விவேக் கேட்ட கேள்வி, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு ரூமுக்கு வர நந்தினி உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா வீட்டுல தங்கச்சிக்கு அம்மா போட்டு இருக்கு அப்படி குடிச்சிட்டு வந்து இருக்கீங்க உங்க மேல இருந்த மரியாதை போகுது என்று சொல்லி திட்டுகிறார். என்னதான் உங்க தங்கச்சி மேல கோபம் இருந்தாலும் அதை காற்றத்துக்கு இது நேரம் கிடையாது. இப்போ நீங்க குடிச்சிட்டு வந்ததுனால வேற யாருக்காவது வந்தா என்ன பண்றது எனக்கு வந்த போது எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு நீங்க பார்த்துக்கிட்டு தானே இருந்தீங்க என்று கேட்க சூர்யா சிரிக்கிறார். உடனே சூர்யா நா குடிக்கலாம் இல்ல சும்மா சொன்னேன் என்ன சொல்லுகிறார். உங்களை நம்ப மாட்டேன் ஊதுங்க என்று சொல்ல சூர்யாவும் ஊதி காட்ட அப்ப நீங்க நிஜமாகவே குடிக்கலையா என்று நந்தினி கேட்கிறார். குடிக்கணும்னு தான் தோணுச்சு ஆனா குடிக்க முடியல என்று சொல்ல நான் வேற உங்களை திட்டிட்டேன் என்று சொல்லுகிறார். அதனால் ஒன்றும் இல்லை விடு என்று சூர்யா சொல்லுகிறார். உடனே சூர்யா நீ எப்பவுமே ஒரு விஷயம் என்கிட்ட கேட்கல என்னோட வீட்டுக்கு போகணும்னு நீ எப்ப நினைக்கிறியோ அப்போ போகலாம் நந்தினி இன்னும் நீ சந்தோஷமா இருப்ப இல்ல என்று சொல்லிவிட்டு சென்றுவிட நந்தினி வருத்தப்படுகிறார்.

பிறகு சுரேகா ரூமுக்கு வந்து நந்தினி உட்கார இப்போ நீ என்ன பண்ண போற என்று கேட்க நான் பாட்டு பாடுறேன் நீங்க கண்ண மூடி கேளுங்க என்று சொல்ல, நான் இன்டர்நெட்டில் கேட்டுக்குறேன் சரி கெளம்பு என்று சொல்லி அனுப்பி விடுகிறார். இனிமே நீ பாட்டு பாட டான்ஸ் ஆடுறான்னு இங்க வராத போ என அனுப்பி விடுகிறார். நந்தினி வெளியில் வந்த உடன் அருணாச்சலம் சுரேகா எப்படி இருக்கா என்று கேட்க கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா தான் ஐயா குறையும் என்று சொல்லுகிறார். பிறகு இன்னொரு விஷயம் இருக்கு சூர்யா சார் குடிக்கலாம் இல்ல அவரு சும்மா அம்மாவ வெறுப்பேத்த அப்படி பண்ணி இருக்காரு நான் ஊதி காட்ட சொன்னேன் என்று சொல்ல அவனுக்கு தங்கச்சி பாசம் இல்லாமல் இருக்காதுமா அவன் அப்படி ஒன்னும் கல்நெஞ்சம் காரன் கிடையாது சரி நீ போம்மா பாத்துக்கலாம் என்று சொல்லி அனுப்புகிறார்.

