mansoor alikhan talk about jananayagan movie
ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு கொந்தளித்து பதில் அளித்துள்ளார் மன்சூர் அலிகான்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்து இருந்தனர். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்திருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போனது குறித்தும் சென்சார் குறித்தும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் மன்சூர் அலிகான் பேசி இருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது. மதரீதியா பொய் சொல்லிக்கிட்டு நாட்டை நாசம் பண்ணிக்கிட்டு இருக்காங்க இந்த பையன் என்ன பண்ணா? நான் நியாயத்துக்காக குரல் கொடுப்பவன் என்று கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் சென்சாரே வேண்டாம் மக்கள் கையில கொடுங்க அவர் ஒரு மாஸ் ஹீரோ என்ன நடக்குதுன்னு தெரியல கோர்டுங்குறாங்க கேசுங்குறாங்க என்னடா நடக்குது நாட்டுல அந்த ப்ரொடியூசர் எவ்வளவு கோடி செலவு பண்ணி இருப்பாரு அந்த வேதனையில் தான் சொன்னேன் என கூறியுள்ளார். சென்சாரை சென்ட்ரல் மயமாகிட்டால் ரொம்ப கொடுமை என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…