moondru mudichu and singapenne serial promo 07-02-26
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் குப்பை இருக்கும் இடத்தில் ரத்த கரையுடன் ஒரு கோணிப்பை இருப்பதை பார்த்த குப்பைக்காரன் பயந்து அலறடித்துக் கொண்டு ஓடுகிறார். அருணாச்சலம் மகேஷ் அன்பு மூவரும் வீட்டுக்கு வர நந்தினி எங்கே சூர்யா சார் என்று கேட்க எங்கேயுமே சூர்யா இல்லை என்று சொல்ல உடனே சுந்தரவல்லி கண்கலங்குகிறார். இப்போ என்ன பண்றது என்று தெரியாமல் குடும்பத்தினர் கலங்கி நிற்க அந்த நேரம் பார்த்து ஒரு பெரியவர் ஓடி வந்து ஊருக்கு வெளியில் ஒரு கோணிப்பையில் ரத்தக்கரையுடன் ஒரு பிணம் இருப்பதாகவும் அது சூரியா தம்பியாக இருக்கும் ஆன சந்தேகமா இருக்கு என்று சொல்ல குடும்பத்தினர் பயத்தில் பதற சுந்தரவல்லி கதறி அழுகிறார். அது சூரியா சார இருக்காது என்று அனைவரிடமும் அழுது கொண்டு சொல்லுகிறார். சரி வா போய் பாத்துட்டு வந்தரலாம் என்று குடும்பத்தினர் அந்த இடத்திற்கு வருகின்றனர். அங்கு ஊர் பெரியவர்களும் நாட்டாமையும் இருக்க போலீசுக்கு சொல்லியாச்சு பெரிய குடும்பத்திலிருந்து வராங்க என்று சொல்லுகிறார். ஏன் பிரிக்காம இருக்கீங்க பிரிங்க நான் பாக்கணும் என்று சுந்தரவல்லி அழுது கொண்டே சொல்லுகிறார். ஆனால் அனைவரும் பிரிக்க தயங்க அன்பு கண்டிப்பா சூர்யாவா இருக்க மாட்டாரு உங்கள பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு நானே பிரிக்கிறேன் என்று சொல்லி பிரித்துப் பார்த்துவிட்டு சூர்யா இல்லை என்று சொல்லி மூட்டையை கீழே தள்ள வீரா வந்து விழுகிறார் கொஞ்ச நேரத்தில் ராஜாங்கமும் அவரது மனைவியும் வர மகேஷ் அவர்களை பார்த்து சூர்யா எங்கே என்று அழைக்க வீராவை பார்த்து இருவரும் அழுகின்றனர்.
உடனே அருணாச்சலம் எங்கடா உன் பையன் சூர்யா அவன் தான் என் தம்பியை ஏதாவது பண்ணி இருப்பான் என்று சொல்ல, மகேஷ் மீண்டும் சூர்யாவை எங்க வச்சிருக்க என்று கேட்கிறார். சூர்யாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உனக்கு அவ்வளவு தான் என்று சொல்லி மிரட்ட பதிலுக்கு ராஜாங்கமும் மகேஷ் சட்டையை பிடித்து சூர்யாவை நாம் மறைத்து வைத்து இருக்கேனா அப்போ வீராவை நானே கொன்னுட்டனா நீங்கதாண்டா கொன்னுட்டீங்க என்று சொல்லுகிறார். என் புள்ளையை இப்படி கொன்னுட்டீங்களேடா என்று சொல்லி அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து போலீஸ் வருகின்றனர். அவர்கள் வந்து விசாரிக்க ராஜாங்கம் இந்த பெரிய குடும்பத்த ஆளுங்கள் தான் என் தம்பியை கொன்னுட்டாங்க என்று சொல்ல, எதுக்கு பெரிய குடும்பம் மேல சந்தேகப்படுறீங்க என்று கேட்க சந்தேகம்லாம் இல்ல நிஜத்தை தான் சொல்றேன் அருணாச்சலம் பையன் சூர்யா தான் என் தம்பிய கொன்னுடுவேன்னு சொன்னா அதே மாதிரி செஞ்சுட்டா என்று சொல்ல சுந்தரவல்லி அப்படியெல்லாம் இல்லை என சொல்லுகிறார். சூர்யா சார் எதுக்காக அப்படி சொன்னாரு என்றதையும் கேளுங்க என்று ஆனந்தி சொல்ல இவங்க எல்லாம் நாடகமாட்றாங்க என்று பரமு சொல்லுகிறார்.
