சூர்யா எடுத்த முடிவு, என்ன செய்யப் போகிறார் நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு இன்னைக்கு எல்லார்கிட்டயும் நீ இங்கிலீஷ்ல தான் பேசணும், அப்படி பேசலனா ஒரு ஒரு வார்த்தைக்கும் நான் சம்பளத்தில் நூறு ரூபா பிடித்துக் கொள்வேன் என சொல்ல அதுக்கு நீங்க சம்பளமே கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே என்று சொல்லுகிறார். நீ ரொம்ப புத்திசாலி தப்பா பேசினா கூட பரவால்ல என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு சுந்தரவல்லி உட்கார்ந்து இருக்க மாதவி சுரேகா அசோகன் மூவரும் வந்து உட்கார்ந்து அவன் பண்றது எல்லாம் பார்த்தா காமெடியா இருக்கு என்று சொல்ல அவ அதெல்லாம் பேசமாட்டா என்று சொல்ல இது இப்படியே விட்டா நம்ம தான் கடைசியாக ஃபீல் பண்ற மாதிரி இருக்கும் என்று சொல்லுகிறார்.

முன்னாடி எல்லாம் எது சொன்னாலும் அமைதியா இருந்தா இப்போ எதிர்த்து பேசுறா என்று சுரேகா சொல்லுகிறார். அவளோட கை உடைஞ்சதனாலதான சூர்யா நந்தினிக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுத்தா ஆனா நந்தினி கை உடைஞ்சா எப்படி போடுவா என்று சொல்ல மாதவி எனக்கும் அவ கைய உடைக்கிறதுதான் சரின்னு தோணுது என்று சொல்ல சுந்தரவல்லி உட்கார்ந்து பேசுறத விட செயலில் செய்க என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யா குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் நந்தினியை எழுப்பி உட்கார வைக்கிறார். நந்தினி உட்கார்ந்து கொண்டே தூங்க சூர்யா எழுப்பி கையில் ஆப்பிள எடுத்துக்கொண்டு இது பேர் என்ன என்று கேட்க ஆப்பிள் என்ற நந்தினி சொன்ன நோ ஏ பார் ஆப்பிள் என சொல்லுகிறார். பிறகு பி பார் பாட்டில், சி பார்க் சிகரெட்ட, டி ஃபார் டிரிங் என சொல்ல என்ன விட்டுடுங்க சார் என்று சொல்லுகிறார்.

உடனே நந்தினி எனக்கு தூக்கம் வருது சார் என்று சொல்லியும் சூர்யா கேட்காமல், நம்ம பேசிக்ல இருந்து ஆரம்பிக்கலாம் என்று சொல்லி ஏ பார் ஆப்பிள் பி ஃபார் பால் என ரைம்ஸ் பாடிக்கொண்டே டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க நந்தினி படுத்து தூங்கி விடுகிறார். சூர்யா கவனித்து விட்டு இப்படி தூங்கிட்டா எப்படி இங்கிலீஷ் கத்துகிறது நாளைக்கு மார்னிங் கத்துக்கலாம் என்று சொல்லுகிறார்.நந்தினி கையை எப்படி உடைப்பது என மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு கை உடையனாலும் கையெழுத்து போடற விரல் மட்டும் ஆவது உடையனும் என்று முடிவெடுக்கின்றனர். சூர்யா முன்ன மாதிரி கிடையாது நந்தினிக்கு ஏதாவது ஒன்னுனா பதறி துடிக்கிறான். கையை உடைத்தால் சைனிங் பவர மாத்திடுவானா என்று சுரேகா கேட்கிறார்.

