சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,சூர்யா விட்ட சவால்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினியை மிரட்டி அவர்கள் உட்கார வைக்க நந்தினி கண் முன்னே அந்த பொண்ணுக்கு இப்படி ஆவதால் மயங்கி விழுந்து விடுகிறார். மறுபக்கம் அந்த லாரி டோல் வழியா வரல அவங்க இங்கே எங்கேயாவது சுத்திட்டு இருக்கலாம் இல்ல தனி வழியில் எங்கேயாவது போய் இருக்கலாம் என்று சொல்லுகிறார். என்னால இங்க சும்மா உட்கார முடியாது டாடி என்று சொல்ல போலீஸ் கண்டிப்பா உங்க வைபை கண்டுபிடிச்சிடலாம் என்று போலீஸ் சொல்ல, மறுபக்கம் சுந்தரவல்லி வெளியில் காத்துக் கொண்டிருக்க காலைல உங்க அப்பா வரலைன்னா நான் சொன்னதை செஞ்சே தீருவேன் என்று சொல்ல என்ன சொன்னாங்க என்று மாதவி சுரேகாவிடம் கேட்க நாளைக்கு என்னுடைய நினைவு நாளாக இருக்கும் என்று சுந்தரவல்லி சொன்னதைக் கேட்டு மாதவி அசோகன் அதிர்ச்சி அடைகின்றனர். எதுக்குமா இப்படி பேசுறீங்க என்று கேட்க நான் இன்னைக்கு ரூம்ல போய் கதவை சாத்திடுவேன் காலைல உங்க அப்பா வந்து கதவை தட்டலைன்னா நீங்க எல்லாரும் கதவை ஒடச்சி என் பிணத்தை எடுக்கிற மாதிரி ஆயிடும் என்று சொல்லிவிட்டு ரூமுக்குச் சென்று வருகிறார். அருணாச்சலமும் சூர்யாவும் நந்தினியை தேடி அலைய, நான் உங்களை வீட்ல விட்டு விடுகிறேன் என்று சொல்ல, சுந்தரவல்லி மிரட்டத்துக்காக தான் அப்படி சொல்லுவா நீ எதுக்கு பயப்படுற என்று கேட்க, ஏதாவது தப்பா ஆயிடுச்சின்னா நீங்கதான் குற்ற உணர்ச்சியில் இருக்கிற மாதிரி வாழனும் தயவு செய்து அமைதியா வாங்க, அப்போ நந்தினி டா என்று சொல்ல நந்தினியை கண்டிப்பா நான் தேடி கூட்டிட்டு வந்துருவேன் என்று சொல்லுகிறார். சூர்யாவும் அருணாச்சலம் வீட்டுக்கு வந்து இறங்கி சூர்யாவிடம் பேசிவிட்டு உள்ளே வந்தவுடன் அருணாச்சலம் கதவை தட்ட சுந்தரவல்லி திறக்கிறார்.

சூர்யாவை பார்த்த சுந்தரவல்லி நாளைக்கு விழா பிரம்மாண்டமா இருக்கணும் அதற்கான ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்ல, சூர்யா நான் இப்போ சொல்றேன் நாளைக்கு உங்களோட வெட்டிங் டே செலிப்ரேஷனுக்கு முன்னாடி என் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்துருவேன் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி என்னோட கல்யாண நாளில் யார் இருக்கணும் இருக்கக்கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும் என்று சொல்ல, என்னோட டாடி ஓட கல்யாண நாள் இல்ல நானும் நந்தினியும் கண்டிப்பாக இருப்போம் என்று சொல்லுகிறார். சூர்யா பூஜை ரூமில் இருக்கும் கருப்பன் போட்டோவை பார்த்து எதுக்கு அவளுக்கு அவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிற, உன்ன விட்டா அவளுக்கு வேற யாரு இருக்கா அவளுக்கு குலசாமி எல்லாமே நீதானே என்று அழுது புலம்புகிறார். மறுபக்கம் நந்தினி அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். மறுபக்கம் சூர்யா கடவுளிடம் அழுது கொண்டே இதுவரைக்கும் நான் உன்கிட்ட எதுவும் கேட்டதில்லை என் நந்தினி மட்டும்தான் கேட்கிறேன் அவ ரொம்ப பாவம் அவள தயவுசெய்து காப்பாத்து எனக்கு வேற எதுவும் பண்ணித் தர வேண்டாம் என்று கெஞ்சுகிறார். அவ எங்க இருக்கிறான்னு மட்டும் ஏன் கண்ணுல காட்டு என்று சொல்லி அழுகிறார். உடனே நந்தினி எதிரில் வந்து நின்று உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் என்று சொல்வது போல தோன்றிவிட்டு மறைந்து விடுகிறார்.