உடனே கோபப்பட்ட நந்தினி இப்படி பொய் மேல பொய் சொன்னா உன்னோட நாக்கு அழுகி போயிடுவோம் என்று சொல்லுகிறார். வீரா என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டது உண்மை அதுக்காக சூர்யா சேர அவன அடிச்சதும் இல்லை அதுக்கப்புறம் சூர்யா சார் காணாமல் போயிட்டாரு என்று சொல்ல, போலீஸ்காரர் நீங்க ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளைன்ட் கொடுங்க என்று சொல்ல, ராஜாங்கம் நான் இந்த பெரிய குடும்பத்து மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து வீராவை தூக்கிச் சென்று விட, இரவு அவருக்கு இறுதிச்சடங்கு செய்கின்றனர். அப்போதுதான் ராஜாங்கம் சூர்யாவிடம் அடி வாங்கிக் கொண்டு வந்ததனால் வீராவை திட்டிக் கொண்டு இருக்க அப்போதுதான் வாக்குவாதம் அதிகமாகி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அடித்து கொள்கின்றனர். ராஜாங்கத்தை கழுத்தைப் பிடித்து கொல்லப் போக இவர்களை தடுக்க பரமு வீராவை கட்டையால் பின்ன தலையில் அடிக்க மயங்கி விழுந்து இறந்து விடுகிறார். நம்ம கையாலேயே வீராவை கொன்னுட்டோமே என்று சொல்ல நாம கொள்ளல்ல என்று சொல்லுகிறார்.
நம்ம புள்ளைய கொன்னது சூர்யா தான் இதை ஊர் முழுக்க சொல்லி, நம்ம வீரா சாவுக்கு அவன் உயிர் தான் சரியான பதில் என்று சொல்லியதை நினைத்துப் பார்க்கின்றன. ராஜாங்கம் வீராவை நினைத்து அழ, பரமு நான் அழ மாட்டேன் மனசுல இருக்குற வருத்தம் இல்லாம போயிடும் இந்த ரணம் எப்போ ஆறும் தெரியுமா அந்த குடும்பத்தை பழிவாங்காமல் விடமாட்டேன், இத்தனை வருஷத்துல குழந்தை இல்லாம நான் கஷ்டப்படுறதை பார்த்திருக்கியா உங்க வீட்டுக்கு வரும்போது வீராவை என் புள்ளையா நினைச்சு தான் வந்தேன் என்று சொல்கிறார். அவன் உயிரை விட்டது வீணா போகக்கூடாது. அந்த ரெண்டு குடும்பமும் கிரீடத்தை சாத்தக்கூடாது பஞ்சாயத்தை மட்டும் கூட்டச் சொல்லு நான் பாத்துக்கிறேன் என்று சொல்ல மறுநாள் காலையில் பஞ்சாயத்தும் கூடுகிறது. எதற்காக பஞ்சாயத்து என்று அருணாச்சலம் கேட்க ராஜாங்கம் தான் பஞ்சாயத்தை கூட்டச் சொன்னதாக சொல்லுகிறார்.
உடனே பரமு மற்றும் ராஜாங்கம் இருவரும் வந்து பழியை பெரிய குடும்பத்தின் மேல் போட்டு பேசுகின்றனர். சூர்யா தான் வீராவை கொன்னுட்டு தலைமறைவாய் இருக்க இந்த கொலைகார குடும்பத்தோட கையால அம்மனுக்கு கிரீடம் வைக்க கூடாது என்று சொல்லுகிறார். எங்க சூர்யா சாரை கடத்தி வச்சி இருக்கிறது நீங்க தானே நாங்க சந்தேகப்படுறோம் அதுக்கு என்ன சொல்றீங்க என்று ஆனந்தி கேட்க உடனே நீங்க எல்லாம் அப்படி பேசக்கூடாது என்று ஊர் பெரியவர் சொல்ல அன்பு நாங்க ஏன் கேட்க கூடாது என்று சொல்ல, பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஆரம்பத்தில் இருந்து எங்க குடும்பத்தை கொள்ள பார்த்தது இந்த ராஜாங்கம் அதுக்கான ஆதாரம் எங்ககிட்ட இருக்கு ஆனா சூர்யா தான் வீடாகக் கொண்டான்றதுக்கு ஆதாரம் உங்ககிட்ட இருக்கா என்று பார்வதிக்கப்பட்ட இதுக்கெல்லாம் சூர்யா வந்தா தான் சரியான பதில் கிடைக்கும் என்று அசோகன் சொல்ல அவன் வரமாட்டான் என்று வீரா சொன்னவுடன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அன்பு மற்றும் ஆனந்தி மகேஷிடம் சூர்யா சாரை போலீஸ் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நம்ம கண்டுபிடிக்கணும் என்று சொல்ல ஆனந்தி கோவில் இருந்து வரும்போது அவர்தான் சூர்யா சார் வீட்டுக்கு போயிட்டு இருப்பார் என்று சொல்லி பிரைன் வாஷ் பண்ணி இருக்காரு என்று சொல்ல மறுப்பக்கம் ராஜாங்கம் என் தம்பிக்கு கொல்லி வச்ச மாதிரி உனக்கு வைக்கிறேன் போய் சேரு என்று சொல்ல அந்த இடத்திற்கு ஆனந்தி அன்பு நந்தினி வந்து நிற்க ராஜாங்கம் அவரது மனைவியும் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs