Moondru Mudichu Serial Promo Update 06-08-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மாதவி தேங்காய் சட்னி கேட்க நந்தினி அம்மியில் அரைத்து தருவதாக சொல்லி போக சுந்தரவல்லி மாதவிக்கு போன் போட்டு என்னோட ரூம்ல ஒரு கிரீன் கலர் ஃபைல் இருக்கு அதை மாப்பிள்ளை கிட்ட கொடுத்து அனுப்பு என்று சொல்ல மாதவி அங்கு சென்று விடுகிறார் உடனே கிச்சனில் வரும் வாசனையை பார்த்து அசோகன் கிச்சனுக்கு வந்து சமையலை பார்த்துக் கொண்டிருக்க மிக்ஸிக்குள் இருக்கும் தேங்காயை எடுக்க போக அந்த நேரம் பார்த்து தும்பல் வர சுரேகா சத்தம் கேட்டு ஆன் பண்ணிவிட அசோகனின் கை மிக்ஸியில் மாட்டி ரத்தம் கொட்ட மாதவி பதறி அடித்து கொண்டு வந்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். பிறகு ஐந்து விரல்களிலும் பட்டு போட்டுக்கொண்டு ரூமுக்கு அழைத்து வருகிறார்.
பிறகு மாதவி, சுரேகா இருவரும் இவ்வளவு நேரமா போட்ட பிளான் எல்லாமே வேஸ்ட் என சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். உடனே கொஞ்ச நேரத்தில் இரண்டு பேர் வந்து பிளாக் போர்டு சூர்யா சார் ஆர்டர் பண்ணிருப்பதாக எடுத்துக்கொண்டு வந்து பிக்ஸ் பண்ணுகின்றனர். மாதவியும் சுரேகாவும் எதுக்கு என தெரியாமல் பார்த்துக் கொண்டு இருக்க நந்தினியும் வந்து எதுக்காக போர்டு என்று கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் சூர்யா நந்தினிக்கு போன் போட்டு போர்டு வந்திருக்கா என்று கேட்க இப்பதான் எடுத்துக் கொண்டு வந்து வச்சிருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே எந்த வேலை செஞ்சிட்டு இருந்தாலும் அப்படியே விட்டுட்டு நீயும் உன்னோட கல்யாண அண்ணனும் போர்டு முன்னாடி வந்து உட்காரனும் என்று சொல்லுகிறார். அப்படி முடியாதுன்னு சொன்னா ஒரு மாசம் சம்பளத்தை கட் பண்ணிடுவேன்னு சொல்லு போய் உட்காருங்கள் நான் வரேன்னு சொல்லி போனை வைக்கிறார்.
கல்யாணத்திடம் நாம் இங்க உட்காரவில்லை என்றால் ஒரு மாதம் சம்பளம் கொடுக்க மாட்டாராம் என்று சொன்னவுடன் கல்யாணமும் நந்தினியும் உட்கார்ந்து விடுகின்றனர். மாதவி சுந்தரவல்லி இடம் விஷயத்தை சொல்லி அழைத்து வருகிறார். இப்ப எதுக்கு இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க என்று கேட்க சின்னையா தான் என சொல்லுகிறார். எதுக்காக என்று கேட்க தெரியல சின்னையா தான் உட்கார சொன்னாரு அப்படி உட்காரலா என்றால் ஒரு மாசம் சம்பளத்தை கட் பண்ணிடுவேன்னு சொல்லி இருக்காரு என்று சொல்ல உனக்கு சம்பளம் கொடுக்கிறது அவனா நானா சொல்றேன் இல்ல எழுந்து போ என்று சொல்ல கல்யாணம் எழுந்திருக்கும் நேரம் பார்த்து சூர்யா வாத்தியார் கெட்டப்பில் வேஷ்டி சட்டை கண்ணாடி, கையில் புத்தகம் கொம்புடன் என்ட்ரி கொடுக்கிறார்.
