தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
மூன்று முடிச்சு சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலும் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி டான்ஸ் கம்பெட்டிஷனில் கலந்து கொள்ள போகும் விஷயத்தை சொல்ல அருணாச்சலம் பாராட்ட மற்றவர்கள் கடுப்பாகின்றனர். நாளைக்கு நடக்கப்போற டேன்ஸ் காம்படிஷனை எல்லாரும் வந்து பார்க்கலாம் நாங்க ஜெயிச்சு கோல்ட் செயின் வாங்குறத பார்த்து கைதட்டலாம் என்று சொல்ல சுந்தரவல்லி கோபப்பட்டு சென்று விடுகிறார். உடனே பிரபுவும் நம்ம இந்த டான்ஸ் போட்டியில் கலந்துக்கிட்டு அவன் மூஞ்சியில் கரியை பூசணும் என்று சொல்லுகிறார். சூர்யா பதிவு பண்ண போக உடனே பிரபுவும் நாங்களும் கலந்துக்க போறோம் என்று சொல்ல மீண்டும் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. உடனே ராஜா தம்பி நீங்க ரெண்டு பேருமே போய் பதிவு பண்ணுங்க யார் ஜெயிக்கிறீங்களோ ஜெயிச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
உடனே ரூமில் மாதவி சுரேகா இருவரும் இதை எப்படியாவது தடுக்கணும் என்று சுந்தரவல்லி இடம் சொல்லுகின்றனர். அருணாச்சலம் வந்து நிற்க சுந்தரவல்லி நீங்க என்ன சொன்னீங்க சூர்யாவுக்காகதான சொன்னீங்க இப்ப எதுக்கு ஆட்டம் எல்லாம் என்று கேட்கிறார். நீங்க எல்லாத்தையும் பாத்துட்டு சந்தோஷமா இருங்க நாங்க கிளம்புறோம் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியில் வருகிறார். உடனே சூர்யா வந்து இவங்களை எதுக்கு தடுத்துகிட்டு இருக்கீங்க, நந்தினி எங்க ஜெயிச்சு பரிசு வாங்கிடுவாங்களோனு பயந்துட்டு ஓடுறாங்க என்று சொல்ல, சுந்தரவல்லி இவ பெரிய நடன சரஸ்வதி இவ டான்ஸ் ஆடணும்னு ஃபர்ஸ்ட் பிரைஸ் தான் என்று கோபப்படுகிறார். நீ இதுக்கெல்லாம் கவலைப்படாத நந்தினி அவர்களுக்கு பொறாம முடிஞ்சா அவங்கள டான்ஸ் ஆடி ஜெயிக்க சொல்லு என்று சவால் விடுகிறார். உடனே சுந்தரவல்லி என்ன ஆடி கிழிக்கிறான்னு நானும் பாக்குறேன் என்று உள்ளே சென்று விடுகிறார்.
மறுபக்கம் ஆதிரை குட்டி பாப்பாவிற்கு மருதாணி வைக்க நந்தினியும் வந்து எனக்கும் பிடிக்கும் வச்சு விடுறீங்களா என்று சொல்ல, பாப்பாவுக்கு வச்சதுக்கு அப்புறம் உங்களுக்கு வைக்கிறேன் என்று சொல்லுகிறார். நந்தினி எங்க அம்மா மருதாணி வெச்சு விடுவாங்க அதுக்கப்புறம் நீங்க வச்சுவிட போறீங்க என்று சொல்ல எனக்கு அந்த கொடுப்பனையே கிடைக்கல எங்க அம்மாவ போட்டோல தான் பார்த்தேன் என்று சொல்லி கண்கலங்குகிறார். பாப்பாவை கொல்ல ஆட்கள் வாசலில் வந்தது நின்று பாப்பாவை கத்தியால் குத்த வர ஆதிரை நந்தினி பயப்பட உடனே பிரபு அவர்களிடம் சண்டை போடுகிறார். கொஞ்ச நேரத்தில் அவர்கள் பிரபுவை பிடித்து விட விட சூர்யா வந்து அடிக்க குடும்பத்தினர் அனைவரும் வெளியில் வந்து விடுகின்றனர். அவர்கள் தப்பித்தோட குழந்தைக்கு வலிப்பு வந்துவிட கையில் இரும்பு கொடுத்து சரி செய்கின்றனர்.
அப்பா அம்மாவோட மரணத்தை எதிரில் பார்த்த அதிர்ச்சியில் அவளுக்கு மூச்சு திணறலும் வலிப்பும் வரும் அதிர்ச்சியான சம்பவம் நடந்தால் அவளுக்கு இப்படி ஆகும் என்று சொல்லுகிறார். ஆதிகேசவன் அவர்களது ஆட்கள் மீது கோபப்பட்டு அடிக்க, இதுக்கு அப்புறம் நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க வெளியூரிலிருந்து ஆளை இறக்குறேன் குடும்ப வாரிசுன்னு சொல்ற அந்த பேத்தியை கொன்னு அந்த ஆள அழ வைப்பேன் அதுவரை நான் ஓயமாட்டேன் என்று திட்டி அனுப்பி வைக்கிறார். குட்டி பாப்பா சாப்பாடு தயாராயிடுச்சு எல்லாரும் சாப்பிட வாங்க என்று எல்லோரிடமும் சொல்லி கூப்பிடுகிறார். அனைவரும் வந்து சாப்பிட உட்கார மாதவி நம்ம எல்லார் கூடவும் தான் உட்கார்ந்து சாப்பிடனுமா என்று கேட்க சூர்யா பதிலடி கொடுக்கிறார்.
