தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நான் தான் கிழிச்சேன் என்ன பண்ண முடியும் என் குடும்பத்தோட அவ போட்டோ இருக்க கூடாது நீ என்ன வேணா பண்ணுவ நான் பொறுத்துக்கிட்டு இருப்பனா நான் இங்கே போட்டோ எப்படி இருந்தா இப்படி தான் கேட்பாங்க வேணும்னா உன்னோட ரூம்ல மாத்திக்கோ என்னோட குடும்பத்தோட அவ இருக்கக்கூடாது என்று சொல்ல அப்போ இதுபோல பலனை நீங்க கண்டிப்பா அனுபவிப்பீங்க என்று சொல்ல சுந்தரவல்லி சென்றுவிட சூர்யா கோபமாக மேலே வர நான் இன்னைக்கு குடிச்சே தீருவேன் நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்று சொல்லி விட்டு சரக்கு பாட்டிலை பார்க்க எல்லாம் காலியாக இருக்கிறது என்னாச்சு என்று கேட்க நான்தான் கீழே ஊத்திட்டேன் என்று சொல்லுகிறார். உடனே சூர்யா இன்னும் டென்ஷன் அதிகமாகி அதுக்காக நான் குடிக்காம இருக்க மாட்டேன் இன்னைக்கு நான் குடிச்சே தீருவேன் என்று விவேக்கிற்கு போன் போட்டு சரக்கோட வீட்டுக்கு வா என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். உடனே யாருக்கும் தெரியாமல் வெளியில் வந்த நந்தினி விவேக்கிற்கு போன் போட்டு நான் சொல்றத மட்டும் செய்யுங்கன்னு சொல்லி போனை வைத்து விடுகிறார்.
ரூமில் அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் எனக்கு அந்த போட்டோ நீ எவ்வளவு புடிச்சது தெரியுமா? சூர்யா எனக்காக என்னோட பிறந்த நாளுக்கு கொடுத்த கிப்ட் அதைப் போய் நீ கிழிச்சிட்டியே என்று கேட்கிறார். உங்க பையனும் அந்த வேலைக்காரிக்கும் இவ்வளவு பாவம் பாக்குறீங்களே அந்த இடத்துல நான் இல்லாம நீங்க கேக் வெட்னீங்களா என்று கேட்க அந்த இடத்துல ஒரு பிரச்சனையா இருக்கும் தேவையா அதனாலதான் நான் வெட்டினேன் முதல்ல சூர்யா கூட பிரச்சினை பண்றதுன்னு இருக்கு பதிலுக்கு பதில் ஏதாவது பண்ணா இப்படித்தான் பெருசாகி கொண்டே போகும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். விவேக் வீட்டுக்கு வர வாசலுக்கு வந்த நந்தினி நான் சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்தீங்களா என்று கேட்க என்னமா இப்படி வாங்கிட்டு வர சொல்லிட்ட என்று சொல்ல, குடிச்ச தீரவேண்டும் என்று ஒரே புடியா இருக்காரு என்று சொல்லி மேலே அழைத்து வருகிறார்.
கல்யாணதிடம் நீங்களும் மேல வந்துருங்க என்று சொல்ல நீங்க போங்க என பின்னாடியே வர என சொல்ல ரூமில் சூர்யா விவேக் பார்த்தவுடன் சந்தோஷமாக சரக்கு பாட்டிலை கேட்கிறார். நீங்க மொத்தமா குடிச்சிடுவீங்க நான் உங்களுக்கு ஊத்தி கொடுக்கிறேன் என்று சொல்லி கண்ணை மூடச் சொல்லுகிறார் உடனே கல்யாணமும் வந்து விட பையில் இருந்து விவேக் முருகன் மாலையை எடுக்கிறார். நந்தினி மாலையை எடுத்து கல்யாணத்திடம் கொடுத்து சூர்யாவிற்கு போடச் சொல்லுகிறார். சீக்கிரம் ஊத்தி கொடுங்க என்று அவசரப்பட நீங்க முதல்ல ஷூவ கழட்டி கிழக்க பார்த்து நில்லுங்க என்று கல்யாணம் சொல்லுகிறார் உடனே சூர்யாவும் அதே மாதிரி குனிந்து நிற்க கழுத்தில் மாலையை போட்டு விடுகிறார்.
என்னையா இது மாலையை போட்டுட்டீங்க என்று சொல்ல முருகனுக்கு அரோகரா என மூவரும் சொல்லுகின்றனர். உடனே சூர்யா கடுப்பாகி கழட்ட போக கழட்டுன தெய்வம் குத்தமாயிடும் என்று சொல்ல சூர்யா கடுப்பாகிறார். எல்லாம் சேர்ந்து டிராமா பண்றீங்களா என்று கேட்க நான் தான் வேண்டிகிட்டேன் என்று நந்தினி சொல்லுகிறார். நான் மாலையை கழட்ட தான் போறேன் என்று சூர்யா சொல்ல அப்படி கழட்டினீங்கன்னா எனக்கு தான் ஏதாவது ஆயிடும் நான் தன வேண்டிக்கிட்டேன் என்று சொல்ல சூர்யா எதுவும் பேச முடியாமல் அமைதியாகிவிடுகிறார். முக்கியமா கவுச்சி சாப்பிடக்கூடாது தனியான தட்டுல தான் சாப்பிடணும் என்று சொல்லி பேசிக்கொண்டே இருக்க, மறுபக்கம் சுரேகா நம்ம லாப்ஸ்டர் வாங்கி சாப்பிடலாமா என்று கேட்டேன் அசோகன் வீடு ஃபுல்லா விபூதி வாசனை வருது நீ என்னம்மா நான் வெஜ் சாப்பிடுறதை பத்தி பேசிகிட்டு இருக்கேன் என்று சொல்ல சூர்யா மாலை போட்டுக்கொண்டு கீழே வர மூவரும் முருகன் துதி பாடி வருகின்றன.
மூவரும் இவர்களை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி இருக்க கீழே இறங்கி வருகின்றனர் பூஜை ரூமுக்கு வந்து சாமி கும்பிட சத்தம் கேட்டு அருணாச்சலமும் சுந்தரவல்லியும் வருகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் நந்தினியிடம் என்னமா புதுசா மாலை எல்லாம் போட்டு இருக்கீங்க என்று கேட்க ஆமாய்யா அம்மா போட்ட பிரச்சனையில் அவர் கோபத்தில் குடிக்கிறேன்னு முடிவெடுத்தாது அதே மாதிரி விவேக் அண்ணனுக்கு போன் போட்டு சரக்கு பாட்டில் வாங்க சொல்லிட்டாரு அதனாலதான் வேற வழி இல்லாம மாலை போட்டுட்டேன் என்று சொல்ல ஓ இவ்வளவு விஷயம் நடந்திருக்கா என்று கேட்கிறார் அமைதியா இருக்க மாட்டானே என்ன பண்ண என்று கேட்க கோவப்பட்டா ஆனால் மாலை எல்லாம் கழட்டி வீசல என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…