moondru mudichu serial episode update 17-10-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் எல்லோரையும் நீ கெடுத்து வச்சிருக்க என்று சொல்ல நீங்க எந்த விஷயத்துல வேணா சொல்லுங்க ஆனா சாப்பாடு விஷயத்தில் அப்படி சொல்லாதீங்க என்று சொல்ல அவங்களுக்கு தேவையானத அவங்க பண்ணட்டும் அப்படி அவங்களுக்கு உடம்பு வலிச்சா ஆர்டர் பண்ணி சாப்பிடட்டும் எனக்கு என்ன பிரச்சனை பேசாம அமைதியா இரு என்று சொல்லுகிறார். பிறகு இவர்கள் கோவிலுக்கு வந்து இறங்கி உள்ளே வர வழியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரர்கள் சூர்யாவை நலம் விசாரித்து பேசுகின்றனர். பிறகு இவங்க தான் உங்க பொண்டாட்டியா என்று கேட்டுவிட்டு இவ்வளவு பெரிய பணக்காரர் உங்களுக்காக பிச்சை எடுத்து இருக்காங்கன்னா எவ்வளவு பெரிய விஷயம் என்று பெருமையாக பேசுகிறார். இவர் உனக்கு சாமிக்கும் மேலமா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா ஆரோக்கியமா வாழனும் நாங்க டெய்லியும் சாமிகிட்ட வேண்டிக்குவோம் என்று சொல்லுகின்றனர். பிறகு அனைவரிடமும் பேசிவிட்டு சாமி கும்பிட உள்ளே செல்கின்றனர். கோவிலுக்குள் வந்து நந்தினி உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு சார் இருந்தாலும் நீங்க பண்ணது ரொம்ப பெரிய விஷயம்தான் என்று சொல்ல நீ திருப்பி மறுபடியும் பேச ஆரம்பிக்காத நம்ம வந்த வேலையை பார்க்கலாம் என்று உள்ளே அழைத்துச் செல்கிறார்.
உடனே பூசாரி அய்யாவும் சூர்யாவை பற்றி பெருமையாக பேசுகிறார். பிறகு சுரேகாவின் பேரில் அர்ச்சனை செய்கின்றன. பிறகு அர்ச்சனை முடிந்த பிறகு ஐயர் குங்குமம் கொடுக்க அவர்கள் தனித்தனியாக வைத்துக் கொள்ள போக பக்கத்தில் இருக்கும் பெண்மணி பக்கத்துலதான் புருஷன் இருக்காருல்ல அவரை வைத்துவிட சொல்லலாமா என்று சொல்ல சூர்யாவும் நந்தினிக்கு பொட்டு வைத்து விடுகிறார். பிறகு கோவிலை சுத்தி விட்டு பிரசாதம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு உட்காருகின்றனர். இதுவும் நல்லாதான் இருக்குல்ல என்ற சூர்யா சொல்லுகிறார் நிறைய பேருக்கு இது நிம்மதியை கொடுக்கும் என நந்தினி சொல்லுகிறார். இந்த நேரத்தில் விஜி அக்கா ஞாபகம் எனக்கு வருது அவங்க எனக்கு எவ்வளவு உதவி பண்ணி இருக்காங்க நான் ஒரு நன்றி கூட சொல்லல என்று சொல்ல விஜி அப்படி எல்லாம் எதுவும் நினைக்க மாட்டாங்க நம்ம வீட்டு பொண்ணு என்று சொல்ல இருந்தாலும் என் மனசுக்கு தோணிருச்சு நீங்க போன் போட்டு குடுங்க நான் பேசுறேன்னு சொல்ல சூர்யா போன் போட்டு கொடுக்கிறார்.
விஜி போனை எடுத்து பேச, நான் நந்தினி பேசுறேன் அக்கா என்று சொல்ல விஜி டல்லாக பேச நீங்க பழைய மாதிரி இல்லையே என்று கேட்க இந்த வீட்டில லவ் மேரேஜ் பண்ணிட்டு தான் வந்துட்டு இருக்காங்க ஆனா அவங்களுக்கு தீபாவளிக்கு சீர்வரிசை கொடுத்துட்டு போறாங்க நானும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன் ஆனா எங்க வீட்ல என் மேல இருக்கிற கோபம் கொஞ்சம் கூட குறையில்ல எனக்கு அந்த சந்தோஷம் கிடைக்காது போல என்று சொல்ல, நீங்க சொல்றது கரெக்ட் தான் பொறந்த வீட்டுல இருந்து கிடைக்கிற மரியாதை எல்லாருக்குமே சந்தோஷத்தை தான் கொடுக்கும் என்று சொல்ல, சரி நந்தினி நான் அப்புறம் பேசுறேன் என போனை வைத்து விடுகிறார். உடனே சூர்யாவிடம் நீங்க விஜி அக்காக்கு அண்ணன் ஸ்தானத்திலிருந்து இதுவரைக்கும் என்ன செஞ்சு இருக்கீங்க என்று கேட்கிறார். நீ என்ன சொல்ல வர நந்தினி என்று கேட்க நந்தினி சீர் செய்யும் விஷயத்தை பற்றி விளக்கமாக சொல்ல எனக்கு அதெல்லாம் தெரியாது நந்தினி நீ என்ன பண்ணனும்னு சொல்லு பண்ணலாம் என்று சொல்ல அதுக்கு முதல்ல நம்ம துணி கடைக்கு போகணும் என சொல்லி கிளம்புகின்றனர்.
பிறகு வெளியில் வந்த சூர்யா அனைவருக்கும் காசு கொடுக்கிறார். அங்கிருந்து கிளம்பும்போது நந்தினிக்கு வழியில் தடுக்க சூர்யா நந்தினி தூக்கிகொண்டு வந்து காரில் உட்கார வைத்து அழைத்துச் செல்கிறார். காரில் வரும்போது நந்தினி சூர்யாவையே பார்த்துக்கொண்டு வர கவனித்த சூர்யா என்ன என்னையே பாத்துக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். சும்மாதான் என்ன சொல்லுகிறார். சும்மா நான் சைடுல கூட பாக்கலாமே என் மேல மட்டும் ஏன் உன் பார்வை இருக்கு என்று கேட்க அதுதான் எனக்கே தெரியல என்று சொல்லுகிறார். பிறகு நான் உன்கிட்ட கேட்டது ஏன் நீ திருப்பி என்கிட்ட கேக்குறியா என்று சொல்லிவிட்டு சூர்யா அமைதியாகிவிட மீண்டும் நந்தினி சூர்யாவை பார்த்து சிரிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் விஜிக்கு ரெண்டு புடவையும் கொடுக்க போறியா என்று கேட்க இல்லை இதுதான் விஜி அக்காக்கு என்று சொல்லுகிறார் அப்ப இது என்று கேட்க ஏன் நான் கட்ட மாட்டேன்னா என்று நந்தினி சொன்ன சூர்யா வியந்து பார்க்கிறார். பிறகு மாதவி சுரேகா இருவரும் எங்களுக்கு சமைச்சு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டா என்று சுந்தரவல்லி இடம் கம்ப்ளைன்ட் கொடுத்து கொண்டு இருக்க சூர்யாவும் நந்தினியும் விஜி வீட்டுக்கு வந்து இதுவரைக்கும் அண்ணனா நான் உனக்கு எந்த முறையும் செஞ்சது கிடையாது இது உன்னோட அண்ணனோட சீர் என்று சொல்லி கொடுக்க விஜய் கண்கலங்கி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…