நந்தினியும் பெரியவரும் சாப்பாட்டை பரிமாற அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க ஆதிரை பிரபு வருகின்றனர். பிரபு இந்த கும்பலோட நாங்க சாப்பிட மாட்டோம் ரூம்ல போய் சாப்பிட்டுக்குறோம் என்று சொல்ல சுந்தரவல்லி கோபப்படுகிறார். உடனே சூர்யா இவரு பைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு இருக்காரு ரூம்ல எடுத்துட்டு போய் கொடுத்தா தான் சாப்பிடுவாரு என்று சொல்லுகிறார். அருணாச்சலம் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று சொல்ல பிரபு வேண்டாம் என சொல்லிவிட்டு கோபமாக ரூமுக்கு வர, ஆதிரை சமாதானப்படுத்துகிறார். அந்த சூர்யா இருக்கானே அவனும் அவன் குடியும் எனக்கு அவன புடிக்கல அவன்கிட்ட என்னால பழக முடியாது என்று சொல்ல, ஆதிரை நம்ம என்ன இங்கேவா இருக்க போறோம் திருவிழா முடிஞ்ச உடனே போகப் போறோம் அப்புறம் அவங்க யாரோ நம்ம யாரோ அவ்வளவு தானே அருணாச்சலம் அய்யாவும் நந்தினியும் எவ்வளவு பாசமா உங்களை கூப்பிடுறாங்க தயவு செய்து சாப்பிட வாங்க என்று கூப்பிடுகிறார்.
பிரபுவும் சாப்பிட உட்காரா, சூர்யா வம்பு இழுக்க அருணாச்சலம் அமைதியாக இருக்கச் சொல்ல பிறகு தாத்தா பேத்தி இருவரையும் உட்கார வைத்து ஆதிரையும் நந்தினி பரிமாறுகின்றனர். பிரபு அருணாச்சலத்திடம் அடங்காத பசங்கள அடிச்சு தான் வளர்க்கணும் என்று சொல்ல சுந்தரவல்லி கரெக்டா தான் சொல்றீங்க தம்பி என்று சொல்லுகிறார். சூர்யா ஆதிரையிடம் சட்னி கேட்க பிரபு கூப்பிட்டு அவருக்கு பரிமாற சொல்லுகிறார். பெரியவர் இந்த ஊர்ல இருந்து நீங்க போகும்போது உங்க மனசுல இருக்குற குழப்பம் பிரச்சனை எல்லாம் தீர்ந்துதான் போவீங்க என்று சொல்லுகிறார்.
சூர்யா பாப்பாவிடம் பெரிய பொண்ணு ஆனதுக்கு அப்புறம் சிடு சிடுன்னு இருக்கக் கூடாது அதே மாதிரி கன்ஜூஸ் மாதிரி இருக்கக்கூடாது என்று சொல்ல கன்சூஸ்னா என்ன அங்கிள் என்று சொல்ல ஒரு ரூபா கூட செலவு பண்ண கூடாதுன்னு நினைக்கிறவங்க தான் நீ பார்த்ததில்லையா நான் உனக்கு அப்புறம் காட்டுறேன்னு என சொல்ல, உடனே பிரபு நீ பொறுப்பே இல்லாம இருக்கிற ஊதாரிய பாத்திருக்கியா நான் காட்றேன் என்று பதிலுக்கு அவரும் பேசுகிறார். கொஞ்ச நேரத்தில் ஏகாம்பரம் குடும்பத்தினர் இவர்கள் தங்கியிருக்கும் அதே வீட்டிற்கு வந்து ரூம் கிடைக்குமா என்று கேட்கின்றனர். ரூம் இல்லை என்று சொல்ல, ஒரு ரூம் கிடைச்சா போதும் என்று சொல்ல மேலே இருந்த பிரபு ரூம் இல்லன்னு அனுப்பி வைங்க என்று சொல்லுகிறார். இதனை நந்தினியும் ஆதிரையும் கவனிக்க உடனே ஏகாம்பரம் இந்த கஞ்ச பையனா இவ்வளவு பெரிய பங்களால தங்கி இருக்கான் என் கண்ணை என்னால் என் நம்ப முடியல என்று சொல்ல நம்ப இந்த பங்களாவில் தான் டாடி தங்கி ஆகணும் என்று வேல்விழி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் ஏகாம்பரம் குடும்பத்தினர் வீட்டுக்கு வர சூர்யா இங்கே இருக்கிற யாராவது துரத்திட்டு கூட நான் அவங்களுக்கு ரூம் கொடுப்பேன் என சொல்லுகிறார். யாரை துரத்து வேணும்னு சொல்ற என்னையா என்று பிரபு கேட்கிறார்.
நந்தினி சூர்யாவிடம் குழந்தையை வச்சுட்டா இப்படி பேசுவீங்க என்று சொல்ல அதெல்லாம் தெரிஞ்சா தானே என்று பிரபு சொல்கிறார். பிறகு பெரியவர் சமபந்தி விருந்து குறித்து பேச ஆரம்பிக்க ஆதிரை விளக்கமா சொன்னா உஷாராயிடுவாங்களே என்று பயப்படுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Thalaivar Thambi Thalaimaiyil Teaser | Jiiva | Nithish Sahadev | Kannan Ravi | Deepak Ravi
Happy Birthday Lyric Video | Revolver Rita | Keerthy Suresh | Sean Roldan | JK…
Aan Paavam Pollathathu Official Trailer | Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |…
OTHERS Teaser | Aditya Madhavan, Gouri | Anju Kurian | Abin Hariharan | Ghibran |…
முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…