ரஜினிகாந்த் சென்னையில் மேன்சன் நடத்தி வருகிறார். விசாகப்பட்டினத்தில் உள்ள இவரது நண்பர் சத்யராஜ் இறந்ததாக தகவல் அறிந்து அங்கு செல்கிறார். சென்ற இடத்தில் சத்யராஜ் இயற்கையாக சாகவில்லை என்றும் யாரோ ஒருவர் சத்யராஜை அடித்து கொலை செய்து இருப்பதாகவும் ரஜினி தெரிந்துக் கொள்கிறார். தன் நண்பனை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க நினைக்கிறார் ரஜினி. இறுதியில் சத்யராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக செய்தார்கள்? அவர்களை ரஜினி பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ரஜினிகாந்த், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். நண்பனுக்காக பழிவாங்க துடிப்பது, கொன்றதுக்கான காரணத்தை தேடி அலைவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் நாகார்ஜுனா. இவரது உடை, நடை அனைத்தும் ரசிக்க வைக்கிறது. சௌபினின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அடியாளாகவும், நல்லவன் போல் நடித்து வில்லனாகவும் அசத்தி இருக்கிறார். சத்யராஜ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது மகளாக வரும் ஸ்ருதி ஹாசன் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். சார்லி, காளி வெங்கட், கண்ணா ரவி, லொள்ளு சபா மாறன், ரெபா மோனிகா, மோனிஷா பிளசி என அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

நண்பனுக்காக பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கும் திரைக்கதை போக போக வேகம் எடுக்கிறது. பல காட்சிகளில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ் வைத்து ரசிக்க வைத்து இருக்கிறார். பல கதாபாத்திரங்களின் எண்ட்ரியும் அவர்களின் நடிப்பும் வியக்க வைக்கிறது. கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் படத்தில் இருக்கும் அனைத்தும் அம்சங்களும் வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்.

அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து இருக்கிறது.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பல காட்சிகளில் பளிச்சிடுகிறது.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

coolie movie review
jothika lakshu

Recent Posts

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

13 hours ago

Rathatha Thaa Lyrical Video

Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…

13 hours ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…

14 hours ago

சூர்ப்பனகையாக நடித்தது ஏன்?… ரசிகையின் கேள்விக்கு மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்!

இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…

14 hours ago

‘வாரணாசி’ படத்தில் டைம் டிராவல்… ராஜமௌலி பகிர்ந்த மிரட்டல் அப்டேட்!

'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது நடிகர்…

14 hours ago

அஜித்தின் 64வது படத்திற்கு ‘டேர் டெவில்’ என தலைப்பு… தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி!

நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்…

15 hours ago