விவேக்கிற்கு பதிலாக இந்தியன் 2 படத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இரண்டு வருடங்களாக கிடப்பிலிருந்த இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கியுள்ளது.

சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் படத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதாவது முதலில் இந்த படத்தில் ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியுள்ள ரவிவர்மன் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதோடு இந்த படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்த காரணத்தினால் அவருக்கு பதிலாக குரு சோமசுந்தரம் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


major-changes-in-indian-2
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago