தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவும் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்கள் மத்தியில் விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் வெகுவிரைவில் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த பலரும் தளபதியுடன் நடித்த அனுபவத்தை நேர்காணல் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நடிகர் ஒருவர் தனது அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் கூறியதாவது : மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பலரும் என்னிடம் வந்து படம் சூப்பராக இருக்கிறது என்று கூறினார்கள்.
அதிலும் மாஸ்டர் படத்தை பார்த்த முக்கிய நபர் ஒருவர் ” இப்படம் தளபதி விஜய்யின் திரை வாழ்வில் உள்ள சிறந்த டாப் 5 படங்களில் முதலிடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகேமே இல்லை என கூறினார் என்று அந்த நடிகர் தெரிவித்துள்ளார்.
இதனை வைத்து பார்க்கும் பொழுது வரும் 2021 பொங்கலுக்கு தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்துகொண்டு இருக்கிறது என தெரிகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…