moondru mudichu serial episode update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவிடம் போலீஸ்காரர்கள் நீங்கள் 24 மணி நேரம் குடிச்சுகிட்டே இருப்பீங்கன்னு கேள்விப்பட்டேன் அப்படியா என்று கேட்க நான் முதல்ல இருந்த அப்படி தான் இப்போ இல்லை என்று சொல்லுகிறார். உடனே ரஞ்சித்தை விசாரிக்க சுந்தரவல்லி அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று சொல்ல போலீஸ் ஒருவர் இங்கே ஒரு போன் கிடைச்சிருக்கு என்று சொல்லுகிறார். யாருடைய ஃபோனாக இருக்கும் என்று குடும்பத்தினர் பார்க்க செல்கின்றன. அப்போதுதான் அது ஹேமாவின் போன் என்று தெரிய வருகிறது. பிறகு நந்தினி சூர்யாவிடம் செருப்பு விஷயத்தை சொல்ல, அனைவரும் வந்து அங்கே தேட செருப்பு காணாமல் போகிறது. அப்போதுதான் ரஞ்சித் செருப்பை கண்டுபிடித்து அதை யாருக்கும் தெரியாமல் காரில் வெளியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வந்து குப்பைத்தொட்டியில் போட்டு விடுகிறார். இதனால் சூர்யா எவிடென்ச நீங்க வைப்பாங்களா என்று கேட்கிறார். போலீஸ்காரர்கள் இனிமேல் எந்த எவிடன்ஸ் கிடைத்தாலும் என்கிட்ட எடுத்துக் கொண்டு வந்து கொடுங்கள் என்று சொல்லிவிட்டு விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி இந்த வீட்ல என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியல என்று டென்ஷன் ஆகிறார். சுரேகா ஹேமாவை நினைத்து அழ, சுந்தரவல்லி ஆறுதல் சொல்லுகிறார். உடனே ரஞ்சித் மற்றும் ஹரிதா இருவரும் நந்தினி மீது பழி போட்டு பேசுகின்றனர். இது மட்டும் இல்லாமல் செருப்பு கிடைச்ச உடனே எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டியது தானே எதுக்கு சூர்யா கிட்ட மட்டும் சொல்லி எடுத்து வைக்கணும் என்று சொல்லுகிறார். அவங்களோட மோட்டிவ் உங்களுக்கு தெரியலையா ஆண்டி நிம்மதியை கெடுக்கணும் அதுதான் அவர்களுடைய எண்ணம் என்று சொல்ல ரஞ்சித் இதைத்தான் ஹரிதா கிட்ட இருந்து எதிர்பார்த்தேன் என சொல்லுகிறார். சூர்யா நந்தினி இடம் செருப்பு அங்க தான் வச்சீங்களா என்று கேட்க ஆமாம் என்று சொல்ல, ரஞ்சித் இவங்கள யோசிக்க விடக்கூடாது இவங்களையும் ஏதாச்சும் சொல்லி குழப்பனும் என்று வந்து சூர்யாவிடம் பேச்சு கொடுக்கிறார். நீங்க எடுத்து வச்ச செப்பல் இந்த வீட்ல இருந்து காணாமல் போய் இருக்குன்னா கொலைகாரன் இந்த வீட்டிலேயே தானே இருக்கணும் என்று சொல்லிவிட்டு என்கிட்ட மட்டும் சொல்லு சூர்யா அந்த மர்டர் பண்ணது நீதானே என்று கேட்கிறார். சூர்யா கோபப்பட சும்மா விளையாட்டுக்கு சொன்ன சூர்யா பெருச்சாளி கடித்து இழுத்துக்கிட்டு போயி இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
நந்தினி யோசித்துக் கொண்டே இருக்க, கல்யாணம் ஏமா இப்படி இருக்க என்று கேட்க, சூர்யா சார் ரொம்ப வருத்தப்படுறாரு என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாமல் யார் எடுத்திருப்பாங்க என்று யோசித்து விட்டு ரஞ்சித் சார் பெருச்சாளி தூக்கிக்கிட்டு போனதா சொல்றாரு ஆனா இந்த வீட்ல பெருச்சாளியே கிடையாது வேணும்னே யாராவது பண்ணி இருப்பாங்களோ என்று சந்தேகப்படுகிறார். உண்மையை யாராலும் ரொம்ப