சூர்யா கொடுத்த வார்னிங்.. மாதவி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது

நேற்றைய எபிசோடில் நந்தினி சாம்பிராணி புகையை போட ஹரிதா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்து எதுக்காக இப்படி புகை போட்டுக்கிட்டு இருக்க என்று கேட்க, கண் திருஷ்டி போகட்டும் என்று போடுவதாக சொல்ல ஹரிதா எனக்கு வேற டஸ்ட் அலர்ஜி இருக்கு என்று சொல்லி நந்தினியை அறைந்து விடுகிறார். உடனே அனைவரும் அங்கிருந்து சென்றுவிட கல்யாணத்திடம் கொடுத்து விட்டு நந்தினி ரூமுக்கு சென்று விடுகிறார். இரண்டு பேர் வீட்டுக்கு வர அவர்கள் ஈவன்ட் மேனேஜ்மென்ட் இல் இருந்து வந்திருக்கிறார்கள் எது மாதிரியான பேக்கேஜ் வேணும்னு சொன்னீங்கன்னா நாங்களும் எல்லா ஏற்படும் செய்திடுவோம் நீங்க வந்து கெஸ்ட் மாதிரி போனா மட்டும் போதும் என்று சொல்ல, சுந்தரவல்லி ஹரிதாவை செலக்ட் பண்ண சொல்கிறார். அனைவரும் உட்கார்ந்து பார்த்து கொண்டு இருக்க கல்யாணம் தனியாக உட்கார்ந்து கண்கலங்கி கொண்டிருக்க சூர்யா வந்தவுடன் அழுது கொண்டு நடந்த விஷயம் அனைத்தையும் சூர்யாவிடம் சொல்ல சூர்யா கோபமாக உள்ளே வந்து நேராக நந்தினியை அழைத்துக் கொண்டு கீழே வருகிறார். அனைவரும் முன்னிலையிலும் யார் உன்னை அடிச்சது என்று கோபமாக கேட்கிறார். ஆனால் ஹரிதா நான் தான் அடிச்சேன் என்று சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்கிறார்.

உனக்கு தான் அவ பொண்டாட்டி என்ன பொறுத்த வரைக்கும் வீட்டு வேலை செய்றவ என்று சொல்ல, சுந்தரவல்லி யார் முன்னாடி யார அடிக்க சொல்ற என்று கேட்க, என் பொண்டாட்டிய அடிக்கும்போது எல்லாரும் வாய மூடிக்கிட்டு தானே நின்னுகிட்டு இருந்தீங்க அதே மாதிரி நில்லுங்க இல்லனா உங்க எல்லாருக்கும் அவ்வளவுதான் மரியாதை என்று சொல்ல, என் மேல இவ கை வச்சுடுவாளா என்று மிரட்டி கேட்க நந்தினி ஹரிதாவை கன்னத்தில் அறைகிறார். உடனே கோபப்பட்ட சுந்தரவல்லி தோட்டவேலை பாக்குறவ இவ என்னோட மருமகள் அடிப்பாலா என்று சுந்தரவல்லி கோபப்பட உடனே சூர்யா மத்தவங்கள மதிக்காத யாரும் என்னோட இதுக்கு சமம் என்று சொல்லி கோபப்பட்டு அனைவரையும் அடக்கி விட்டுச் செல்கிறார். ரூமுக்கு வந்த சூர்யா நந்தினியிடம் இந்த அடிய நீ அப்பவே அடிச்சா அவளுக்கு கொழுப்பு அடங்கியிருக்கும் என்று சொல்ல, நாள பின்ன அவங்க முகத்துல எப்படி முழிக்கிறது என்று கேட்க, யார்கிட்டயும் இந்த வீட்ல உன்னோட தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. இந்த வீட்ல நீ எந்த வேலையும் பார்க்க கூடாது படிக்கிறத மட்டும் தான் செய்யணும் இல்லனா தொலைச்சிடுவேன் என்று மிரட்டி விட்டு சென்று விடுகிறார்.

