mahesh-babu latest speech-goes-viral
“இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குண்டூர் காரம்’. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
‘குண்டூர் காரம்’ திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு பீடி குடித்தது சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், \”குண்டூர் காரம் திரைப்படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிட்டது. பின்னர் தான் இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். அது நன்றாக இருந்ததால் படம் முழுவதும் பயன்படுத்தினோம். நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்\” என்று கூறினார்.”,
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…