சர்ச்சைக்குரிய கேள்வி கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பொழுது பலவிதமான கேள்வி எழுப்பப்பட்டது.

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அதில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில் தனுஷ் உடனான படுக்கையறை காட்சியை எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, கடுப்பான மாளவிகா உங்கள் மண்டைக்குள் மோசமான எண்ணம் உடைய இடம் இருக்கிறது என காட்டமாக பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

malavika mohanan about fan question
jothika lakshu

Recent Posts

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

11 hours ago

கருப்பு : ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

20 hours ago

நெகட்டிவ் விமர்சனங்களால் வருத்தப்பட்டுள்ளேன்.. நடிகை ஸ்ரீலீலா வேதனை..!

விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…

21 hours ago

மூக்குத்தி அம்மன் 2 முற்றிலும் வேறுபட்ட படம்.. ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்.!!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…

21 hours ago

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

2 days ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

2 days ago