LYCA Productions donates Rs.1 Crore for FEFSI
கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் திரைத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் பல லட்ச குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது.
பிரபலங்கள் பலரும் உதவி செய்துவரும் நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இப்பொழுது 1 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக ஃபெப்சியில் அளித்துள்ளது. பல பிரம்மாண்ட மற்றும் தரமான படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது லைகா புரோடக்ஷன்.
சிறிய பட்ஜெட் முதல் பிரம்மாண்ட படைப்புகள் வரை பல படைப்புகளை தொடர்ந்து உருவாக்கி கொண்டிருக்கும் லைகா ஃபெப்சி நிறுவனத்திடம் கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளது. கடந்த சில மாதமாக கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் படப்பிடிப்புகள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் திரைத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்க நடிகர்,நடிகைகள் உதவ முன்வந்தனர்.
இந்நிலையில் லைகா சேர்மேன் அலில்ராஜா சுபசேகரன் 1 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார். அதற்கான காசோலையை லைகா நிறுவனத்தை சேர்ந்த தமிழ்குமரன், நிருதன், கௌரவ் ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஃபெப்சி தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இடம் காசோலையை ஒப்படைத்தனர்.”
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…