Categories: Movie Reviews

மாறன் திரை விமர்சனம்

மாறன்
நடிகர்: தனுஷ்
நடிகை: மாளவிகா மோகனன்
இயக்குனர்: கார்த்திக் நரேன்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
ஓளிப்பதிவு: விவேகானந்த் சந்தோஷம்

சிறுவயதில் தாய், தந்தையை இழந்த நாயகன் தனுஷ், தனது தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டுடன் தாய்மாமா ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார். தனுஷின் தந்தை ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக இருப்பதால் ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுகிறார்.

தந்தையை போலவே நேர்மையான பத்திரியாளராக இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரக்கனி செய்யும் தவறுகளை கண்டுபிடித்து பத்திரிகையில் எழுதுகிறார். இதனால் கோபமடையும் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்க நினைக்கிறார்.

இறுதியில் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்கினாரா? சமுத்திரகனியிடம் இருந்து தனுஷ் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

விமர்சனம்

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், முதல் பாதியில் இளமை துள்ளலுடன் கெத்தானா நடிப்பையும், இரண்டாம் பாதியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதுவான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக தங்கை பாசத்தில் பளிச்சிடுகிறார்.

நாயகியாக வரும் மாளவிகா மாடர்ன் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் துறுதுறு நடிப்பால் பளிச்சிடுகிறார். அரசியல்வாதி சமுத்திரக்கனி, தாய்மாமா ஆடுகளம் நரேன், தந்தை ராம்கி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார் அமீர்.

விமர்சனம்

பத்திரிகையாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். அண்ணன், தங்கை பாசம், அப்பா, மகள் பாசம், திரில்லர் என கலந்து திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். ஆனால், திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் பயணிப்பது பலவீனமாக அமைந்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பொல்லாத உலகம் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘மாறன்’ பெரிய மாற்றம் இல்லை.

Maaran Movie Review
jothika lakshu

Recent Posts

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள்..!

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

4 hours ago

தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…

9 hours ago

மதராசி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

10 hours ago

சிம்பு 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்கள்.!!

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

10 hours ago

மனோஜ் சொன்ன வார்த்தை, மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

14 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சூர்யாவிடம் நந்தினி சொன்ன விஷயம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

14 hours ago