தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் முறையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இல்லாததால் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனர் ஹேமந்த், “இசை நிகழ்ச்சியின் போது நடைபெற்ற அனைத்து விசயங்களுக்கு நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம். சமீப நாட்களாக ஒரு சில பேர் சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமானை தாக்கி பதிவிட்டு வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமானுக்கும் இந்த அசவுகரியங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவரை தாக்க வேண்டாம். மேலும், இந்த இசை நிகழ்ச்சிக்கு பணம் செலுத்தி பங்கேற்க முடியாதவர்களுக்கு மிக விரைவில் பணம் திருப்பி செலுத்தப்படும்” என்று பேசினார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட்டியின் நகலை உரிய இமெயில் ஐடிக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரிபார்த்து அவர்களுக்கான கட்டணத்தை திருப்பி செலுத்தும் பணியில் நேற்றிரவில் இருந்து ஈடுபட்டுள்ளனர்.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…