ரூமில் சூர்யா உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினி வந்து நான் வரும்போது இருந்த சூர்யா சார் மாதிரி இப்போ இல்ல நான் உங்களை புதுசா பாக்கறேன் எப்படி இருக்க தான் நல்லா இருக்கு என்று சொல்ல, என்ன சாப்ட்டு சூர்யா ஆக்க பார்க்கிறாயா எனக்கு டெரர் சூர்யா தான் பிடிக்கும் என சொல்லுகிறார். எனக்கு உடம்பு சரியில்லன்னு தெரிஞ்சவுடனே நீங்க கோவிலில் போய் பரிகாரமெல்லாம் பண்ணிங்களே எதுக்காக அத பண்ணீங்க என்று கேட்கிறார். என் கண்ணு முன்னாடி ஒருத்தர் கஷ்டப்படும்போது சரியாகணும் என்று நினைத்தேன் என்று சொன்னால் உங்கள் வேண்டுதலையும் தாண்டி நான் செத்துப் போயிருந்தா நீங்க என்ன பண்ணி இருக்கீங்க என்று கேட்க சூர்யா என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கோபப்படுகிறார். மீண்டும் மீண்டும் நந்தினி நான் செத்துப் போயிட்டா என்ன பண்ணி இருப்பீங்க என்று கேட்டுக்கொண்டே இருக்க சூர்யா ஒரு கட்டத்திற்கு மேல் நந்தினியின் பக்கத்தில் வந்து வாயை பொத்தி விடுகிறார். மீண்டும் நந்தினி வாயிலிருந்து கையை எடுத்த பிறகு செத்துப் போயிருந்தா என்ன பண்ணி இருப்பீங்க என்று கேட்க சூர்யா அடிக்க வர ஓடி விடுகிறார்.

மறுபக்கம் சூர்யா தனிமையில் நந்தினி பார்த்து பயந்து பேசிய விஷயத்தை பற்றி யோசித்து கொண்டு இருக்கிறார். மறுநாள் காலையில் சூர்யா அருணாச்சலத்திடம் வந்து உட்காருகிறார். என்ன விஷயம் சூர்யா என்று கேட்க, நான் ஒரு முடிவெடுத்திருக்கேன் அதை பத்தி உங்ககிட்ட பேசணும் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறார். நந்தினியை அவன் வீட்டில் எடுத்துப் போய்விடலாம்னு இருக்கேன் என்று சொல்ல இத்தனை நாளா அவ தான் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தா இப்போ அவ இருக்கிறேன் என்று சொல்லும்போது இப்ப நீ எதுக்கு அனுப்பி வைக்கணும்னு சொல்ற உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன் என்று சொல்லுகிறார். என்ன யோசிச்சுக்கிட்டு இந்த முடிவெடுத்த என்று சொல்ல அன்னைக்கு நான் அவளை அடிச்சா போ எனக்கு பயந்து அவ நடுங்கி என்னை அடிக்காதீங்கன்னு கெஞ்சுனா அப்போதான் எனக்கு அவளை எவ்வளவு பாதிச்சிருக்குன்னு தெரிஞ்சது என்று சொல்லுகிறார்.

என்ன வீட்ல எடுத்துகிட்டு போயிட்டு விட்டுடுங்க என்று சொல்லிக்கிட்டே இருக்கா என்று சொல்ல, நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனா இப்ப அவளே இருக்க நினைக்கும் போது நீ எதுக்கு இப்படி சொல்ற என்று சொல்ல அவ பொய் சொல்றா அவ வீட்ல நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுற போதும் அவ பாவம் அவ கஷ்டப்பட வேண்டாம் அவங்க வீட்ல சந்தோஷமா இருக்கட்டும் என்று சொல்லுகிறார். இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் அவளுக்கு துளி கூட சந்தோஷம் இல்லை இந்த விஷயத்தை நான் பண்ண தான் போறேன் என்று சூர்யா வேகவேகமாக ரூமுக்கு வந்து யோசிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நீ ஊருக்கு கிளம்புற இல்ல என்று சொல்லிவிட்டு சூர்யா வெளியே வந்து விடுகிறார். மறுபக்கம் விவேக் சூர்யாவிடம் நந்தினி இங்கதான் இருப்பான்னு மனசு கிடந்து தேடும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா நான் இல்லாத நேரமா பார்த்து போன் நந்தினி தான் இருக்கும்போது போனால் எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் என்று சொல்ல நந்தினி லெட்டர் எழுதுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்த தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 07-10-25
jothika lakshu

Recent Posts

எஸ் டி ஆர் 49 : டைட்டில் என்ன தெரியுமா? படக்குழு அறிவிப்பு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து…

2 hours ago

முத்து எடுத்த முடிவு, பார்வதி இடம் விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…

2 hours ago

கோபமாக பேசிய வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…

3 hours ago

வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

18 hours ago

கம்ருதீன் மற்றும் கெமி இடையே ஏற்பட்ட பிரச்சனை.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…

23 hours ago

இட்லி கடை : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

1 day ago