maayon-chapter-2-poster update
தமிழ் சினிமாவில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் கதை திரைக்கதை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாயோன்.
இந்த படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை தமிழ் சினிமா பார்க்காத கதையாக இருப்பதாக மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மாயோன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது அதை நானே இயக்கலாம் என முடிவு எடுத்து இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
அதன்படி மாயோன் சேப்டர் 2 படத்தின் புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் இந்த படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் இடதுபுறம் போகர் சிலை நடுவில் நவபாசன சிலை வலது புறம் இயேசு நாதர் சிலை இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் போஸ்டரில் ஆங்காங்கே வேல் இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இது எந்த மாதிரியான கதை? முதல் பாகத்தில் பெருமாள் பற்றி பேசி இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் முருகனை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளதா என்ற பல்வேறு கேள்விகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் படத்தின் போஸ்டரில் நடிகர்கள் டெக்னீசியன்கள் என யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. இதனால் இந்தப் படம் பெரிய நடிகர்கள் மிகப் பிரபலமான டெக்னீஷியன்களை கொண்டு உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் மாயோன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் தொடர்ந்து மூன்றாம் பாகம் என அடுத்தடுத்து பாகங்கள் வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc