நந்தினிக்கு தெரிந்த உண்மை, கலங்கிய குடும்பத்தினர், மூன்று முடிச்சு சீரியல்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் திருமணத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று சிங்காரத்திடம் கேட்க அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். எல்லாரும் கஷ்டப்படுத்துற மாதிரி தான் பேசுவாங்க நல்லா பேசறதுக்கு இங்க யாரு இருப்பாங்க என்று பேச எதுக்கு அப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க என்று சிங்காரம் கேட்ட நான் பேசுறதுனால என்னப்பா ஊர்ல எவ்வளவு கேவலமா பேசுறாங்க அதை கேட்கும் போது எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா என்று சொல்கிறார்.

சிங்காரம் எங்கமா யாரையும் காணோம் என்று கேட்க, வெளிய போயிருக்காங்க அப்பா என்று சொல்ல ஏமா அவர் எங்க போறன்னு சொல்லிட்டு போகலையா என்று சொல்ல நந்தினி இங்கு யாரும் புருஷன் பொண்டாட்டி எல்லாம் இல்ல அம்மாச்சி, நான் இந்த நரகத்திலிருந்து எப்ப போகணும்னு இருக்கு என்று சொல்ல உடனே அம்மாச்சி உன்னை ஏதாவது கஷ்டப்படுத்துறாங்களா என்று கேட்க, வேலை செய்யற பொண்ணு கழுத்துல தாலி கட்டுனத விட வேற என்ன கஷ்டம் இருக்கு அம்மாச்சி இதை விடு வேற கொடுமை ஏதாவது இருக்கா என்னால முடியல, இந்த நிமிஷமே உங்க கூட வந்துடனும் போல இருக்கு என்று அழுகிறார்.

உடனே அம்மாச்சி ஒரு வீட்டுக்கு தாலி கட்டி போனதுக்கப்புறம் இஷ்டத்துக்கு எடுத்தோம் கவுத்தோடு முடிவெடுக்க முடியாது நந்தினி என்று சொல்ல அப்படி எல்லாம் என்னால இருக்க முடியாது நான் ஆறு மாசமா இந்த வீட்ல இருப்பேன் என்று சொல்ல அப்பப்பா எதுவும் சொல்லலையா என்று கேட்கிறார். அதெல்லாம் பொறுமையா அப்புறம் சொல்ற அத்தை என்று சொல்லுகிறார்.

உடனே வேலை செய்யும் பெண் நந்தினியின் குடும்பம் வந்திருப்பதாக மாதவி மற்றும் சுரேகா இருவரிடமும் சொல்லுகிறார். அவங்கள விரட்டிட விடலாமா அக்கா என்று கூப்பிட மாதவி புஷ்பா நீ போ என சொல்லிவிட்டு அவசரப்பட்டு ஏதோ செய்ய வேண்டாம் கம்முனு இரு பொறுமையா வச்சி செய்வோம், வேற மாதிரி டீல் பண்ணுவோம் என்று மாதவியை சிரித்துக்கொண்டே சொல்லுகிறார். அதுவும் கரெக்ட் தான் என்று சுரேகா சொல்லுகிறார். அவர்களுக்கு நந்தினி சாப்பாடு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு போய் எல்லோரையும் சாப்பிட வைக்கிறார்.

உடனே நந்தினி தங்கை நான் இந்த சட்னி மிஸ் பண்றேன் கா என்று சொல்ல ஏன் அம்மாச்சி பண்ணுவாங்களே , அதுக்கு எங்க இப்ப கண்ணு தெரிய மாட்டேங்குது ஒன்னும் தெரிய மாட்டேங்குது என்று சொல்ல அப்படி எல்லாம் பேசக்கூடாது நீங்க என்ன பண்றிங்க நீங்க செய்ய வேண்டியது தானே என்று நந்தினி சொல்லுகிறார். உடனே நந்தினியின் தங்கை நீ இது மாதிரி ஏதாவது திட்டுக்கா, நீ திட்டினால் தான் அம்மா மாதிரி இருக்குது என்று சொல்ல நந்தினி கண்கலங்குகிறார்.

உடனே நந்தினி நான் உங்கள அழ வைக்கல தோப்பு எப்படி இருக்கு?நாத்து எப்படி இருக்கு? மாடு எப்படி இருக்கு? பால் யார் கறக்குறாங்க? என்றெல்லாம் விசாரிக்க உடனே நந்தினியின் தங்கை தோப்பே இல்ல என்று சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைகிறார். இப்ப நாங்க அந்த வீட்ல இல்ல நாங்க வேற ஒரு இடத்துல மாறிட்டோம் என்று சொல்ல, நந்தினி என்ன ஆச்சு என்று கேட்க நந்தினியின் தங்கை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லுகிறார். இவ்வளவு நாளா நம்ப அத எப்படி பாத்துக்கிட்டோம் நம்மள துரத்தி அடிக்க எப்படிப்பா மனசு வந்துச்சு என்று கேட்கிறார்.