அம்மா சொன்ன விஷயத்தை கரெக்டா முடிச்சிட்டா இந்த காரணத்தையே வச்சு நம்ம மூணு பேருக்குள்ள இருந்து ஒருத்தர் கிட்ட அந்த பவர வாங்கிடலாம் என்று மாதவி சொல்லுகிறார். மறுநாள் காலையில் கல்யாணம் 30 நாளில் இங்கிலீஷ் கத்துக போவது எப்படி என்ற புக்கை படித்துக் கொண்டு வர, அப்போ நீங்க இங்கிலீஷ்ல தான் பேசுவீங்களா என்று கேட்க கல்யாணம் தப்பு தப்பா இங்கிலீஷில் பேச நான் சூர்யா சார் வந்தா சொல்றேன் நீங்க அப்ப மட்டும் பேசுங்க இல்லன்னா தமிழ்ல பேசுங்க என்று சொல்ல கல்யாணம் முடியாது என சொல்லுகிறார். கல்யாணம் அண்ணா என்று சொல்ல, நோ கல்யாணம் மை நேம் இஸ் மேரேஜ் என கல்யாணம் சொல்லுகிறார்.

மேரேஜ் அண்ணே அந்த பாலில் டீ போட்டு சுந்தரவல்லி அம்மா கிட்ட எடுத்துக்கொண்டு போய் கொடுங்க என்று சொல்ல அவரும் டீ போடுகிறார். கல்யாணம் டீ எடுத்துக் கொண்டு போகும்போது அங்க போய் இங்கிலீஷ்ல பேசாதீங்க என்று சொல்லி அனுப்புகிறார். கல்யாணமும் டீயை கொடுக்க இது என்ன என்று சுந்தரவல்லி கேட்கிறார் காபி என்று சொல்ல நான் உன்கிட்ட டீ தானே கேட்டேன் என்று சொல் கல்யாணம் இங்கிலீஷில் காபி பவுடர் எம்டி என சொல்ல சுந்தரவல்லி கோபத்தில் அறைந்து விட்டு இப்ப எப்படி தமிழ் வந்தது என்று கேட்கிறார். அவன் தான் சொல்றான்னா உனக்கு அறிவு இல்லையா ஒழுங்கா போ என்று சொல்லி அனுப்ப உடனே சூர்யா வந்தவுடன் இங்கிலீஷில் கல்யாணத்திடம் பேச கல்யாணம் தமிழில் பேச இங்கிலீஷ்லதான பேச சொன்னேன் என்று திட்டுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி மற்றும் கல்யாணத்திடம் இவர் பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கிறார் உன்கிட்ட பேனா புக் எதுவும் இல்லையா என்று கேட்க நான் சொல்லிக் கொடுக்க வரலை சமைக்க வந்திருக்கிறேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் வீட்டில் பிளாக் போர்டு ஒன்று செட் செய்ய சூர்யா போன் போட்டு நம்ம வீட்டுக்கு ஒரு பிளாக் போர்டு வந்திருக்கும் அது எதிரில் நீயும் உன்னோட கல்யாணம் அண்ணனும் வந்து உட்காருங்கள் என்று சூர்யா சொல்லுகிறார்.

உடனே வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு வாத்தியார் கெட்டப்பில் சூர்யா வர, சுந்தரவல்லி அவனுக்கு தான் வேற வேலை இல்லனா உங்களுக்கு போய் வேலையை பாருங்க என்று சொல்லி அனுப்ப சூர்யா அவங்களுக்கு இப்ப எல்லாம் இங்கிலீஷ் பேசிவிடுவேன் என்று பொறாமை என்று சொல்ல சுந்தரவல்லி சென்று விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 03-08-25
jothika lakshu

Recent Posts

Gatta Kusthi 2 Teaser

Gatta Kusthi 2 Teaser | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…

10 hours ago

Moondram Kan Official Teaser

Moondram Kan Official Teaser | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap

10 hours ago

Samharam Official Trailer

Samharam Official Trailer | Niya Vargees | Praijin | Sharu Nisha | Loud Line Music

10 hours ago

ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம்…

2 days ago

அரசனில் சிம்புவுக்கு ஜோடியாவது குறித்து டூரிஸ்ட் பேமிலி நடிகை நெகிழ்ச்சி

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. தீபாவளி…

2 days ago

மைக்கேல் ஜாக்சன் பாடலுக்கு நடனமாடிய ஷ்ரத்தா கபூர் – வைரலாகும் வீடியோ!

பாப் இசை உலகின் மறக்க முடியாத நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இன்றளவும் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.…

2 days ago