பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் மாஸ்டர்…. 10 நாளில் 200 கோடி வசூல்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன.

அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அதன்படி 10 நாட்களில் இப்படம் உலகளவில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் வசூல் திரையுலகினர் பலருக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்கள் 200 கோடி வசூல் செய்த நிலையில், தற்போது மாஸ்டர் படமும் அந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

 

Suresh

Recent Posts

விஜயா கேட்ட கேள்வி, வக்கீல் கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

7 minutes ago

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

21 hours ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

21 hours ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

21 hours ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

21 hours ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago