பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் ‘மின்மினி’ திரைப்படம் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது.
இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015-ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார். அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு ‘மின்மினி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
இந்நிலையில், ‘மின்மினி’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் விக்ரம் தற்போது விக்ரம் 63 மற்றும் 64 ஆகிய படங்களில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண்…