உடனே கோபமான நந்தினி சரி நீங்க பாத்துட்டீங்களா கிளம்புங்க என்று சொல்ல என்னடி வந்த உடனே அனுப்புற என்று சொல்ல பின்ன இவ்வளவு தூரம் பார்த்துகிட்ட உங்களை துரத்தி அடிச்சவங்களுக்கு இப்போ நீங்க வந்த உடனே பாசமா பேசிடுவாங்களா உங்களை அசிங்கப்படுத்துவாங்க அது எனக்கு கஷ்டமா இருக்கும் உங்களுக்கு கஷ்டமா இருக்கும் எதுக்கு இந்த வேலை என்று சொல்லுகிறார். உடனே அம்மாச்சி நாங்க தல தீபாவளிக்கு சீர் கொண்டு வந்திருக்கோம் என்று சொல்ல இப்ப அதுதான் ரொம்ப முக்கியம் நீங்க சீர் கொண்டு வருவது பாத்துட்டு இருக்காங்களா என்று சொல்லுகிறார்.

நான் கஷ்டப்படுறது பத்தாதா நீங்களும் கஷ்டப்படணுமா ஒன்னும் வேணாம் நீங்க கிளம்புங்க என்று சொல்லுகிறார். உடனே மாதவியும்,சுரேகாவும் அங்கே வந்து வாங்க வாங்க.. என்று கூப்பிட்ட எதுக்கு வெளியே உட்காந்து இருக்கீங்க வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுங்க நீங்க ஒன்னும் வேலைக்காரங்க கிடையாது என்று சொல்ல அவர்களும் எழுந்து உள்ளே வருகின்றனர். உடனே மாதவி ஊரிலிருந்து வந்திருக்காங்க அவங்களுக்கு சட்னி சாம்பார் தான் குடுப்பியா நந்தினி. உடனே புஷ்பாவை கூப்பிட்டு சிக்கன் மற்றும் முட்டை குழம்பு பிரிட்ஜில் இருக்கு போய் எடுத்துட்டு வா என்று சொல்ல, பிரிட்ஜில் இருக்கும் குழம்புகளை எடுத்து வந்து அவரும் அந்த குழம்புகளை எல்லோருக்கும் ஊற்றுகிறார்.

சாப்பிடுங்க என்று மாதவி சொல்ல, இது மாதிரி எல்லாம் நீங்க எங்கேயோ பார்த்திருக்க மாட்டீங்க சாப்பிடுங்க என்று சொல்ல சிங்காரம் சிக்கனை கையில் எடுத்து பார்த்து இல்லம்மா ஐஸ் மாதிரி இருக்கு என்று சொல்ல அது ஒன்னும் இல்ல நாங்க ரெண்டு நாள் முன்னாடி வெளியே ஹோட்டல்ல சாப்பிட போனோம் அங்க மிச்சம் மீதி மீந்து இருந்தத பேக் பண்ணி கொடுப்பாங்க வெளிய வரவும் இல்லாதவங்களுக்கு யாருக்கெல்லாம் கொடுத்துட்டு வருவோம். ஆனா அன்னைக்குன்னு பாத்து யாரும் இல்ல நல்லவேளை நீங்க வந்தது சௌகரியமா போச்சு சாப்பிடுங்க என்று சொல்ல அனைவரின் முகம் மாறுகிறது.

உடனே அனைவரும் எழுந்து கையை கழுவி விட, நந்தினி கோபப்பட்டு இதுக்கு தான் நான் அப்பவே கிளம்புன்னு சொன்ன என்று சொல்ல நாங்கள் கிளம்பி விடுகிறோம் மாப்பிள்ளை வந்தவுடன் சொல்லிட்டு போறோ என்று சொல்ல இன்னொருவாட்டி மாப்பிள்ளை என்றெல்லாம் சொல்லாத, அவங்க மட்டும் என்னவேணா முடிவு எடுக்கலாம் நான் எடுக்க கூடாதா என்று கோபமாக சொல்லுகிறார். நீ சொன்ன மாதிரி நாங்க கிளம்பி விடுகிறோம். ஆனா ஐயாவும் சின்னையாவும் வந்தவுடனே சொல்லிட்டு கிளம்புறோம் என்று சிங்காரம் சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Moondru Mudichu episode Update
jothika lakshu

Recent Posts

MYSAA Teaser

MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films

12 minutes ago

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago