love today movie review
நாயகன் பிரதீப்பும் நாயகி இவானாவும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள். இவர்கள் காதல் விஷயம் இவானாவின் தந்தை சத்யராஜ்க்கு தெரிய வருகிறது. பிரதீப்பை அழைத்து, இவானாவும் நீயும் ஒருநாள் செல்போனை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். முதலில் மறுக்கும் பிரதீப் பின்னர், இவானாவின் செல்போனை மாற்றிக் கொள்கிறார். செல்போனில் இருக்கும் மெசேஜ்களை படிக்கும் பிரதீப் அதிர்ச்சி அடைகிறார். அதேபோல், பிரதீப்பின் செல்போனில் இருக்கும் பதிவுகளை பார்த்து இவானாவும் அதிர்ச்சி அடைகிறார். இதனால் இருவருக்கும் சண்டை, பிரச்சனைகள் ஏற்படுகிறது. இறுதியில் பிரதீப், இவானா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? இருவருக்குள் என்னென்ன பிரச்சனைகள் வந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரதீப், திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், பாசம், சென்டிமென்ட் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் இப்படத்தை இயக்கியும் வெற்றி பெற்று இருக்கிறார். குறிப்பாக இவானாவின் மெசேஜ்களை பார்த்து கேள்வி கேட்கும் போது, ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குகிறார். நாயகியாக நடித்திருக்கும் இவானா, அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ரெஸ்டோரண்ட் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவானாக்கு இது பெயர் சொல்லும் படமாக அமைந்து இருக்கிறது. இவானாவின் தந்தையாக நடித்திருக்கும் சத்யராஜ் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். பிரதீப்பின் தாயாக நடித்து இருக்கும் ராதிகா, தற்போது இளம் தலைமுறையினரின் தாயாக பிரதிபலித்து இருக்கிறார். யோகிபாபு மற்றும் ரவினா ரவியின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரதீப். கதைக்கு ஏற்ற தலைப்பை வைத்து இருக்கிறார். தற்போது இருக்கும் இளம் தலைமுறையினரின் காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரதீப். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது. மொத்தத்தில் ‘லவ் டுடே’ ஜாலியான லவ்.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…