உடனே இப்போ நான் உங்களுக்கு ஆங்கிலம் பாடம் எடுக்க போறேன் என்று சொல்லி, எனக்கு தண்ணீர் வேண்டும் என்பதற்கு இங்கிலீஷ்ல எப்படி சொல்லணும் என்று கேட்க சுந்தரவல்லி உன்னை எழுந்து போக சொன்னா போக மாட்டியா என்று கேட்க சூர்யா உக்காருனு சொன்ன இல்ல சொல்லி கல்யாணத்தை உட்கார சொல்லுகிறார். நாம் ஒரு விஷயத்தை நோக்கி போகும் போது தீய சக்தியை கண்டுக்க கூடாது என்று சொல்ல, சுந்தரவல்லி கோபமாக சென்றுவிட நந்தினியும் எனக்கு இதுயெல்லாம் தேவையில்லை என்று சென்று விடுகிறார். மாதவி இடம் சுரேகா நிஜமாலே சூர்யா அவளுக்கு இங்கிலீஷ் கத்து கொடுத்து விடுவானா என்று தெரியவில்லையே என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். அவ கையை உடைக்க சொல்லி அம்மா எவ்வளவு நாளா சொல்லி இருக்காங்க அதைக்கூட பண்ண முடியல என்று சொல்லிக் கொண்டிருக்க அசோகன் ஒரு நல்ல விஷயம் இருக்கு என்று சொல்லி வருகிறார்.
உடனே ஒரு உண்டி பெல்ட் எடுத்துக்கொண்டு வந்து அதை வைத்து நந்தினியை அட்டாக் பண்ணலாம் என சொல்லுகிறார். இதிலிருந்து அவளை அடிச்சா கை பிசு ஆயிடும் தூரத்தில் இருந்து அடிக்கும்போது யார அடிச்சாங்கன்னு கூட தெரியாது என்று சொல்ல மாதவி சுரேகாவும் சந்தோஷப்படுகின்றனர் உடனே நான் இதை எப்படி பண்ணனும்னு உங்களுக்கு சொல்லி தரேன் என்று அழைத்துச் செல்கிறார். முதலில் மாதவிக்கு எப்படி அடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்க இரண்டு வாட்டி சரியாக அடிக்காத மாதவி மூன்றாவது முறை கரெக்டாக அடித்து விடுகிறார். உடனே அவர்கள் சந்தோஷப்படுகின்றனர்.
மறுபக்கம் மொட்டை மாடியில் நந்தினி மிளகாய் காய வைத்துக் கொண்டிருக்க, அசோகனுக்கு அடிபட்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்க முதலில் என்ன நடந்தது என்று சொல்லுமா என்று சொல்ல மாதவி வந்த விஷயத்தையும் சட்னி கேட்ட விஷயத்தையும் அசோகன் கை அடிபட்டதையும் சொல்ல கல்யாணம் எங்கேயோ ஏதோ ஒன்று இடிக்குது என சொல்லுகிறார். அவங்களுக்கு கொஞ்ச நாளா தேங்காய் சேர்க்கற சாப்பாடு எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி இருக்கிறதா டாக்டர் சொன்னாங்கன்னு சொன்னாங்க ஆனா திடீர்னு எப்படி தேங்காய் சட்னி கேட்டாங்க என்று கல்யாணம் கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவிடம் நந்தினி எனக்கு இங்கிலீஷ் எல்லாம் படிக்க வராது நீங்க எடுக்கிற முயற்சியில் தோற்று தான் போவீங்க என்று சொல்ல மறுப்பக்கம் அசோகன் ஒரு கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க யாரோ வேணும்னே பண்ண மாதிரி இருக்கு நம்ம வேணா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார்.
பிறகு சூர்யாவிடம் நந்தினி நீங்க சொல்றது ஒன்னு கூட நம்பற மாதிரி இல்லை என்று சொல்ல நீ சொன்னா மட்டும்தான் நம்புகிறேன் நீ மட்டும் என்னை எப்பவுமே நம்ப மாட்டேங்குற என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…