mark-antony-movie-director-interview
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். புரட்சி தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவரது நடிப்பில் அடுத்ததாக “மார்க் ஆண்டனி” திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகியாக நடிகை ரித்து வர்மா நடிக்க எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். டைம் டிராவல் சம்பந்தமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான டீஸர், ட்ரெய்லர், போஸ்டர்கள், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில் இப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஷால் மற்றும் மார்க் ஆண்டனி படக்குழுவினர் அனைவரும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்று சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். அப்போது இப்படம் தொடர்பாக பேசிய இயக்குனர் ஆதிக் இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என பெயர் வைக்க என்ன காரணம் என்பதை கூறியிருக்கிறார் அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரகுவரன் என்றும் ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தில் அவர் நடித்திருந்த மார்க்க ஆண்டனி கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும் அப்பெயரையே தனது படத்தில் தலைப்பாக வைத்து விட்டதாக கூறியிருக்கிறார்.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…