங்கப்படுகிறேன். நீ இங்க இருந்து பட்ட கஷ்டம் எல்லாமே போதும் நந்தினி நீ கிளம்பி விடு என்று சொல்ல இப்ப போகாத நான் கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே போயிடுவேன் நீ அப்போ போ நான் இருக்கும்போது நீ போனா என்னால தாங்க முடியாது அப்பா கிட்டயும் நான் சொல்லிட்டேன் என்று சொல்லுகிறார். நீ போகும்போது அப்பா இருந்தா தடுத்துருவாரு அதனால அப்பா இல்லாத நேரமா பார்த்து கிளம்பிடு என்று சொல்ல, என்ன நந்தினி அமைதியாக இருக்க என்று கேட்க நான் கிளம்பறேன் சரி என்று சொல்ல அடுத்தவங்க சந்தோஷத்தை விட உன்னோட சந்தோஷத்துக்கு நீ முக்கியத்துவம் கொடு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு சூர்யா காரில் செல்லும்போது நந்தினிக்கு தாலி கட்டியது முதல் வீட்டில் நந்தினி பட்ட கஷ்டங்களை நினைத்து வருத்தப்படுகிறார்.

மறுபக்கம் நந்தினி சூர்யாவின் போட்டோவை பார்த்து நந்தினிக்காக சூர்யா செய்த விஷயங்களை நினைத்துப் பார்க்கிறார். சூர்யா பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருக்க விவேக் இங்கே எல்லாம் நீ வரமாட்டியே என்னாச்சு? என்ன விஷயம் என்று கேட்கிறார். இப்ப நீ சொல்றியா இல்ல நானே நந்தினி கிட்ட போன் பண்ணி கேட்கவா என்று சொல்லுகிறார். அவ போய் அவ ஃபேமிலி கூட சந்தோஷமா இருக்கட்டும் என்று கேட்க அப்போ உன்னோட சந்தோஷம் என்று கேட்க நான் சந்தோஷமா தான் இருக்கேன்னு சொல்லுகிறார். அவ இருக்கும்போது தான் நீ கொஞ்சம் மனுஷனா இருக்க அவளை அனுப்பிவிட்டு உன்னால நிம்மதியா இருக்க முடியுமா என்று கேட்கிறார். அவள காணம மனசு கடந்து தேடும் அதுக்கெல்லாம் என்ன பதில் இருக்கு என்று கேட்கிறார். எனக்கு அதெல்லாம் ஒன்னும் புரியல ஆனா அவளுக்கு இந்த வீட்ல நிம்மதி இல்ல என்று சொல்ல அப்ப அவ வீட்ல மட்டும் அவ நிம்மதியா இருந்துவிடுவாளா என்று கேட்க அவங்க வீட்டுல சந்தோஷமா தான் இருப்பா என்று சொல்லுகிறார்.

நந்தினியோட கஷ்டத்தை பத்தி மட்டும் பேசுற உனக்கு கஷ்டமா இருக்காதா என்று கேட்க சூர்யாவால் எதுவும் பேச முடியாமல் சரி வா சரக்கடிக்க போகலாம் என்று அழைத்துச் சென்று விட மறுப்பக்கம் நந்தினி பேக்கில் துணிகளை எடுத்து வைக்கிறார். சூர்யா பெட்டில் வைத்த பணத்தை எடுத்துப் பார்த்துவிட்டு சூர்யா பேசியதை நினைத்துப் பார்த்துவிட்டு பணத்தை பெட் மேலேயே போட்டுவிட்டு சாமி கும்பிடுகிறார். சாரி சூர்யா சார் என்னை மன்னிச்சுடுங்க என்று ஒரு பேப்பரில் எழுதிவிட்டு மீண்டும் சாமி கும்பிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சுந்தரவல்லி மற்றும் மாதவி இடம் இந்த நாளுக்காக தானே காத்துக்கிட்டு இருக்கீங்க நீங்க பண்ற எல்லா தப்பும் ஒரு பக்கம் ஒரு நாள் உங்க பக்கம் திரும்பும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி பேக் உடன் மொட்டை மாடியில் இருக்க சூர்யா நீ போய்விட்டாய் என்று நினைத்தேன் என்று கேட்கிறார். நீங்க சொன்ன மாதிரி ஊருக்கு போய்டலாம்னு தான் நினைச்சேன் ஆனா என்று நந்தினி பேசுவதை மாதவி கேட்கிறார். பிறகு சுந்தரவல்லி இடம் நீங்க எனக்கு தாலி கட்டிட்டு ஊரெல்லாம் பொண்டாட்டின்னு சொல்லிட்டீங்க அதனால நான் இங்கதான் இருப்பேன் என்று சொன்னதாக மாதவி சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

16 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

16 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

16 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

16 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

17 hours ago

பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்..!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…

19 hours ago