தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து இருப்பார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து மாளவிகா மோகனன் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். முன்னணி இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ள இவருக்கு இப்படத்திற்காக ரூபாய் 5 கோடி சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக திரையுலகில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நயன்தாராவே தற்போது தான் 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
இந்த நிலையில் மாளவிகா மோகனன் அவரை விட அதிகமாக அதாவது ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி உள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு தன்னுடைய மார்க்கெட் கிடுகிடுவென இருக்கிறோம் என மாளவிகா போட்ட கணக்கு கொஞ்சமும் தப்பவில்லை என முணுமுணுக்கிறது கோலிவுட் வட்டாரம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…