நந்தினி தப்பித்துப் போக முயற்சி செய்ய அனைவரும் வந்துவிட உன்னால எங்கேயும் தப்பிச்சு போக முடியாது உள்ளே போ என்று அழைத்துச் சென்று விடுகின்றனர். சுந்தரவல்லி எல்லோருக்கும் போன் போட்டு திருமண நாளுக்கு கூப்பிடுகிறார். அருணாச்சலம் நம்ம வீட்டுல இவ்வளவு நாளா இருந்த பொண்ணு இப்போ காணோம் அத பத்தி உனக்கு எந்த கவலையும் பதட்டமும் இல்லையா என்று கேட்கிறார். எனக்கு எதுக்கு இருக்கணும் என்று கேட்க நாளைக்கு நந்தினி வரல நான் ஃபங்ஷன்ல கலந்துக்க மாட்டேன் என்று அருணாச்சலம் சொல்ல அவ வரமாட்டா என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். அவ வருவாளா மாட்டாளாங்குறது உங்களுக்கு தெரியணும் அவ்வளவுதானே என்று சொல்லி இரண்டு பேப்பரில் நந்தினி வருவாளா மாட்டாளா என்று எழுதிப் போட்டு இருக்கேன் அதில் நந்தினி வரமாட்டானா நாளைக்கு இவங்க அப்பா ஃபங்ஷன்ல கலந்துக்கணும் அப்படி வருவா என்று வந்தால் அவ வர வரைக்கும் பங்க்ஷன் இருக்கும் நடக்காது என்று சொல்லுகிறார். சுரேகா யார் அந்த சீட்டை எடுப்பார்கள் என்று கேட்க சூர்யாவே எடுக்கட்டும் என்று சொல்ல சூர்யா சாமியை வேண்டிக் கொண்டு எடுக்க நந்தினி வரமாட்டாள் என வந்து விடுகிறது. உடனே சுந்தரவல்லி சாமியே சொல்லிடுச்சு அவ வரமாட்டா இனி வருவா என்ற எண்ணம் உனக்கு இருந்தால் அதை சுத்தமா அழிச்சுடு என்று சொல்ல சூர்யா கோபமாக சென்று விடுகிறார்.

மறுபக்கம் நந்தினி இடம் வீடியோவில் ஒரு பொம்மையின் மேல் பட்டாசுகளை மாற்றி அது வெடிப்பது போல வீடியோவை காட்டி நாளைக்கு உன்னைய இது மாதிரி தான் பண்ண போறோம் என்று சொல்லி இந்த வீடியோவை உன் புருஷனுக்கு அனுப்பி வைப்போம் என சொல்லுகின்றனர். சரி நாங்க போய் பேசிட்டு வருவோம் இவளை பத்திரமா பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சூர்யாவுக்கு போன் போடுகின்றனர். சூர்யா போனை எடுத்தவுடன் உன் பொண்டாட்டிய தேடி அலைஞ்சுகிட்டு இருக்கியா அவ எங்ககிட்ட பத்திரமா இருக்கா நீ யாரென்று சூர்யா கேட்டு விட்டு உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் எத்தனை லட்சம் வேண்டும் கோடி வேண்டும் நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என் நந்தினியை மட்டும் விட்டுடு என்று சொல்லுகிறார். உனக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் அதைப் பார்த்துட்டு என் லைனுக்கு வா என்று சொல்ல சூர்யா வீடியோவை பார்த்து அவர்களிடம் கெஞ்சி பேசுகிறார். நீங்க என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று சொல்ல, அப்ப நான் சொல்றது செய் என்று சொல்லி நாளைக்கு ஆறு மணிக்கு உங்க வீட்டு எதிர்ல இருக்குற ரோட்ல வந்து நில்லு என்று சொல்ல அப்படி நின்னா நீ வருவியா என்று கேட்க நான் வந்து மாற்றத்துக்கு நான் என்ன கேனையா என்று கேட்கிறார். நான் சொல்றத மட்டும் செய் என்று சொல்லி 33 என்ற நம்பர்ல ஒரு ஆட்டோ வரும் அதுல ஏறி போனால் உனக்கு பார்சல் ஒன்னு கொடுப்பாங்க அதை நீ எடுத்துகிட்டு வந்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துட்டேனா ஒரு கையில பெட்டி இன்னொரு கைல உன் பொண்டாட்டி என்று சொல்லுகிறார்.

நான் கண்டிப்பா செய்றேன் என்று சூர்யா சொல்ல, இன்னொரு விஷயம் நீ போலீஸ்கெல்லாம் போகக்கூடாது அப்படி போனா உன் பொண்டாட்டி எங்க கையில இருக்கா ஞாபகம் வச்சுக்கோ அப்படி மீறி போனினா பீஸ் பீஸ்சாதா வருவா அதுவும் இல்லாம நீ எடுத்துட்டு வர போட்டியில தடை செய்யப்பட்ட போதை பொருள் இருக்கும் அது போலீசுக்கு தெரிஞ்சா உன்ன தான் புடிப்பாங்க என்று சொல்ல அதெல்லாம் நான் பத்திரமா பாத்துக்குறேன் ஆனா நந்தினிக்கு மட்டும் எதுவும் ஆகக்கூடாது என்று சொல்ல அவர்களும் சரியென சொல்லிவிட்டு போனை வைக்க சூர்யா டென்ஷன் ஆகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

7 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

7 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

7 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago