Manisha Yadav tests positive for COVID-19
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய பேர் சொல்லும் படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை.
இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் கடந்த 2017-ம் ஆண்டு அவர் தனது காதலரை திருமணம் செய்துகொண்டார். கடந்தாண்டு இவர் நடிப்பில் ‘சண்டிமுனி’ திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் தனிமைப்படுத்திக் கொண்டேன். விரைவில் குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது, மற்றபடி எந்தவித பிரச்சனையும் இல்லை. அனைவரும் வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்” என அறிவுறுத்தி உள்ளார்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…