தொடரும் மன்சூர் அலிகான் பிரச்சனை..சம்மன் அனுப்ப முடிவு எடுத்த போலீஸ்

நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மன்சூர் அலிகான் மீது தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் நேற்று பிற்பகல் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 354-ஏ, ஐ.பி.சி. (பெண்களின் உணர்வுக்கு குந்தகம் விளைவித்தல்), 509 ஐ.பி.சி. (பெண்களை இழிவுபடுத்தி பேசுவது) ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த 2 சட்டப் பிரிவுகளும் 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்கக் கூடிய சட்டப் பிரிவுகளாகும். இந்த வழக்கில் மன்சூர் அலிகான் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, ‘மன்சூர் அலிகானிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்ப உள்ளோம். இந்த சம்மன் இன்று அனுப்பப்படும். மன்சூர் அலிகானை போலீஸ் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் பின்னர்தான் அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

மன்சூர் அலிகானின் வீடு நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது. அவரது வீடு இருக்கும் எல்லையில் உள்ள ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார்தான் திரிஷா மீதான அவதூறு கருத்துக்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேட்டி அளித்த வீடியோ மற்றும் அதன் பிறகு அவர் பேசிய வீடியோக்கள் ஆகியவைகளை இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாக போலீசார் கருதுகிறார்கள். வழக்கின் முக்கிய ஆவணங்களாக மன்சூர் அலிகான் பேசியுள்ள இந்த ஆடியோக்களை சேர்க்க உள்ளனர்.

இதற்காக அவர் பேசிய வீடியோக்களையும் போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது இந்த வீடியோக்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர் சங்கம் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில், போலீசார் அவர் மீது வழக்கு போட்டிருப்பதால் அவர் மீதான பிடி இறுகியுள்ளது.

Mansoor alikhan issue Latest update
jothika lakshu

Recent Posts

Kattalan Tamil Trailer Cubes

Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…

6 hours ago

“நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரம்!” – விக்னேஷ் சிவன் சிரிப்பூட்டும் பகிர்வு

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல தம்பதிகள். இவர்களுக்கு தற்போது இரட்டை…

6 hours ago

‘ஜனநாயகன்’ சர்ச்சைக்கு பின்… ரஜினியின் ‘ஜெயிலர் 2’ காட்சிகளும் கசிவு!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழுக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத்…

6 hours ago

ரூ.1 கோடி இழப்பீடு வழக்கு: தமன்னாவின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல்…

6 hours ago

அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ மீண்டும் திரையரங்கில்!

நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘பில்லா’ (2007), மீண்டும் ரசிகர்களை கவர திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது.…

6 hours ago

Vaadaa Thondaa Video Song

Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…

7 hours ago