ஹரிதாவை அறைந்த விஷயம் பற்றி மாதவி சுரேகா இருவரும் கோபமாக பேசிக்கொள்கின்றனர். நீ கவலைப்படாத இது எல்லாத்துக்கும் அம்மா ஒரு முடிவு கட்டுவாங்க என்று சொல்லுகின்றனர். மறுபக்கம் ரூமில் சுந்தரவள்ளியின் அண்ணன் அண்ணி மகன் என அனைவரும் துணிகளை பேக் பண்ண குடும்பம்னா அப்படித்தான் இருக்கும் இதுக்காக இப்படி பண்ணலாமா என்று கேட்க இது மாதிரி அவமான படணும்னு எங்களுக்கு அவசியமில்லை என்று சொல்லுகின்றன. அவ்வளவுதான் பாசமா என்று சுந்தரவல்லி கேட்க பாசத்துக்காக தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்ல, உங்களுக்கு சூர்யா முக்கியமா இல்ல உங்க தங்கச்சி முக்கியமா என் பையன் பண்ணது தப்பு தான் அதுக்காக இந்த தங்கச்சியோட உறவை முடிக்கணும்னு அவசியம் இல்லையே என்று சொல்ல, சூர்யாவுக்கு இப்ப மட்டும் இல்ல எங்கள வந்ததுல இருந்து அவனுக்கு புடிக்கல இதனால இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி கிளம்ப, கண்டிப்பா நம்ம கிளம்பக்கூடாது என்று ஹரிதா சொல்லுகிறார். அந்த சூர்யா கொடுத்த தைரியத்தை அவ என்ன கைநீட்டி அடிச்சிருக்கா இப்படியே அவள விட்டுட்டு போக முடியாது நாம எல்லாரும் இங்கதான் இருக்கணும் இந்தக் கல்யாணம் நடந்தே ஆகணும் இத்தனை பேர் முன்னாடி என்ன கை நீட்டி அடிச்சிருக்கா நான் திருப்பி அடிக்க போற அடி இல்ல அந்த நண்பனை மட்டும் இல்ல சூர்யாவும் சேர்ந்து கதற போறாங்க அது நடக்காம நான் யுஎஸ் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் நந்தினி தூங்கிக் கொண்டிருக்க சூர்யா எழுந்து பிரஷப் ஆகிவிட்டு வந்து தூங்கட்டும் என சொல்லிவிட்டு கிச்சனுக்கு வருகிறார்.

சூர்யா வந்தவுடன் கல்யாணம் எழுந்திருக்க நீ தூங்கு நான் டீ போட்டுக்கிறேன் என்று சொல்லி கிச்சனுக்கு வருகிறார். சூர்யா தப்பு தப்பாக செய்ய கல்யாணம் ஒன்று ஒன்றாக சொல்லிக் கொடுக்க அதே போல் செய்கிறார். டீயை போடுவதற்குள் கல்யாணத்தை ஒரு வழி ஆக்கி விடுகிறார் சூர்யா. சர்க்கரையை போடுவதற்கு பதில் உப்பு போட வர கல்யாணம் தடுத்து நிறுத்துகிறார். பிறகு சர்க்கரை போட்டவுடன் சூர்யா டீயை அப்படியே டம்ளரில் எடுத்து ஊத்த போக வடிகட்ட வேண்டும் என கல்யாணம் சொல்லி வடிகட்டியை கொடுக்கிறார். பிறகு சூர்யா வடிகட்டி நந்தினிக்கு டீயை கொடுத்து எழுப்ப நீங்களே போட்டிங்களா என்று கேட்க, என்னோட சமத்து பொண்டாட்டிக்கு நானே போட்டேன் என்று சொல்ல நந்தினி பயப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial episode update
jothika lakshu

Recent Posts

அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் சிங்கம் புலி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

4 hours ago

சிம்பு குறித்து பேசிய நடிகர் கென் கருணாஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…

4 hours ago

வெற்றிமாறன் எழுதிய முதல் கதை அரசன்.. இயக்குனர் ராம் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…

4 hours ago

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

1 day ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

1 day ago

வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago