Mime Gopi Turns Hero New Film Officially Announced
தமிழ் திரையுலகில் தனது இயல்பான மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற குணச்சித்திர நடிகர் மைம் கோபி, தற்போது முதல் முறையாக முழுநீள கதாநாயகனாக புதிய அவதாரம் எடுக்கிறார்.
யுவர்பேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தனது மூன்றாவது திரைப்படத்தில் மைம் கோபியை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறது. விரைவில் தொடங்கவுள்ள யுவர்பேக்கர்ஸ் ஓடிடி தளத்திற்காக பல குறும்படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் சந்தோஷ், இந்தப் படத்தை இயக்குகிறார்.
பெண்களின் பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட வலுவான கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளின் அடர்ந்த காடுகளில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் கிஷோர் ஆதித்யா கூறுகையில், “பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை பேசும் முக்கியமான கதையாக இருப்பதால், சமூக அக்கறையுடன் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தோம். இதுவரை ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ள மைம் கோபியை எங்கள் தயாரிப்பில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…