maaveeran-movie-director-latest-interview
கோலிவுட் திரை உலகில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று மாவீரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழில் மாவீரன் என்றும் தெலுங்கில் மாவீரடு என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது.
இதில் கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படம் குறித்து பகிர்ந்திருக்கும் சுவாரசியமான தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், தான் இந்த படத்திற்காக எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை, தான் உருவாக்கிய கேரக்டரில் சிவகார்த்திகேயன் சிறப்பாக பொருந்தி இருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்காக தான் எதையும் மாற்றவில்லை அதை அவரும் என்னிடம் கேட்கவில்லை. சிவகார்த்திகேயன் என்றாலே அப்படத்தில் நிறைய காமெடி இருக்கும் ஆனால் இதில் அவருக்கு காமெடியே கிடையாது.அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டுமே காமெடி செய்வார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சின்ன சின்ன ஆலோசனைகளை கூறியதாகவும் அது படத்திற்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…