பத்திரிக்கையை பார்த்து ஷாக்கான சூர்யா, நந்தினிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகவும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் என்ன ஜீப்ல ஏத்துனது கூட பரவால்ல தங்கச்சி எங்களை ஏத்துனது தான் பதறிப் போயிட்டன். நகை திருடர்களும் அந்த கூட்டத்துல தானப்பா இருந்திருப்பான் என்று நந்தினி சொல்லுகிறார். ஆனா ஒன்னு யோசித்து பார்த்தா மட்டும் நல்லா தெரியுது. அந்த இன்ஸ்பெக்டர் சரியாவே விசாரிக்கல என்ன அரெஸ்ட் பண்றதுல தான் உறுதியா இருந்தாரு என்று நந்தினி சொல்லுகிறார். அவர்களது தங்கையும் அது என்னமோ உண்மைதான் கா என்று சொல்லுகின்றனர்.

இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்க அந்த இன்ஸ்பெக்டர் நான் ஏதாவது பண்ணி இருக்கணும், இல்ல இன்ஸ்பெக்டருக்கு தெரிஞ்சவங்களுக்கு என்னால பிரச்சனை வந்து இருக்கணும் அதுதான் காரணம் என்று நந்தினி சொல்கிறார். உடனே தேங்காய் வியாபாரி இன்ஸ்பெக்டர் மற்றும் நகை கடைக்காரர் மூவரும் சரக்கு குடித்துக்கொண்டு இருக்கின்றனர். அதில் தேங்காய் வியாபாரி என்னமோ ஜெயில்ல வச்சுருவேன், திருட்டு பட்டா கட்டிடுவேன் என்றெல்லாம் சொன்ன 3 மணி நேரம் கூட ஜெயில்ல இல்லை என்று அவரை திட்டுகிறார். ஆனா நான் சும்மா விடமாட்டேன் இந்த ஊரை விட்டு அவளை ஓட விடுறேன் அப்படி இல்லன்னா எங்க அப்பா எனக்கு வெச்ச பேர நான் மாத்திக்கிறேன் என்று சபதம் எடுக்கிறார்.

மறுபக்கம் சூர்யாவின் குடும்பத்தினர் மினிஸ்டர் வீட்டுக்கு பெண் பார்க்க வருகின்றனர். நம்ம இப்ப எதுக்கு இங்க வந்திருக்கோம் என்று சூர்யா கேட்க பிசினஸ் விஷயமா பேச வந்திருக்கும் என்று சுந்தரவல்லி சொல்லி சமாளிக்கிறார் உள்ளே அழைத்துக் கொண்டு அனைவரையும் உட்கார வைத்து பேசுகின்றனர் அப்போது மினிஸ்டர் அவரது சொத்து விவரங்களை பற்றி சொல்லுகிறார். சுந்தரவல்லி அதெல்லாம் சொல்லனுமா சார் என்று சொல்லிவிட்டு பொன்னை வர சொல்லி பார்க்கின்றனர்.

சூர்யா இந்த பொண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று ஞாபகப்படுத்தி பார்க்க பாரில் இருந்த ஞாபகம் வருகிறது. எல்லோருக்கும் டீ கொடுத்த பிறகு மாப்பிள்ளை வேணாம் மினிஸ்டர் கூட ஆக்கிடலாம் என்று சொல்ல உடனே சூர்யா மாப்பிள்ளையா கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லுகிறார். இது மட்டும் இல்லாமல் எனக்கு தெரியாம தான் இருங்க கூட்டிட்டு வந்தாங்க எனக்கு கெட்ட பழக்கம் அதிகமா இருக்கு நான் 24 மணி நேரமும் குடிப்பேன் நான் நல்லவன் கிடையாது என்றெல்லாம் சொல்லுகிறார் ஆனால் அந்த மினிஸ்டர் உண்மையை சொல்லும் இது போன்ற மாப்பிள்ளை தான் எனக்கு வேணும் என்று சொல்ல சுந்திரவல்லி சந்தோஷப்படுகிறார்.

உடனே சூர்யா பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல சுந்தரவல்லி வேண்டாம் என தடுத்தும் மினிஸ்டர் ஓகே சொல்லுகிறார். இருவரும் தனியாக பேச மேலே வருகின்றனர். சூர்யா என்ன கல்யாணம் பண்ணா உன்னோட லைஃப் ஃபுல்லா போயிடும். எனக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு. இங்க இருக்கிற எல்லா பார்லையும் நான் குடிச்சிருக்கேன். என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க சூர்யாவை மெய் மறந்து பார்த்துக் கொண்டு நிற்கிறால் மினிஸ்டர் மகள் அர்ச்சனா. இது மட்டுமில்லாமல் உன்கிட்ட பிடிச்சதே இந்த கோபம் தான். என்ன நடந்தாலும் நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று உறுதியாக இருக்கிறார்.

உடனே மாதவி கிச்சனுக்கு சென்று மினிஸ்டர் மனைவியிடம் சூர்யா குடிகாரன், என்று சொல்லுகிறார் மேலும் அவன் ஆறு மணிக்கு அலாரம் வச்சு எழுந்து குடிப்பான். அவனுக்கு எங்க பொண்ணையே கொடுக்க மாட்டோம் அப்படி இருந்தும் நீங்க ஏன் கொடுக்கணும் நினைக்கிறீங்க என்று போட்டுக் கொடுக்கின்றனர். அப்படியா சரி வாங்க என்று மினிஸ்டர் மனைவி அவர்களை கூட்டி செல்கின்றன.

சூர்யாவிடம் பேசிய மினிஸ்டரின் மகள் நான் எக்ஸ் மினிஸ்டர் ஓட பொண்ணு நிறைய சொத்து இருக்கு அழகாவும் இருக்கேன் ,ஆனா நீ அதெல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காம இருக்கிற உன்னோட கெத்து தான் புடிச்சிருக்கு. நம்ம எந்த வீடு வாங்கலாம் எங்க கார் வாங்கலாம் நம்ம இருக்க போற இடம் எப்படி இருக்கும் எங்க ஹனிமூன் போகலாம் என்று தான் நான் யோசிக்கிறேன் என்று சொல்ல சூர்யா கடுப்பாகிறார்.

மறுபக்கம் மினிஸ்டர் மனைவி அர்ச்சனாவின் ரூமுக்கு மாதவியையும், சுரேகாவையும் கூட்டிப் போகின்றனர். அந்த பெட் ரூம் ஃபுல்லாக சரக்கு பாட்டில் நிறைந்திருக்கிறது. இது அர்ச்சனாவோட பெட்ரூம் தான் மாப்பிள்ளை வெளியே எங்கேயும் குடிக்க தேவையில்லை, வீட்டிலேயே குடிச்சுக்கலாம் நம்மள மாதிரி இருக்கிற ஃபேமிலிஸ்க்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது என்று சொல்லுகிறார்.

அர்ச்சனா சூர்யாவை திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கும் முடிவை சூர்யாவிடம் சொல்லிவிட்டு கீழே கிளம்பி வருகிறார். சூர்யா எவ்வளவு தடுத்தும் நிற்காமல் வந்து திருமணத்தில் சம்மதம் என்று சொல்லிவிட அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் சூர்யா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். உடனே மாதவியின் கணவர் மாப்பிள்ளைக்கு பொண்ணு புடிக்கலையோ என்னமோ என்று சொல்ல சுந்தரவல்லி உடனே கோபப்படுகிறார்.

தேவதை மாதிரி இருக்க பொண்ண யாருக்கு பிடிக்காது சூர்யாவுக்கு பொண்ணு புடிச்சிருக்கு என்று சொல்லுகிறார். உடனே மினிஸ்டர் அப்போ கல்யாண வேலையை ஆரம்பிச்சிடலாம் என்று சொல்லிவிட்டு எனக்கு ஒரு கண்டிஷன் மட்டும் இருக்கு என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில், தேங்காய் வியாபாரி பஞ்சாயத்தை கூட்ட, நாங்க எல்லாம் சாதாரணமான ஆளுங்க அண்ணா எங்கள போய் பழிவாங்கணும்னு நினைக்கிறீங்களே என்று கேட்கிறார் நந்தினி.

மறுபக்கம் சூர்யாவிடம் கல்யாணம் பத்திரிக்கை வந்திருக்கு என்று அம்மா அப்பாவும் சொல்லுகின்றன.

உன் பொண்ணு பஸ்ல பிட் பாக்கெட் அடிச்சது உண்மையா? இல்லையா? என்று நந்தினியின் அப்பாவிடம் கேட்க இல்லை என்ற குரல் வருகிறது. அது யார்? என்ன நடக்கப் போகிறது? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichi serial promo update
jothika lakshu

Recent Posts

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

10 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 day ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 day ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

1 day ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

1 day ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

1 day ago