நேரம் மறைக்க முடியாது என்று சொல்ல, சரி நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா என்று கேட்க எல்லா வேலையும் நான் பண்ணிட்டேன் நீ போய் படிக்கிற வேலையை பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் பரமு அவரது அண்ணனை சந்தித்து எப்படி அவர வேலூர் ஜெயிலில் மாத்தினாங்க என்று கேட்ட என்னால தான் என்று சொல்லுகிறார். சரி மாப்பிள்ளை இங்க இருக்காருன்னு அவர் கிட்ட பேசணும்னு பேசிகிட்டு இருந்தேன் அதை போலீஸ்காரர் பாத்துட்டு அவர மாத்திட்டாங்க என்று சொல்லுகிறார். வக்கீல் என்னதான்மா சொன்னாரு என்று கேட்க எல்லாம் பேசிட்டு தான் வந்திருக்கேன் சீக்கிரம் வெளியில் கூட்டிகிட்டு வந்துடுவேன் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி குடும்பத்தை என்ன பண்ண போற என்று கேட்க இங்கே உன்னை பார்த்துட்டு அங்கதான் போகப் போறேன் என்று சொல்லுகிறார். இந்த வாட்டி நான் போடுற போடுல சுந்தரவல்லி வாயிலையும் வயித்துலையும் அடிச்சுக்க போறா இன்னும் சொல்லப் போனா உன்னோட பக்கத்துல வந்து ஜெயில்ல களி சாப்பிடணும் என்று சொல்ல, என்ன திட்டம் என்று கேட்பதில் ஆர்வமாக இருக்க இப்போதைக்கு தைரியமா போ நான் சில ஏற்பாடுகள் பண்ணியிருக்கேன் நான் உன் கூட உள்ள பேசுறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் அசோகன் ஹேமாவுக்கு நடந்த விஷயத்தை பற்றி கண்ணாடி முன் நின்று யோசிக்கிறார். ஹேமாவின் கொலை எப்படி நடந்து இருக்கும் செருப்பு எப்படி காணாமல் போயிருக்கும் பேயாக இருக்குமோ என்று பயப்படுகிறார். அந்த நேரம் பார்த்து கொலுசு சத்தம் கேட்க அசோகன் என்னும் பயப்படுகிறார். மாதவி வந்து கேட்க பேயினு நெனச்சு பயந்துட்டேன் என்று சொல்லுகிறார். உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்க இந்த வீட்டில் பேய் இருக்கு கொஞ்ச நாள் எங்க வீட்டுக்கு போயிட்டு சுரேகா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் வரலாம் என்று சொல்ல, மாதவி அப்படியெல்லாம் பண்ண முடியாது என டென்ஷன் ஆகிறார். இந்த வீட்டில நடந்த ரெண்டு சம்பவத்தையும் கனெக்சன் பண்ணி பாரு அந்த ஹேமா தான் இங்கே பேயா இருக்கணும் என்று சொல்ல, இது மட்டும் இல்லாமல் எனக்கு சலங்கை சத்தமும் கேட்கிறது என்று சொல்லுகிறார்.
அதற்கு மாதவி காலில் இருக்கும் கொலுசை காட்டுகிறார். அப்போதும் நம்பாமல் என்ன மட்டும் எங்க அம்மா வீட்டில் விட்டுடுமா என்று சொல்ல அப்படி எல்லாம் எதுவும் செய்ய முடியாது என்னை மாதிரி நீங்க எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பரமு ஹேமாவின் அம்மா அப்பாவுடன் வீட்டுக்கு கிப்ட் பாக்ஸ் உடன் வருகிறார். வீட்டுக்குள் வந்தவுடன் நந்தினி பரமுவை திட்டி வெளியே போகச் சொல்ல, சுந்தரவல்லி வந்து இவளை யாரு வீட்டுக்குள்ள விட்டது என்று கோபப்படுகிறார் உடனே சுரேகா நீங்க ஏன் ஆன்ட்டி இவ கூட வந்தீங்க இவ ரொம்ப மோசமானவன் என்று சொல்லுகிறார். பரமு நான் ஒன்னும் சம்பந்தம் பேச வரல உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கலாமுன்னு வந்தேன் அதை இவங்க கையால கொடுக்கணும்னு தான் கூட்டிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…